கிழிசல்கள்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

உஷாதீபன்


கிழிந்த துணிகளைத் தைப்பது என்றால் ராமசாமி அந்த இடத்திற்குத்தான் போவார். அவர் வீட்டிற்கும் அந்த இடத்திற்கும் தூரம்தான். பேருந்தில் போய் இறங்கி, பின் போக்குவரத்து சிக்னலைக் கடந்து, ஜனக்கூட்டம் , வாகனங்கள் இவைகளைச் சாமர்த்தியமாய் ஒதுக்கி அந்த இடத்தை அடைவார் ராமசாமி.
வெகு நாளைக்கு அப்படி ஒரு இடம் இருப்பது அவருக்குத் தெரியாமல்தான் இருந்தது. யாரேனும் சொல்லிக் கொடுத்தா அதை அவர் அறிந்து கொண்டார்? அதுவும் இல்லைதான். அந்த இடம் பற்றியும், அங்கு உட்கார்ந்து தைக்கும் அந்தத் தையல்காரர் பற்றியும் அறிய வந்ததே ஒரு சுவாரஸ்யம். ‘ட’ னா வடிவ இக்குனூண்டு இடத்தில் ஒரு பக்கம் நின்று சட்டுச் சட்டென்று காசு வாங்கவும், டோக்கன்
கொடுக்கவும், ஒரு பக்கம் அந்த டோக்கனைப் பெற்றுக்கொண்டு கலந்து நீட்டவுமாகக் கூட்டம் மொய்த்த அந்தக் காபிக் கடையில், கூட்டத்தோடு கூட்டமாக நீண்ட தன் கைகளில் சிக்கிய அந்தக் காபியை எம்பி நின்று பெற்றுக் கொண்டு திரும்பிய போது, அவருக்குப் பின்னால், அவரைப்போலவே நின்று கை நீட்டி வாங்கிய அந்த இன்னொரு ஆளின் காபி கிளாசை அறியாமல் தட்டிவிட்டுவிட்டார்..
“சார், சார், காபி…காபி…” என்றாவது அவர் ஒரு குரல் கொடுத்திருக்கலாம். பத்திரமாக வாங்க வேண்டும் என்ற ஜாக்கிரதையுணர்வில் அதே கவனமாக அவர் வாங்குவதில் கருத்தாக இருக்க, தான் வாங்கிய காபியை ஒரு அபவ்டர்ன் போட்டு பத்திரமாகத் திருப்பி, கூட்டத்திpலிருந்து விலகி நின்று ரசித்துக் குடிக்க வேண்டுமே என்று இவர் திரும்ப….

தட்டிவிட்ட கிளாஸ் கNP ழ கல்பாவிய தரையில் விழுந்து “சல்”லென்று நொறுஙக் pச் சிதறிய அதே வேளையில் அந்தச் சத்தம்கூட ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. தட்டிய வேகத்தில் பாதிக் காபி ராமசாமியின் சட்டையில் தெறித்து வழிந்துகொண்டிருந்தது. குடிக்கும்போது நாவுக்குச் சுவையாயிருக்கும டிகிரிப் காப்பி, கொட்டி வழிந்தபோது நாற்றமெடுத்தது.

அந்தக் கடையும்,அதன் நெரிசலும், இடைஞ்சலும், இப்படிக் கண்ணாடி கிளாஸ்கள் உடைதலும் கடைக்காரர்களுக்கு சகஜம் போலும்! அவர்கள் பேசாமல் தங்கள் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்குள் சடக்குச் சடக்கென்று கைப்பம்பு அடித்துக்கொண்டிருந்த ஒரு ஆள் அதை நிறுத்திவிட்டு, பெருக்குமாரை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தான். இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல் இன்னொரு கிளாஸில் மேலும் சூடான புதிய
காபி ஒன்று இப்பொழுது ராமசாமி இடித்த அந்த ஆள் கைக்கு வந்திருந்தது. தட்டியதற்கும், கொட்டியதற்கும் சரியாப்போச்சு என்பதுபோல் அந்த ஆள் அவர்பாட்டுக்குக் காபியைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ராமசாமிக்குத்தான் என்னவோபோல் ஆகிவிட்டது. அன்றைக்கும் கையில் வாங்கிய காபி வாயில் சுவைக்கவில்லை.

