குளங்கள்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

அம்ாிதா ஏயெம்


பல கடல்கள் சேர்ந்தது சமுத்திரம். சமுத்திரம் கப்பல் சுமந்தது. நாகாிகம் நொண்டி, கலாச்சாரம் தவண்டு வந்த ஒழுங்கையானது. மொழி நடந்து, மதம் ஒடி வந்த பாதையானது. கடல் நாகாிகம் தந்தது. கலாச்சாரம் தந்தது. மொழி தந்தது. மதம் தந்தது. பூர்வீகம் அழித்தது. பிாிவினை தோற்றுவித்தது. யாதுமாகி அனைத்தையும் அளித்து, அழிவினையும் அளித்தது. இத் தேசத்தில், பல மன்னர்களினதும், முதலாவது பிரதம அமைச்சாினதும் பெயாிலுள்ள குளங்களை சமுத்திரங்கள் என்று பெயாிட்டு அழைத்ததால் தருக்கத்தனமாக சமுத்திரங்கள் குளங்கள் எனப்பட, இங்கிருந்தே சிதைவுகளும், திாிபுகளும் ஜனனிக்கத் தொடங்கின.

கபிலவஸ்த்துவில் பிறந்த இளவரசன் பகவானாகி பின் மரணப்படுக்கையில் இருந்த வேளையில் அடக்கமில்லாமல் நாட்டுமக்களுக்கு சொல்லொணா கொடுமைகளையம், தூ;நடத்தைகளையும் பூிந்து வந்த பேரரசனின் மகனுக்கும், எழுநூறு தோழர்களுக்கும், பாதுகாப்பளிக்கும்படி மழைக்குப் பொறுப்பான தேவனிடம் ணையிட்டார். அவர் அதை காத்தற் கடவுளிடம் ஒப்படைக்க, அவர் தவ வேடம் பூண்டு அரசன் மகன் ~~அன்கோவிற்கு|| மந்திர நூல் கட்டி, நாயும் குவேனியும் காட்டி, குவேனி கட்டி, அன்றிரவே சிறிசவத்து நகா; திருமணம் காணவந்த பூர்வீக நாகா;கள் அனைவாினதும் கதை முடித்து, அவர்களின் சவ மேட்டின் ஒவ்வொரு இடத்திலும் குடியேற்றங்கள் அமைத்தனர்.

*

அந்த வண்டி கண்ணீர் வடித்து ஓடிக்கொண்டிருந்தது. நெற்றியால் வடியும் நீர்த்தாரை, முன் கண்ணாடியின் ஒரு புள்ளியில் தேங்கி, கனவளவு கூடி, ஈர்ப்பு விசை தாங்காது இரு கிளையாய்ப் பிாிந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. ~~அழ வேண்டாம்.. அழ வேண்டாம்|| என்று சின்னப் பிள்ளை கை காட்டுவது போல் அல்லது அழுதல் தடை என்பதற்காகவோ இரண்டு வைப்பர்களும் டாட்டா, காட்டிக் கொண்டிருந்தன. மழை இன்னும் விட்டபாடில்லை. நூலிழைகளாயும், கயிறுகளாயும், கூழாங்கற்களுமாய் நிலத்தை தொட்டுக் கொண்டிருந்தது. தலையைத் திருப்புகிறேன். அவசர அவசரமாய், காட்சிகள் ஒவ்வொரு பிறேமாய் ஒளி ஓவியமாகி, விழித்திரையில் பதிவாகி, வேகமாய் நகா;ந்துகொண்டிருந்தன, மழை விடுதலைத் தவிர. குளங்களின் ய்விற்கான ஒவ்வொரு வார முன்னூறு மைல் பயணத்தின், இன்று இந்த வாரப் பயணத்தின் இடையில் மழை. மீண்டும் மழை. பயிரும், மரமும், இரத்தமும், சீழும், வாந்தியும், கண்ணீரும் நீர் கொடுக்க மழை. இன்றும் இரு கண் நிறைய மழை. தண்ணீர் தேசத்தில் மழைக்கென்ன பஞ்சம். மழையெனப்படுவது வெயில் நீருலர்த்தி மேகமுறுஞ்சிய பின் பெய்வது. நீரெனப்படுவது அதனால் எங்கும் நிறைந்தது. நெளிந்து, ஊர்ந்து சென்று கிடைக்கும் இடத்தின் வடிவம் பெற்று யாதாகவோ பெயர்ச்சொல்லெடுத்து அதைத் திாிபுக்குள்ளாக்குவது.

