கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் . . .

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

செங்காளி


கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் இந்திய அணியின் கிரிக்கெட்டாம்

கடைசி ஆட்டத்தை எப்பொழுதும் கோட்டைவிடுவோர் கிரிக்கெட்டம்

பொறுப்பற்ற இந்தவணிக்குப் பல்லற்ற சிங்கம் தலைவனாம்

அறையில் நடப்பதை எல்லாம் அம்பலத்தில் கரைப்பானாம்

பயிற்சியாளர் சேப்பலையே ‘போல்டு ‘ செய்த தலைவனாம்

சேப்பலுக்கும் சிங்கத்துக்கும் வாய்கிழியப் பெரும் சண்டையாம்

இதையெல்லாம் பார்த்துகொண்டு இருந்தது கிரிக்கெட் நிறுவனமாம்

இது பதவிக்காக பேரம்பேசும் பெருச்சாளிகள் கூட்டமாம்

இந்தக் கோமாளிகள் கூட்டத்திற்கு பொம்மைபோன்ற தலைவராம்

அவரைப் பின்னாலிருந்து நன்றாய் ஆட்டிவைக்க ஒருவராம்

நடந்ததைத் தலைவருக்கு ‘யிமெயிலி ‘ல் அனுப்பினாராம் சேப்பல்தான்

உலகறிந்த ரகசியமாய் அதை ஆக்கிவிட்டாராம் தலைவர்தாம்

சேப்பலுக்கும் சிங்கத்துக்கும் சமரசம் செய்ய ஏற்பாடாம்

மும்பையிலே கூடி மும்முரமாய் விசாரனை செய்தனராம்

சமரசத்தின் முடிவும் அதைச் சொன்னதும் பெருங்கூத்தாம்

இந்தச்சோம்பேறி வீரர்களைப் பார்த்துச் சொக்கிப்போகும் மக்களாம்

எதைச் சொன்னாலும் நம்பிவிடும் இளிச்சவாய் மக்களாம்

கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் இந்திய அணியின் கிரிக்கெட்டாம்

—-

Series Navigation

செங்காளி

செங்காளி