“வாங்க ஐயா, சித்த உட்காருங்க…அலசிக் கொடுத்திடுறேன்…இதோட எப்படி வீட்டுக்குப் போவீங்க?”என்று இழுத்தார் அவர்.
ஐயா என்று அவர் அழைத்து, அலசிக் கொடுக்கிறேன்…”என்று சொன்னதும், என்னவோ தெரியவில்லைஅவரை ஒரு நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னால் போக வைத்தது அன்று. “சித்த இங்க உட்கார்ந்திருங்க, இதோ வந்திடுறேன்…” என்று சட்டையைக் கழட்டச் சொல்லி
வாங்கிக் கொண்டு போனார் அவர்.

“ஒடனே அலசினாத்தான் காபிக் கரை போகுமாக்கும்…” என்று அவராகவே சொல்லிக்கொண்டு நடந்தார். குழிந்த வயிறும், நெஞ்சு நரைத்த முடிக் கற்றையுமாகப் பனியனோடு பரிதாபமாக அந்தச் சிமின்ட் ஸ்லாப்பில் உட்கார்ந்திருந்தார் ராமசாமி. பக்கத்தில் ஒரு தையல் மிஷின். பார்த்தவுடனேயே தெரிந்தது அரதப் பழசென்று. மெஷினோடு பொருத்தியிருந்த பலகை திப்பி திப்பியாகப் பெயர்ந்துபோய் சிராம்பு கையில் ஏறி விடுவதுபோல் துருத்தி, இளித்துக் கொண்டிருந்தது. பக்கவாட்டில் மெஷினோடு வெயில் மறைப்பாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது ஒரு தென்னை ஓலைத் தட்டி. காலையில் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசை நோக்கி, பிறகு
வெயில் இடம் மாற மாற இதுவும் திசை மாறும்போலிருக்கிறது. நினைத்துக் கொண்டார்.

மெஷினுக்குக் கீழே சுற்றிவர கட்டிங் பிட்டுகள். சில பீடித்துண்டுகள். காற்றில் பறந்து வந்து கிடந்த முடிக் கற்றைகள். நூல் துணுக்குகள். சிதறி உலர்ந்த வெற்றிலைக் காவித்துப்பல் தெறிப்பு. அங்கங்கே அமர்ந்து அமர்ந்து எழுந்து பறக்கும் ஈக்கள். ஆள் சீக்கிரம் வந்தால் தேவலை என்று தோன்றியது இவருக்கு. மேலிருந்து சொட்டென்று தலையில் தண்ணீர் இறங்கியது. தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

நெரு நெருவென்று மணல் நெருடியது விரலில். ஓழுகும் தகர அடைப்பான். நிமிர்ந்தவாறே சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டார். வெயில் சூட்டுக்குக் கண்களை இறுக்கிக்கொண்டு வந்தது. உட்கார்ந்த இடம் கொதித்தது. இந்தாங்க, போட்டுக்குங்க…ஒடம்புச் சூட்டுக்கு உடனே காய்“ ஞ்சிடும்…” என்று அவர் சட்டையை நீட்டியபோது ஏறக்குறைய முழுதுமாகத்தான் நனைந்திருந்தது அது. ஆனால் காபிக் கறை முற்றாகப் போயிருந்தது. சட்டையைக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொல்லிவிட்டு மெஷினில் அமர்ந்து அவர்பாட்டுக்குத்
தைக்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் வைத்திருந்த ஒரு மஞ்சள் பையிலிருந்து யாரோ கொடுத்துப் போயிருந்த டவுசர் சட்டைகள் என்று ஒன்றொன்றாகக் கிழிசல் போகத் தைக்க ஆரம்பித்தார்.