எங்கிருந்தோ சாய்கோணமாய் கத்திப்பாடாய் வந்த தென்மேற்குக் காற்று வண்டிக்குள் மழைத் துளியை என் கரத்தில் விழ வைத்து, தோலின் நீர்வட்டப் பகுதியை வெளிறவைத்து, மயிர்க்கால்களை ஒரு கணம் நிமிர வைத்தது. சில்லிடல் என்றால் என்னவென்று பிரக்ஞை அகராதிக்கு கருத்தேற்றம் செய்து பார்த்தது. மழை தூறல்களாகி, பின் துளிகளாகி பூமியில் விழும். பின் ஓடும். மடுவென்றால் தங்கும். தேங்கும். கொஞ்சக் காலம் வற்றாமல் போனால் குளங்களை உருவாக்கும். குளங்களை வரைவிலக்கணப்படுத்த முயன்றுதான் கொண்டிருக்கிறேன். பாசைகளின் பலவீனத்தில் என் கரடு முரடு பள்ளம் படுகுழி நினைவு வெளிகளில் குளங்கள் தேங்கமாட்டேன் என்று மறுத்தன. குளங்கள் எவ்வளவு தூரம் அடிபட்டுப் போகின்றன. குளங்கள் அடிபட்டதும், அடிபட்டுக் கொண்டிருப்பதும் பாசைகளால்தான். தமிழில் குளம். சிங்களத்தில் வெவ. ங்கிலத்தில் ரேங்க். கண்டவைகளும் குளங்களெனப்படாது. குளமெனப்படுவது குறிப்பிட்ட பரப்பிற்கு மேல் இருக்க வேண்டும் என்கிறார் எனது பேராசிாியர். ஓரு வேளை கால நதி வெள்ளத்தில் அணையுடைந்து உடைப்பெடுக்காமல், தூர்ந்து போகாமல் இருப்பதற்கு இந்தப் பரப்பு உதவுமோ என்னவோ தொியாது. இவைகளை ~~றிசவொயர்|| என்றுதான் சொல்லவேண்டுமாம் என்கின்றார் எனது பேராசிாியர். குளம் என்பதன் அர்த்தங்கள் என்னை நிர்ப்பிரக்ஞை க்க முயற்சித்து வியப்புக்குள்ளாக்குவதை உணர்கின்றேன். எது எப்படியோ அர்த்தப்படுத்தல் அர்த்தமிழந்து போனாலும், பரப்பு, கனவளவு தாண்டி நீர் என்பது நனைத்தலையும், அமிழ வைத்தலையும் செய்கிறது என்றுணர்கிற வேளை எங்கோயிருக்கம் காண்டாமணியின் கடைசியோசையின் கடைசி நேரத்தின் வெளிக்குள் தங்கிப் போன ரீங்காரம். மணியோய்ந்த பின்னும், இன்னும் இன்னும் இருப்பது மாதிாியான நெருடல் என்னுள்ளே படரத் தொடங்குகிறது.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வேன் தன் ஒளியிழந்த இரு கண்களாலும் நோக்கியவாறு ஓரு குளத்தை நெருங்கத் தொடங்கியது. சிறிய அலைகள் கரையில் புரளத் தொடங்கின. இந்தக் குளம் பொத்குல் விகாரைக்குள் அல்லது பத்து ரூபா தாளில் பொிய பராக்கிரமங்கள் செய்தவனி;ன் குளம். அவன் நிமிர்ந்து நின்றான். கையில் வாளைத் தேடினேன். காணவில்லை. புத்தகம் போன்று கருங்கல்லால் இரு கையிலும் ஏந்தி நின்றான். வாளைக் காணவில்லை. குளத்திற்குள் பாய்ந்தேன். மூச்சடக்கினேன். அடிக்குப்போனேன். வாளைத் தேடினேன். எங்கேயும் காணோம். அப்போது சிவப்பாய் ஒளி அடித்தது. ஒளி வந்த திசை பார்த்தேன். தேடிய வாள் தொிந்தது. யிரம் வயதுடைய வாள் தொிந்தது. வாளில் இருந்த இரத்தக் கறைகள் அவனி;ன் சித்தப்பாக்கள், தம்பிக்களினது மாதிாிப்பட்டன. சோழனைத் துரத்தி, பின் மீண்டும் அவன் மண் பிடிக்க, பின் மீண்டும் துரத்திய வாள். எதிாிக்கு எதிாி நண்பன் என்;று பாண்டியனுக்கு மாமியை தாரை வார்த்த வாள். அயல்நாட்டு அந்நியனையும் புகுந்து வெட்டிய வாள் இரத்தக் கறையொடு கிடந்தது. எடுக்கலாமென்று அருகே போனேன.; வாளைக் காணவில்லை. மண்ணொடு மண்ணாகி கரைந்திருக்குமோ ? அறத்திற்காகவென்றால் வாள் துருப்பிடிக்காமலிருந்து கிடைத்திருக்கும். கண்ணுக்கு தொிந்த வாள் இப்போது தொியவில்லை. பிரமையோ என்னவோ ?. பின் கரையேறினேன்.

