This entry is in the series 20090724_Issue

ஹெச்.ஜி.ரசூல்


உதிரமும் ரோமமும் தசைகளும் நரம்புகளும்
தனித்தனியே தங்கள் அடையாளத்தை
உடம்பின்மீது எழுதி செல்கின்றன.
கால் பெருவிரல் தொட்டு மேலேறி
உச்சிக் குழியைப் பற்றிப் பிடிக்கும்
உயிர்க் காற்றின் அலைத்துளிகள்
வெளிவாசலினூடே குழிகள்
சிறைப் பிடிக்கும் ஓசை
மூடிய அறை திறந்து
குழிகள் உள்வாங்கும் பிம்பம்
இருவாசல் வழிபுகுந்து
காற்றை உறிஞ்சும் குழிகள்
நொடிகளைக் கடந்த
மூச்சுக் குதிரைகள் ஒவ்வொன்றும்
சந்திரக்கலை பிங்கலை கோட்டைகளிலிருந்து
நிசப்தமும் மெளனமும் சூழ்ந்ததொரு
அகால பள்ளத்தாக்கில்
சீறிப்பாய்ந்து வெளிச் செல்லும்
ஓராயிரம் தோல்வி சுமந்து

mylanchirazool@yahoo.co.in

Series Navigation