ராமசாமி அவரையும், அவரது வேலையையுமே கூர்ந்து நோக்கியவராய் இருந்தார். ஓரத்து நூல் பிசிறுகளை ஒழுங்காக வெட்டுவதும், கிழிசலின் இரு நுனிகளையும் கட்டைவிரல் நகத்தால் மடித்து இழுத்துப் படியவைத்து, சீராகத் தைப்பதுமான தொழில் சுத்தம் இவருக்குப் பிடித்திருந்தது. தட்டிவிட்டது நானாயிருக்க அதுபற்றி ஒரு வார்த்தைகூட சலித்துக்கொள்ளாமல் துளியும் கோபப்படாமல் ஏதோ தான் செய்த தவறுபோல் பவ்யமாய் அழைத்துக்கொண்டு வந்து சட்டையையும் அலசிக் கறையைப் போக்கிக் கொடுத்துவிட்டு, இது ஒரு நிகழ்வேயில்லை என்பதுபோல் அசாதாரணமாய்த் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் அவர் மீது ஏனோ இவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது.

அவராக எதுவுமே சொல்லவில்லை. இவராகத்தான் கிழிந்த துணிகளை எடுத்துக்கொண்டு அங்கே போக ஆரம்பித்தார். போகவர மூன்றும் மூன்றும் ஆறு ரூபாய் கொடுத்து எடுத்துப் பிடித்துத்தான் இவர் அங்கே போயாக வேண்டும். ஆனாலும்கூட அங்கே போய் அப்படிக் காலார அமர்ந்து மனதாரப் பேசி, துணிகளைத் தைத்து எடுத்து வருவதும், நியாயமான கூலியை அவர் கேட்க, அவர் அப்படிக்
கேட்பதாலேயே ‘பரவால்ல வச்சிக்கிங்க..” என்று பைசாவை இவர் கூடத் திணிப்பதும், இதமான ஒரு காரியமாகவே இருந்தது இவருக்கு. இதற்காகவே துணிகள் கிழியாதா என்ற கூடத் தோன்ற ஆரம்பித்தது.

பழைய துணிகளை எடுத்துக்கொண்டுபோய் தைக்கக் கொடுப்பதே கௌரவக் குறைச்சலான (ஏன் கேவலமான என்றுகூடச் சொல்லலாம்) காரியமாகப் போய்விட்ட இந்த நாட்களில், இவர் குடியிருக்கும் பகுதியில் அதைச் செய்ய ராமசாமி ரொம்பவேதான் கூச்சப்பட்டார். பஜார் பகுதியில் நீள நெடுக நடந்து வருகையில் இரு புறமும் உள்ள தையல் கடைகளில் கண்ணாடி அடைப்புகளில் மடிப்புக் குலையாமல் பள பளவென்று விரைப்பாக, புதிதாகத் தொங்கும் சட்டை, பேன்ட்கள், கோட்டுகள் என்று கண்கொண்டு பார்க்கும்பொழுது, எப்படி அவர்களிடம் இந்தக் கிழிசல்களைக் கொண்டு கொடுத்து, தையுங்கள் என்று சொல்வது?

ஓன்றிரண்டு கடைகள் இவர் நினைக்கும் தரத்துக்கு ஏற்ற இடமாகத் தோன்றினாலும், அவர்களும் ஏதாவது சொல்லித் திருப்பி விடுவார்களோ என்று பயந்தார். சட்டைகள்,பேன்ட்கள் இந்தக் காலத்தில் பழசாகின்றனவே தவிர, கிழிவதில்லை பெரும்பாலும். இவர் சிறுவனாய் இருந்தபோதெல்லாம் அடிக்கடி டவுசர் சட்டைகள் கிழிந்ததும், தைத்துத் தைத்துப் போட்டுக்கொண்டதும் இப்பொழுது எப்படி
இவையெல்லாம் மாறின என்று ஆச்சரியப்பட்டார். இப்பொழுது சிறுவர்களாய் இருப்பவர்களுக்குத் தனக்கு ஆனதுபோல் சட்டை, டவுசர்கள் கிழிகின்றனவா என்று கூட ஒரு சந்தேகம் வந்தது இவருக்கு.
“இங்கேர்ந்து இநத் க் கிழிசலைத் தூக்கிக்கிட்டு அம்புட்டுத்தூரம் போகணுமா?” பஸ்ஸ_க்குக் கொடுக்கிற
காசில ரெண்டு ரூபாய் சேர்த்து இங்கே கொடுத்தீங்கன்னா, தைச்சுக் கொடுதத் pட்டுப் போறான்…”-சுலபமாய்தத் hன்
சொல்லிவிட்டாள் சாருமதி.