எனது ஜோ;மன் நாட்டு சிாியனின் குரங்குத் தோப்பின் யிரத்து முன்னூறு வானரங்களில் பதின்மூன்று முழுவதும் கருங்கல்லாலான சிவன் கோயிலில் குதித்து விளையாடின. சிவன் கோவில் ட்ரூப் என பெயாிடலாமென எண்ணினேன். மூத்த குரங்கு கோயிலுக்கு முன் வைத்த அறிவித்தல் பலகையை உதைத்து விட்டு, குளக்கட்டுப் பக்கம் ஓட தலைவன்வழி நோக்கி மற்றெல்லோரும் ஓடினார்கள். அறிவித்தல் பலகையைப் பார்த்தேன். வரலாறு இன்னும் அறியப் படவில்லை என்று சர்வதேச மொழியிலிருந்தது. கண் முன்னே எழும்பிக் கொண்டிருந்த முட்டை வடிவ ச்சிரமத்திற்கு வரலாறு இருந்தது. சோழனினதும், இந்தியக் கூலிப்படையின் வணங்குதலுக்குமான யிரம் வருடங்களுக்கு முன்னான இறந்த வரலாற்றை நிகழ்காலம் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டது. ஏப்பம் நச்சாய் மணத்தது. வயிற்றை குமட்டியது. குமட்டிய காற்று கீழ்ப்பக்கத்தால் வந்து மோதி குமிழிகளுண்டாக்கி முடிந்து போனது. நெற்றியைத் தேய்த்துக் கொண்டது குளம். இந்தக் குளம் மடுப்புக் குளம். தலைகீழாய் செம்புக் குடம் தாட்டு அதில் அரைவாசியை வாழால் அறுத்த வடிவ அமிழ்தினுமினிய மொழி பேசிய கைதிகளைக் கொண்டு கட்டுவித்த தெமழமகாசாய குளத்தில் பிம்பமாய் அலைந்து திாிந்தது. பின் எழுத்துக்களாய் தொிந்தது. வாசித்தேன். இது அடக்கு முறைக் குளம். பிக்குகள் லோசனை, தமிழ்க் கைக்கூலிகள், அண்டைநாட்டுப் படை, தமிழ்க் கைதிகள், போினவாதங்களின் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னான குறியீடுகளுக்கான குறிப்பான்களை தந்த குளம் இந்தக் குளம். புதைபொருள் புனிதக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பால்நகையில் கடலில் வந்துதித்த சோழமண்டலத்துச் சைவன் கரம் பற்றி அவனுடன் கோணேசர் கோயிலுக்கு நித்திய நைமித்தியங்களுக்கும், பூசைகளுக்கும் ஒழுங்காக நெல்கிடைக்க பஞ்ச பூதங்கள் கொண்டு குளம் கட்டிய சதூ;வேத மங்கலம,; பிற்காலத்தில் கோணேசர் கோயில் அழிக்க வந்த கஜபாகு கண்ணிழந்து, பின் பார்வை பெற்று, பின் கண் தளை கந்தளாயாயின. மகாசேனனும் சுயம்புவான கந்தளாவேயும் இரண்டாம் அக்கபோதியும் சில வறட்டு வரலாற்று ணங்காய்ச்சி பேராசியர்களும் சேர்ந்து டக செளந்தாியை கொன்றார்கள். குளக்கோட்டனை விரட்டினார்கள்;. குளத்தை உடைத்து மோட்சத்தில் இருந்து கல் கொண்டு வந்து புதிதாய் குளம் கட்டினார்கள். வெயில் வேண்டி நேரும் சிவப்புப் பட்டும், மழை வேண்டி நேரும்; பச்சைப் பட்டும், கட்டளைப் பிள்ளையாரும், பத்தினியம்மனும் இவர்களிடமிருந்து ஒழித்துக் கொண்டதால் இன்றும் உயிரோடு வாழ்கின்றன. அக்ரபோதி தடியெடுத்தான். குளக்கோட்டனி;ன் கல்லறையை தேடிக்கொண்டிருந்த பேராசிாியர் பரணவிதானவையும் கொன்றான். சர்வம் சக்தி மயம் மாதிாி அக்ரபோதி மயமானது. கோயிற் கிராமம் கோவில்கம வாகியது. கந்தளை மெல்ல மெல்ல அழுகத் தொடங்க அதன் அழுகல்களை உரங்களாக்கி அக்ரபோதிகளும், அக்போபுரக்களும் முழைக்கத் தொடங்கின. தமிழர்கள் மண்ணுக்குள் கரையத் தொடங்கினர். கரைந்த