கிருமிப் போர்முறை (Germ warfare)

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

கேள்வி பதில்கள்


கிருமி ஆயுதங்கள் என்பவை யாவை ?

உயிரியல் மற்றும் கிருமி ஆயுதங்கள் என்பவை ராணுவ உபயோகத்துக்காக மாற்றப்பட்ட உயிர்வாழும் கிருமிகள். இவை வியாதிகளை உருவாக்கவும், மனிதர்களைக் கொல்லவும்,விலங்குகளையும் தாவரங்களையும் அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

வெகு வேகமாக தொத்தக்கூடிய தொத்து நோய் கிருமிகள் இவை. வெகுவேகமாக தொத்தி பரவும் இவை, வெகு விரைவில் மோசமான விளைவை எதிரிகளிடன் விளைவிக்கக் கூடியவை

எந்த கிருமிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, எப்படி அவை அனுப்பப் படுகின்றன ?

கிருமிப் போர்முறையில் பலவகைப்பட்ட உபாயங்களும், பல வகைப்பட்ட கிருமிகளும் கிருமிகளை எடுத்துக்கொண்டு எதிரிகளிடம் செல்லும் பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ப்ளேக், அந்த்ராக்ஸ், சின்னம்மை, மஞ்சள் காய்ச்சல், போடுலிஸம் போன்றவை எதிரிகளுக்கு அனுப்பக்கூடிய வியாதிகள். இந்த கிருமிகளைக் கொண்டுசெல்ல பாக்டாரியா, காளான், வைரஸ் அல்லது விஷம் போன்ற பல விஷயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கண்ட எடுத்துச்செல்லும் பொருட்களை எதிர்களிடம் பரப்ப பலவிதமான உபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண வெடிகுண்டை அனுப்பி அதன் இன்னொரு பகுதியில் கிருமிகள் நிறைந்த புகையை அடைத்து எதிரிகளிடம் வெடிக்க வைப்பது. பின்னர் புகையிலிருந்து கிருமிகள் காற்று மூலம் பரவும்.

இந்த கிருமிகள் மூலம் எதிரி நாட்டின் தண்ணீர், உணவுப் பொருட்கள் போன்றவற்றையும் கெட வைத்து அழிக்கலாம். எதிரி நாட்டுக்கு உணவு அனுப்புவது போல அனுப்பி அதன் மூலம் கிருமிகளை அந்த நாட்டில் மக்களிடம் பரப்புவதும் மக்கள் பயப்படும் ஒரு விஷயம்.

எப்போதாவது இந்த கிருமிப் போர் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறதா ?

வரலாற்று ரீதியாக, பல முறை எதிரிகளிடம் வியாதிகளைப் பரப்பும் முயற்சி நடந்து வந்திருக்கிறது.

14ஆம் நூற்றாண்டில், ப்ளேக் நோயால் இறந்த மனிதர்களது உடல்களை எதிரிகளின் கோட்டைக்குள் தூக்கியெறிவது நடந்திருக்கிறது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்த போது, அவர்கள் சிவப்பிந்தியர்களிடம் சின்னம்மை, மீஸல்ஸ், ப்ளேக் கிருமிகள் தோய்த்த போர்வைகளை அவர்களுக்கு வியாபாரம் செய்து அவர்களைக் கொன்றது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று.

20ஆம் நூற்றாண்டில், பல நாடுகள் இந்த கிருமிப் போர் முறையை ஆராய்ச்சி செய்தன. தங்களது ராணுவத்துக்கு தகுந்தாற்போல கிருமிகளையும் அவைகளை எதிர்களிடம் கொண்டுசெல்லும் முறையையும் உருவாக்கின.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் நாடு, சீனாவுக்கு எதிராக கிருமிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. சீனாவில் சிறைபிடிக்கப்பட்ட கைதிகளிடம் கிருமிகளை செலுத்தி அவர்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டது.

அமெரிக்க ராணுவமும், 1950-53 கொரியா போரின் போது, கிருமி ஆயுதங்களை கொரிய மற்றும் சீன ராணுவத்துக்கு எதிராகப் பயன்படுத்தியது என்று பரவலாக நம்பப் படுகிறது.

1987-88 இல் ஈராக்கிய ராணுவம், ஈராக்கில் வாழும் குர்து மக்கள்மீது வேதியியல் பொருள்களையும் கிருமிகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது என நம்பப்படுகிறது.

1990இல் ஈராக்கில் மறைத்துவைக்கப்பட 5 ஆராய்ச்சி சாலைகளில் அடுக்கடுக்காக அந்த்ராக்ஸ், போடுலிஸம், கெங்ரேன் பாக்டிரியா போன்ற கிருமிகள் சேர்த்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எந்த நாடுகள் இந்த கிருமிப் போர்முறையை வைத்திருக்கின்றன ?

அமெரிக்கா, ருஷ்யா, சீனா, ஜப்பான், ஈராக், எகிப்து, லிபியா, சிரியா, ஈரான், இஸ்ரேல், வட கொரியா, தாய்வான் ஆகிய நாடுகள் போர்களுக்காக கிருமிகளை வைத்திருக்கின்றன, அல்லது வைத்திருப்பதாக நம்பப்படுகின்றன.

இது ஒரு முக்கியமான ஆபத்தா ?

இவைகள் இருக்கும் வரை, கிருமி ஆயுதங்கள், முக்கியமான ஆபத்துகளே.

ஈராக்கிலும், முந்தைய சோவியத் யூனியன் உடைந்து உருவான தேசங்கள் வைத்திருக்கும் கிருமி ஆயுதங்கள் முக்கியமான விஷயங்கள்.

அமெரிக்காவில், இந்த கிருமி ஆயுதங்கள் மூலம் நடக்கக்கூடிய பயங்கரவாத தாக்குதல் முக்கியமான தீவிரமான விஷயமாகக் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவின் எதிரிகளான, லிபியா, ஈராக், வட கொரியா போன்ற தேசங்கள் பயங்கரவாதிகளை கிருமி ஆயுதங்களை உபயோகிக்க தூண்டலாம் என அமெரிக்கர்கள் பயப்படுகிறார்கள்.

ஏன் அமெரிக்கா 1972ஆம் வருட வேதியியல், உயிரியல் ஆயுதங்கள் தடை ஒப்பந்தங்களை நிறைவேற்றவோ, ஒப்புக்கொள்ளவோ மறுக்கிறது ?

அதிகப்படியாக உருவாக்கப்பட்ட நெறிமுறைகள், 1972ஆம் வருடத்து உச்சிமாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு கொஞ்சம் வலிமையூட்டும் வேலைகள். அப்போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், கையெழுத்திட்ட நாடுகளால் நிறைவேற்றப்பட்டனவா என்பதை சரி பார்க்க முடியாத அளவுக்கு எழுதப்பட்ட ஒப்பந்தம். இப்போது எழுதப்படும் ஒப்பந்தம் அவ்வாறு சரி பார்க்க தேவையான அமைப்பை உருவாக்கும் முயற்சி.

அமெரிக்காவின் புஷ் அரசு, இப்போது எழுதப்படும் புதிய நெறிமுறைகள் செயல்படுத்த முடியாதவை எனக் கருதுகிறது. மற்றவர்கள் ஏமாற்றுவதை தடுக்க இதனால் முடியாது எனக்கருதுகிறது. ஆகவே இது அமெரிக்கா ஒப்புக்கொண்டால் அது அமெரிக்காவுக்கும் அதன் வியாபார ரகசியங்களுக்கும் பாதகமானதாக இருக்கும் எனக் கருதுகிறது.

Series Navigation