ஆனால் அவள் சொல்லும் அந்தக் கூட ரெண்டு ரூபாயை அங்கே கொண்டு தன் நண்பராக வரித்துக்கொண்ட அவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது இவருக்கு. சின்னப் பிள்ளையாய் சொந்த ஊரில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சினிமாவுக்குப் போகும்பொழுது நாலணா தரை டிக்கெட்டில் ஏழை பாழைகள், தொழிலாளி, பாட்டாளி ஜனங்களோடு உட்கார்ந்து
படம் பார்க்கத்தான் தனக்குப் பிடிக்கும் என்பதும், மனம் லயிக்கும் என்பதும், எட்டணா பெஞ்சு டிக்கெட்டிலும், ஒரு ரூபாய் மாடி டிக்கெட்டிலும் உட்கார்ந்திருப்பவர்களெல்லாம் பணக்காரர்கள், ஆகாதவர்கள் என்ற எண்ணமும் தன்னிடம் எப்படியோ படிந்து போயிருந்தது இன்றுவரை அழியாமல் இருப்பதை அடிக்கடி உணர்ந்து கொள்வார். அந்த மனநிலைதான் இதுவோ என்று தோன்றியது இப்போது. அப்படித்தான் இன்றும் போய்க் கொண்டிருக்கிறார் ராமசாமி.
இத்தனை நாள் ஏன் இதெல்லாம் சொல்லாமல் இருந்தே? என்று சாரு எடுத்துப் போட்ட துணிகளைப் பார்த்தபோது கேட்டார் இவர்.
“ஆமா, பாவாடை, ரவிக்கைகளையெல்லாம் எடுத்திட்டுப்போய் தைச்சிட்டுவரக் கூச்சப்படுவீங்களோன்னுதான ;
…” என்றாள் அவள்.
“கூச்சமாவது, கீச்சமாவது?” இம்புட்டு வயசுக்கு மேலே அதெல்லாம் எப்படி? கொண்டா எல்லாத்தையும். …” என்று வாங்கினார். பலரும்அக்கறையாய் இப்படி வீட்டுப் பெண்மணிகளின் துணிகளை எடுத்து வந்து கவனமாய்க் கிழிசல் சொல்லி தைத்து வாங்கிப் போவதை இவர் அங்கே பார்த்திருக்கிறார். சரி, சரி, இன்னும் உலகத்தில் பலரும் கிழிசல்கள் தைக்கத்தான் செய்கிறார்கள் போலிருக்கிறது? என்று நினைத்துக் கொள்வார். சமீபமாய் வீட்டில் கிழிந்த துணிகளே இல்லாமல் போய் பல சமயங்களில் ‘வெளியே
போயிட்டு வர்றேன்..’என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவது இவரின் வழக்கமாயிருந்தது. ஏனோ அந்த இடமும், இருபுறத்திலும் இருக்கும் கடைகளும் அந்தஅகன்ற சிமன்ட் தளம் பாவிய வீதி முட்டும் இடத்தில் உள்ள மசூதியும்? நேரா நேரத்துக்கு தவறாமல் கேட்கும் தொழுகையும், அந்தப்பகுதியில் கண்ணுக்குத் தட்டுப்படும் அதிகபட்சமான மூத்த தலைமுறை மனிதர்களும் இவருக்கு அங்கே ஒரு ஒட்டுதலை ஏற்படுத்தியிருந்தது.
போய் உட்கார்நத் hல் “வாங்க, வாங்க” என்று முகம் மலர அழைப்பார் அவர். அவரும் ஒரு முஸ்லிம் சமூகத்தவர்தான் என்று பின்னால்தான் தெரிந்து கொண்டார் இவர்.
அது எதுவாயிருந்தால் என்ன? மனசுக்கு நேசமானவர்கள் எல்லோரும் ஒரே இனம். ஓரே ஜாதி. அவ்வளவுதான். அதற்குமேல் அதில் ஒன்றும் இல்லை என்று தோன்றியது.