ஒவ்வொரு இடத்திலும் மற்றோர் கிளைவிட்டு முளைத்தனர். இருபது வருடங்களுக்கு முன் நிரப்பமாய் தமிழ்பேசி மீன்பிடித்த இடத்தில் இன்று, இருநூறு போில் இருவர் தமிழ் பேசினார்கள்;. இயற்கையும்; செயற்கைகளோடு சதி செய்து, அதில் ஓருவனை சமீபத்தில் குளத்தால் விழுங்கச் செய்து கொன்றது. இந்தக் குளம் க்கிரமிப்புக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இப்போது தொடராக இரு குளங்கள் வந்தன. முதலாவது குளம், மகாசேனைகள் கொண்டு நடாத்தியவன் கட்டிய குளம். சங்கமித்தவின் கயிற்றை விழுங்கி மகாயானத்தையும,; தேரவாதத்தையம் மோதவிட்டு சேனைகள் ஓட்டி, கட்டியவன் குளம். று தென்னிந்திய க்கிரமிப்பாளர்களினால் பாதிக்கப்பட்டவன் கட்டிய குளம். அமைதியாக இருந்த அந்தக் குளம் மலைகளுக்குள் நுழைந்து இருந்தது. குளக் கரையில் தியான நிலையில் வலது கையை உயர்த்திய வண்ணம் தாமரையின் மேல் தொலுவிலவில் நி;ற்பது போல அறுபதுஅடி உயரத்திற்க அதிகமாக நின்று ~~நாட்டவிழி நெய்தலடிப்|| பார்வை பார்த்து நின்று கொண்டிருந்தார். மேலுயர்த்தி கொஞ்சம் பார்க்கச் சொன்னேன். அவர் பார்க்கவில்லை. ஓரு வேளை கேட்கவில்லையோ, ? நான் அவரைக் கவனிக்;காத நேரத்தில், பார்க்கச் சொன்னதை பார்த்து விட்டு கிழே பார்வையை தாழ்த்திக் கொண்டதை உணர்ந்து கொண்டேன். அவர் பார்த்த இடத்தில் இரண்டு பீரங்கிக் குழாய்கள் நீட்டிக் கொண்டிருந்தன. பக்கத்தில் அறிவித்தல் பலகை வேறு. ~~ஹோம் ஒப் இன்பான்றி||- (குஞ்சுகளின் கூடு) என்று. எவ்வளவு பொருத்தமான ஒலியன்களின் பெயர்ப்புக்கள். ஓவ்வொரு வார இறுதி நாட்களிலும் குஞ்சுகள் இந்தக் குளக்காட்டு கரை வழியே ~~வம-தகுண|| சொல்லி வலது கால் மிதி வெடி- இடது கை சன்னவெடி என்று மந்திரம் சொல்லி அணி வகுத்து சமாதானம் தேட பழக்கப்படுத்தப்படுவார்கள். பின் குளம் வெள்ளை நீரை, கொஞ்சம் பச்சையுடன் வடக்கு நோக்கி அனுப்ப மீண்டும் அது சிவப்பு வெள்ளத்துடன் திரும்பி குளத்துக்கு வரும். திரும்பி வரும் நீருக்கு நிறமூட்ட மீண்டும் இன்னொரு ஜெனறேசன் வம-தகுண களுடன் தயாராகும். னான சந்திரமண்டலத்திலேயே தேத்தண்ணிக் கடை வைத்திருக்கும் அந்த இனத்திற்கு ஒரு அங்குல காணி வாடகைக்கேனும் கொடுக்;காத குளம் இந்தக் குளம். குள்ளக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இந் நாட்டின் முதலாவது பிரதம அமைச்சாின் பெயர் உள்ள குளம் வந்தது. சிற்றின மக்களின் காணிகளில் போினமக்களுக்கான குடியேற்றம் என துளி கூட அரசியல் நாகாிகம் கருதிய பயம் கூட இல்லாமல் ங்கிலத்தில்; அறிவித்தல் பலகை அடித்து கட்டிய குளம் வந்தது. சிற்றின மக்களை சிறுபான்மையாக்கிய குளம் வந்தது. குளம் கட்டி முடிய உடைப்பெடுத்து பிராவகமாய் வெளியேறியது. நீர் மட்டுமல்ல. கூடவே சேர்த்து போினமும்தான் சிற்றின கம்பு, கட்டை, தூசிகளை கடல்வரை ஒதுக்கி சென்று வந்தன. கரையோரங்களில் விட்டன. இந்தக் குளம். அராஜகக் குளம்.

வேன் வேமாகப் ஓடிக் கொண்டிருந்தது. குளத்தில் மரக்கட்டைகள் இருந்தால் படகு மெதுவாகப் போகும். கல்லிருந்தால் கவனமாகப் போகும். சேறும், சகதியும் என்றால் சுற்றி வளைத்துப் போகும். அந்தக் கிராமம் வெறிச்சோடியிருந்தது. முக்காடு போட்டு வாழ்ந்த பெண்களும், தொப்பி போட்டு வாழ்ந்த ண்களும்; அல்லது சட்டை, பாவாடை போட்ட பெண்களும் அல்லது சாரன் உடுத்த ண்களும் அப்போதுதான் ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு முன்னால் வாழ்ந்த அடையாளங்கள் தொிந்தன. கதவுகள் திறந்து கூரைகள் இடிந்து, புதா;கள் மண்டி… அப்போதுதான் ஞாபகம் வந்தது. முதலாம் சேவல் கூவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் சுற்றி வளைத்து கத்தி துப்பாக்கி கொண்டு வளைத்து, அடியோடு முடிவரை களைந்து மக்கள் இல்லாமலாகிப் போன குளம். இந்த இரத்தச் சேறு குளத்தை படகு வேகமாகமாகவும், அனுதாபத்துடனும் தாண்டியது. இந்தக் குளம். பாதகக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வெயில் உச்சிக்கு எறிக்கத் தொடங்கியது. கானல்நீர்க் குளத்தில் கிடுகால் வேயப்பட்ட கூரைகள் கொண்ட படகுகள் தொியத் தொடங்கின. காலம் காலமாக பரம்பரையாக பிறந்து, வாழ்ந்து, இறந்த இடங்களை விட்டு இரவோடிரவாக உடுத்த உடையுடன் துரத்தப்பட்ட முக்கால் இலட்சம் முகம்மதியர்களின் முப்பது படகுகள் தொிந்தன. படகு மக்கள் எனப்படுவோர் இவர்கள்தானோ ? வியட்னாமியர்களுக்குப் பிறகு. படகுகளின் குளத்தை எனது படகு நெருங்கியது. ஓவ்வொரு குடிசைகளிலும். முக்காடு போட்ட குமர்கள் தொலைந்து போன தங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நீருக்குள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்ட பெருமூச்சுகள் குளத்தின் ஒரு புள்ளியில் பட்ட வேகமாய் விட்டமாய் விாிந்து, என் மனதைத் தாக்கியது. அது குறுக்கலை இயக்கமா ? நெடுக்கலை இயக்கமா ? என்று யோசித்தேன். குறுகிய இயக்கங்களினால் நெருக்கப்பட்டவர்களின் இயக்கங்கள் என்பது மட்டும் நிஜமென்று மனதிற்குப்பட்டது. அவர்களின் எதிர்காலம் குளங்கள் காய்ந்த பின்தான் கிடைக்குமென்றால் அது பகற்கனவு, அவர்கள் கண்ணீரையும் சேர்த்து குளத்தை வற்றவி;டாமல் இருப்பதால். மனதின் பாரம்மாட்டாது படகு இறங்கியது. சுயம் இழந்துபோன விடியலின் மக்களின் குளம். இந்தக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பொிய பள்ளம் தொிந்தது. எப்போதோ தாறுமாறாய் தார் ஊற்றி, கல்லுப் போட்டு, கண்ணி