காதர்பாய் அறிமுகப்படுத்தித்தான் பக்கத்திலுள்ள எலெக்ட்ரிகல் ரிப்பேர் கடையில் வீட்டிலிருந்த எமர்ஜென்ஸி லைட்டைக் கொண்டுபோய் பழுதுபார்க்கக் கொடுத்தார். மனிதர்கள் பழுதாவதுபோல், பொருட்களும் ஆகித்தானே போகின்றன. அந்தப்பகுதி இம்மாதிரிக் காரியங்களுக்கென்று ஒதுக்கிவிட்டாற்போல் இருந்தது. வௌ;வேறு சந்தர்ப்பங்களில் வௌ;வேறு விதமான அனுபவங்கள் இவருக்கு. அனுபவங்கள் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் செழுமைப்படுத்துகின்றன?
அந்தக் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த பொழுதுகளில் இவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் அலாதியானது. அதையும் மறக்க முடியாதுதான். சொல்லப்போனால் மற்றவர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும் இதை. சாருவிடம் சொன்னபோது அவள் அரண்டு மருண்டு போனாள்.”அங்கெல்லாம் போகாதீங்கோ..” என்ற வார்த்தைதான் அவளிடமிருந்து வந்தது.
காலடியில் ஏதோ பேக் கிடக்கிறதே என்று கடைக்காரரிடம் ஞாபகப்படுத்தினார் இவர்.
“அதுபாட்டுக்கு இருக்கட்டும் …” என்றார் அவர்.
கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு இளைஞன் வந்தான். அந்தப் பையை எடுத்துக்கொண்டான்.
கடைக்காரரிடம் பேசியவாறே பைக்குள் கைவிட்டு, ரெண்டு மூன்று ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வராண்டாவில்
வைத்தான்.
“முதல்ல நல்லா குளிப்பாட்டி விட்ருவோம்…” என்று உள்ளேயிருந்து எடுத்ததைப் பார்த்த கணத்தில்அரண்டு போனார் இவர். தான் இவ்வளவ நேரம் இதன் அருகிலா கால்களை வைத்துக்கொண்டிருந்தோம்
என்று நினைத்தபோது உடம்பு ஆட்டம் கண்டுபோனது வெங்கடாச்சலத்திற்கு.
“அடேயப்பா…எவ்வளவு நீளம்…?” என்று அவரால் நினைத்துத்தான் பார்க்க முடிந்ததே தவிர வார்த்தைகள் வரவேயில்லை. கழுத்தை அழுத்திப்பிடித்துக்கொண்டு மேலிருந்து ஒரு மக் தண்ணீரை ஊற்றி நீள நெடுக ஒரு உருவு உருவி விட்டான் அவன். என்னத்தைத் தின்றிருந்ததோ கருமம், அந்த ஏரியாவே அந்த நாற்றம் நாறியது அப்போது. பாம்புத் தைலம் தயாரிக்கும் இளைஞனாம் அவன். முதுகுவலி, மூட்டு வலி என்று சவால் விட்டான். தைலத்திற்கு வலி போகவில்லையென்றால் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்றான். வேறு இரண்டு டப்பாக்களைத் திறந்து, அதிpலருந்து தேள்., நட்டுவாக்காலி என்று எடுத்து கையில் விட்டுக்கொண்டான். போதாக் குறைக்கு ஒவ்வொரு இடமாகச் சுட்டிக்காட்டி, “இது நாகம், இது கட்டுவிரியன், இது சாரை என்று கடிபட்ட
இடங்களைக் காண்பித்தான்.
தேள், நட்டுவாக்காலிகள் சர்வ சாதாரணமாய் அவன் கைகளில் ஊறுவதைப் பார்த்து கேட்கக்கூடாத ஒரு கேள்வியை வேறு இவர் கேட்டு வைத்தார்.”இதெல்லாம் ரப்பரா?” என்றாரே பார்க்கலாம்.
“அத்தனையும் அசல் சார்..விடட்டுமா பார்க்கிறீங்களா?” என்றவாறே அவன் இவரை நெருங்கியபோதுதான் காதர்பாய் வந்துவிட்டார்.