வெடியின் பின் தோன்றிய பொிய பள்ளத்தை நிரப்ப மண்ணுக்கும் கல்லுக்கும் தட்டு;ப்பாடு வர முப்பது மனிதா;கள் போட்டு மூடிய கள்ளக் குளம். இந்தக் குளத்தில் படகு மூன்றாவது கியருக்கு மாறி வேகம் குறைத்து ஓடத் தொடங்கியது. குமுதினிப் படகு, குருநகா;, கொக்கட்டிச் சோலை, மைலந்தனை, குமாரபுரம், புத்திரங்கொண்டான் குளங்களின் ஓடியது மாதிாி படகு ஓடியது. இந்தக் குளம். கொலைகாரக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கட்டடத்திற்கு வெளியேதான் குளங்களைக் கண்டு கொண்டு வந்தேன். இந்தக் குளங்கள் வித்தியாசமான குளங்கள். குளங்களுக்கான நீருக்காக, தொழுகையிலீடுபட்டவர்கள் துப்பாக்கி சன்னங்களினால் சிறியோா,; இளையோர், வயோதிபர் என்ற விதியாசமின்றி உடம்பைக் கிழித்து கொடுத்தார்கள். குளம் நிரம்பத் தொடங்கியது. கணுக்கால் வரை நிரம்பியது. வெள்ளம் போட்டது. கொல்லப்பட்டவர்களி;ன் தொப்பிப் படகுகள் மிதக்கத் தொடங்கின. செங்குருதிச் சிறு துணிக்கை, வெண்குருதிச் சிறுதுணிக்கை மீன்கள் ஓடித் திாிந்தன. சுிறுதட்டுத் தவளைகள் வயிறு பெருத்து வெடித்து உடையத் தொடங்கின. பின் உறையத் தொடங்கின. இந்தக் குளம் இரத்தக் குளம.; காட்டுமிராண்டிக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. மக்காவிலிருந்து புனித ஹஜ் கடமையை முடித்து திரும்பிக் கொண்டிருந்த தொண்ணூறு ஹாஜிமார்களை அவர்களின் ஊரை அடைவதற்கு இன்னும் பத்து கிலோமீட்டரே இருக்கும்போது, நிலமீட்புக்கு அவர்கள் அவ்வளவு பேருமே தடையாய் இருந்ததுபோல, ஜனநாயக ரீதியில் அவர்களுக்கான குழிகளை அவர்களையே கொண்டு வெட்ட வைத்து, மனிதாபிமான ரீதியில் கடைசி நேரத்தொழுகையை தொழ அனுமதித்து, ஒவ்வொருவராய் துப்பாக்கிகளினால் முத்தம் கொடுக்கவைக்கப்பட்டு, மடுக்களின் கீழிருந்து ஹாஜிகளினால் மேல்நோக்கி மண்தாங்கவைக்கப்பட்ட குளம். 1956ல் சிறுபான்மைக்கு தேசிய இன அந்தஸ்த்து கிடைத்தது போல், சிறுபான்மையின் சிறுபான்மைக்கு தேசிய இன அந்தஸ்த்து கொடுத்த குளம். சர்வாதிகார காட்டுமிராண்டி விலங்குக் குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஓரு அம்மன் கோயில் திருவிழா முடிந்து திரும்பிக் கொ;ணடிருந்த மக்களை சகோதர மொழி பேசும் மக்கள் சிலர் பாதுகாப்புக் காரா;களுடன் சேர்ந்து எாித்த குளம் வீதியில் இன்னும் தொிந்தது. லொறிப்; படகின் இலக்கத் தகடும் கிடந்தது. எாிந்தது உடல்களல்ல. மனிதாபிமானம். இது தீக் குளம் தீய குளம்.

வேன் வேகமாக ஓடிக் கொண்டேயிருந்தது. குளங்களை குளங்களுடன் இணைக்க காடு எாித்து, மண்வெட்டி, கல் கொத்தி கால்வாய்கள் வெட்டுவார்கள்;. நாலாயிரம் வருசங்களாய் தொடங்கிய கால்வாய்கள் இன்றுவரை ஒவ்வொரு குளங்களை இணைத்தும், நீர்ப்பாய்ச்சியும், மக்களை வாழ வைத்தும்தான் வந்துள்ளன. ஜன்னலின் ஊடாகப் பாாக்கிறேன். குளக்; காட்சிகள் படிமக் கோர்ப்புக்களாக வந்து போயின. என் பாட்டனின் பாட்டன் பார்த்த குளம். என் பாட்டன் பார்த்த குளம.;; நான் பார்த்துக் கொண்டிருக்கிற குளம். எனது சந்ததிகள் பார்க்கப் போகும் குளம்.

விகாரங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கப் போகின்றன. சிதைவுகள் குளங்களின் நீர்களுடனும், இரத்தங்களுடனும் வந்துகொண்டிருக்கத்தான் போகின்றன. குளங்களை வரைவிலக்கணப்படுத்த முயல்கிறேன். என் கண்ணாடிக்கும் விழிவெண்படலத்துக்கும் இடையில் ஏதோவொன்று சுரந்து பார்வையை மறைக்க குளங்கள் விளங்குகின்றன விகாரங்களாய்.

amrithaam@yahoo.com

riyasahame@yahoo.co.uk

Series Navigation

அம்ாிதா ஏயெம்

அம்ாிதா ஏயெம்