“ஏ…ஏய்…நில்லுய்யா…யார்ட்ட எதை விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தையில்லையா?
நீங்க வாங்க ஸார்…”-சொல்லியவாறே இவரைக் கையைப்பிடித்து இழுத்து வர உசிர் வந்தது இவருக்கு. பக்குவமாய்ப் பழகி நேசிப்பது என்று வந்துவிட்டால் உலகத்தில் எல்லாமே
மனிதனின் காலடியில்தான் என்று தோன்றியது. தன்ராஜ் என்ற அந்த பாம்புப் பையனை இன்றும் எங்காவது பார்க்க நேர்ந்தால் இவருக்கு நடுக்கம்தான். மூடிக் கிடந்த ஒரு சினிமாத் தியேட்டரில் நூறு பாம்புகள் இருக்கிறது என்றான் அவன். ஒரு மணி நேரம் டைம் கொடுத்தால் எல்லாவற்றையும் பிடித்துவிட முடியும் என்றான். இங்கு வெறும் இருநூறு ரூபாய்க்கு வாங்கிக்கொண்டுபோய், வெளிநாடுகளில் ஆயிரம், இரண்டாயிரம் என்று தைலங்களை விற்பதாகச் சொன்னான். அந்தச் செய்திதான் இவரை மிகவும் வருத்தப்படுத்தியது. உழைப்பும், திறமையும், எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றன என்று வேதனையடைந்தார் அன்று. அந்தப் பகுதியில் அவருக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் அவரால் மறக்கமுடியாததானது. சாருமதியிடம் இதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவரிடம் இன்றுவரை இருந்துகொண்டேயிருக்கிறது.
அன்று சாருமதி கொடுத்த துணிகளில் பாவாடை, ரவிக்கைகளோடு ஒரு நைட்டியும் இருந்தது. “இதையேன் தைக்கிறே?” என்றார் இவர். “போட்டுக்கத்தான்..” என்றாள் அவள் சாதாரணமாக.
“ராத்திரி ஒரே வேக்காடா இருக்குதுங்க…என்னால தாங்கவே முடியலை…” என்று சங்கடப்பட்டாள்.
அந்த டிரஸ்ஸை அவள் அணிந்துகொண்டிருக்கையில், இந்த வயதிலும் கூட அவர் மனதில் லேசாக ஒரு ஆசை துளிர்க்கும்.
“முழுசா மூடியிருந்தாக்கூட இந்த டிரஸ்ஸிலே கொஞ்சம் கவர்ச்சி அதிகம்தான்..” என்றார் ஒரு நாள். அன்றிலிருந்து விட்டுவிட்டாள் அதை.
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட இந்திய ஆண்கள் காமத்திpலருந்து கட்டாயம் ஒதுங்கியே இருக்க வேண்டியிருக்கிறது. அம்மாதிரியான நிலையில் பெண்களின் அருகாமை அவர்களுக்கு ஆறுதலளிக்கிறது. அது காமத்திலிருந்து விலகி நிற்கும் நிலை. உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு நடுஇரவில் பெற்றோர் எழுந்து போர்வையை இழுத்துப் போர்த்திவிடுவது மாதிரி..!…-என்றோ, எதிலோ படித்தது நினைவுக்கு வந்தது இவருக்கு.
“என்ன காதர்பாய், ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து? இன்னைக்குத்தான் வேளை வாய்ச்சுது ..” என்றவாறே பிளாட்பாரத்தின் கீழே ரோட்டோரமாய் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த இரு- சக்கர வாகனங்களைக் கடந்து மேலே ஏறி, அருகே நெருங்கிய இவரை அந்தப் புதிய குரல் வரவேற்றது.
தட்டி மறைப்பிலிருந்து உள்ளே அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தார்.வெயில் வெளிச்சம் கண்களை மறைத்தது.
வாங்க சார்…வாங்க…பார்த்தீங்களா…நீங்க அவர்ட்டதான் கொடுப்பீங்“ கன்னு தெரியும். அதான் சொல்லிட்டே வர்றீங்க…இத்தனை நாள் வந்திருக்கீங்களே..ஒரு நாளாவது என்னைக் கண்டுக்கிட்டிருக்கீங்களா? இங்க பக்கத்துல அடுத்த லாண்டிரி வாசல்லதான நான் உட்கார்ந்திருக்கேன்…எங்கிட்ட கொடுத்திருக்கீங்களா? ஏன் சார்… ஏன்? சொல்லுங்க…எங்கிட்டயும் கொடுக்கலாமுல்ல? நான் தைக்க மாட்டனா? நாங்க ஒரு தாய் வவுத்துப் பிள்ளைங்கதான் சார்..நானும் பிழைக்க வேண்டாமா? எல்லாரும் அவர்ட்டயே கொண்டு சுமத்துறீங்க? அதென்ன சார் பழக்கம்? ஒருத்தர்ட்டயே போறது? இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டீங்களா?ங்க…வாங்க… வந்திட்டீங்கல்ல…இருங்க…இருங்க…”-அவர் பேச்சே ஒரு மாதிரி இருநத் து இவருக்கு. படபடவென்று கொட்டிவிட்டு தையலைத் தொடர்ந்து கொண்டிருந்தார் அவர்.
ஏதும் சொல்லத் தோன்றாமல் விரைத்துப் போய் நின்றுகொண்டிருந்தார் இவர்.
வந்ததும் வராததுமாக வரவேற்பு படு பயங்கரமாக இருக்கிறது? முதல் சந்திப்பில் ஒரு மனிதன் இப்படியா பேசுவது? அதிர்ச்சி வைத்தியமாக இருக்கிறதே? இது என்ன தன்மையில் சேர்ந்தது? மனித குணங்கள் இப்படியெல்லாமுமா வக்கிரப்படும்?
அது அவர் தம்பி என்பதே முதலில் இவருக்குத் தெரியாது. காதர் பாயும் சொன்னதில்லை. அவரோடு பேச நேர்ந்த தருணங்களில் ஒரு நாள்கூட இவர் பற்றியதான பேச்சு வந்ததேயில்லை.
தள்ளி உட்கார்ந்து தொழில் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு ஆள் என்றுதான் இவர் நினைத்திருந்தார். அவரவர் வேலை அவரவருக்கு. அவர்களுக்குள்ளான இந்தப் பிணக்கு இவருக்கெப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலுமே தான் என்ன செய்வது? இந்த வாங்கு வாங்குகிறாரே? இப்படிப் பொறிகிறாரே? எடுத்த எடுப்பிலேயே ஒருவரிடம் இப்படியா அணுகுவது? ஓருவரை இப்படியா வரவேற்பது?
ஏதொவொரு இடத்தில் கிழிசலைத் தைக்க வேண்டும். அவ்வளவுதானே? அவர் வர்றதுக்கு ரெண்டு மாசம் ஆகும். சொந்தஊர் போயிருக்“ காரு…மகன்கிட்ட…” – சொல்லிவிட்டு மீண்டும் தையலில் கவனமானார் அவர். அப்பொழுதுதான் இவர் கவனித்தார்.அந்த இடத்தில் காதர்பாயின் மிஷின் இல்லையென்று. அவ்வளவு நேரம் அவர் அப்படி நின்று கொண்டிருப்பதற்கு காதர் பாயாக
இருந்தால் உடனே உட்காரச் சொல்லியிருப்பார்,இடத்தை ஒழித்துக்கொடுத்து. அந்த ஒரு வித்தியாசமே போதுமென்று தோன்றியது இருவருக்கும்.
போவதா, இருப்பதா என்று தெரியவில்லை. தவித்துக் கொண்டிருந்தார் ராமசாமி. சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, வாங்க சார்…என்றார் அவர். குரலே அதட்டுவதுபோல் இருந்தது. தைத்த துணிகளைச் சுருட்டிக் கொடுத்தார். பாயானால் பொறுமையாக மடித்து நீட்டுவார். வாங்கிப்பையில் செருகிக்கொண்டார் வந்தவர்.
கொஞ்சநேரம் கூலிப் பேரம் நடந்தது அங்கே. வார்த்தை முற்றி வாக்குவாதம் கிளம்பியது.
முனகிக்கொண்டே சொன்ன காசைக் கொடுத்துவிட்டுப் போனார் அந்த ஆள். அடுத்துத் தைத்து முடித்த இன்னொரு ஆளிடமும் இதே பேரம்தான் நடந்தது. கேட்டுக்கொண்டிருந்த இவருக்கே கூலி அதிகம்தான் என்று தோன்றியது.
“இதுக்குத்தாங்க உங்ககிட்ட வர்றதில்ல…எதுக்கும் ஒரு நியாயம் வேணாமா? நியாயமாக் கேளுங்க…ரெண்டு ரூபா சேர்த்துத் தர்றோம்…அதுக்காக அநியாயமாக் கேட்டீங்கன்னா? நாங்களும் கிழிசலைத்தானே தைக்க வர்றோம்? உங்களுக்கு வாடிக்கை வேணாம் போலிருக்கு? நல்ல ஆளுங்க நீங்க? -மனதுக்குப் பிடிக்காமலேயே சொன்ன காசைக் கொடுத்துவிட்டுப் போனார் அந்த ஆளும். என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும், காசைக் கொடுத்தால் சரி என்று இருந்தார் அவர்.
“இனிமே வரமாட்டேண்ணே உஙக் கிட்டே…இதான் கடைசி…”என்றுவிட்டுப் போனார் அந்த ஆள். என்ன செய்யலாம் என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தார் இவர்.
“தொழுகைக்குப் போயிட்டு வந்திடுறேன்…”-லாண்டிரிக் கடைக்காரரைப் பார்த்துச் சொல்லிவிட்டு அப்படியே இடத்தைவிட்டு எழுந்தார் அவர்.
“இருங்க வநத் pடுறேன்…”-இவரை முகம் பார்க்காது தரையைப் பார்த்து யாருக்கோ சொல்வதுபோல் சொல்லிவிட்டுப் போனார். ராமசாமிக்கு அவரின் செய்கை சிரிப்பைத்தான் வரவழைத்தது. அன்று தற்செயலாய்க் காபி கொட்டியதற்காக இரைஞ்சலுடன் கூட்டிவந்து சட்டையை அலசிக் கொடுத்த காதர்பாயையும், அவரின் தம்பியான இவர் முன்பின் அறிமுகமின்றி ஒரு மூன்றாம் மனிதனிடம் நடந்துகொள்ளும் முறைமையையும் ஒரு சேர நினைத்துப் பார்த்துக்கொண்டார்.
கிழிசல்களைத் தைக்கும் ஒரே தொழில்தான் இருவருக்கும். ஒருவர் பாங்காக, பக்குவமாகத் தைத்து, அந்த உழைப்பின் அளவுக்கேற்ற மரியாதையை, அதற்கு அளித்து மனநிறைவு அடைகின்றார். மகிழ்ச்சி எய்துகிறார். இன்னொருவர் கிழிந்து போன மனநிலையில் கிடந்து தடுமாறுகிறார்.
இந்த இரண்டு முரண்களையும் ஏற்படுத்தியது எது? வாழ்க்கைச் சிக்கல்களும் அதற்கு ஆதாரமான பொருளாதாரத் தேவைகளும்தானே? இந்த ஜீவிதத் தேவைகளால் மனிதர்கள் எப்படியெல்லாம் முரண்பட வேண்டியிருக்கிறது?எப்படியெல்லாம் தடுமாற வேண்டியிருக்கிறது? எப்படியெல்லாம் தத்தளிக்க வேண்டியிருக்கிறது?
அவ்வளவு நேரம் கண்டு கொள்ளாமல் அப்படிக் காக்க வைத்தது என்னவோபோல் இருந்தாலும், மனசைச் சங்கடப்படுத்தினாலும், இப்போது அவர் சொல்லிச் சென்ற முறையிலும் ஒரு தன்மையில்லாதிருந்தாலும், இவருக்கு அவர் மீது ஏனோ எந்த வருத்தமும் எழவில்லை.
இப்போது அவர் சென்றிருப்பது தொழுகைக்காக என்பது கருதி, திரும்பி வருவதை எதிர்நோக்கி, காதர்பாயை மனதில் நினைத்தவராய் பொறுமையாய்க் காத்திருக்கலானார் இவர்.


Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்