காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


காலச்சுவட்டின் 50 வது இதழ் நவம்பர்-டிசம்பர் 2003 இதழ் வெளிவந்துள்ளது.இதில் பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ என்ற ஒரு கட்டுரையை கண்ணன் எழுதியுள்ளார். இணைய முகவரி

http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu50-1/fullstory.php ?id=13309193

(last visited on 4th Dec 2003).இந்தக் கட்டுரை திசம்பர் 4,2003 எழுதப்படுகிறது.இது எழுதப்படும் வரை இத்தளத்தில் கட்டுரையில் தவறு/பிழை இருக்கிறது என்ற அறிவிப்போ அல்லது வேறு பின் குறிப்புகளோ இல்லை.

1

இந்தக் கட்டுரை ஒரு மோசடி முயற்சி.வேறொரு நாட்டில்/நாடுகளில் எழுந்த சர்ச்சை/சர்ச்சைகளை

பின் நவீனத்துவம் குறித்த சர்ச்சையாக மட்டும் காட்டி, அதன் மூலம் தமிழ்ச் சூழலில் சிலரை

முட்டாள்களாக சித்தரிக்கும் முயற்சி. நேர்மையாக இந்த சர்ச்சையைக் குறித்து கண்ணன் எழுதி,

கறுப்பு தொகுப்பாளர்கள், அ.மார்க்ஸ் மீது விமர்சனம் வைத்திருந்தால் அது ஏற்புடையதாக இருக்கும்.

கண்ணன் அதை செய்யவில்லை.மாறாக வாசகர்கள் நாம் எழுதுவதை அப்படியே நம்பிவிடுவார்கள்,

எதை வேண்டுமானலும் எழுதலாம், அதை இணையத்திலும் வெளியிடலாம், இந்த சர்ச்சைக் குறித்து

யாருக்கு தெரிந்திருக்கும் என்ற ‘தைரியத்தில் ‘ செயல்பட்டிருக்கிறார். இந்த சர்ச்சையை நான் அதன்

ஆரம்பம் முதலே கவனித்து வருபவன்.அந்த கட்டுரை வெளியான SOCIAL TEXT இதழையும்

படித்தவன். என் போல் பலர் இருக்கிறார்கள்-உலகெங்கும்.விபரமறிந்தவர்கள் இத்தகைய

கட்டுரை வெளியிடும் காலச்சுவட்டை மதிக்க மாட்டார்கள். ஏனெனில் இதை எழுதியவர் காலச்சுவட்டின்

பதிப்பாளர்-ஆசிரியர்.யாரோ எழுதி அதை தெரியாமல் பிரசுரித்துவிட்டோம் என்று கூறமுடியாது.

கண்ணன் தன் கட்டுரைக்கு சான்றாக காட்டும் EPW இதழில் வெளியான கட்டுரைக்கும், கண்ணன் முன்வைத்துள்ளவையும் முரண்படுகின்றன.அது மட்டுமல்ல EPW ல் இது குறித்து நடந்த விவாதத்தை கண்ணன் கருத்தில் கொள்ளவில்லை. கண்ணன் பின் நவீனத்துவம் பின் நவீனத்துவம் என்றே

எழுதுகிறார்.ஆனால் சர்ச்சை பின் நவீனத்துவம் மட்டும் குறித்த சர்ச்சையல்ல. இது இந்த சர்ச்சையை

குறித்து அறிந்த அனைவருக்கும் தெரியும்.கண்ணன் மேற்கோள் காட்டும் EPW கட்டுரையின் தலைப்பு

Modern Science and Progressive Agenda. இது EPW April 18,1998 இதழில் உள்ளது. பக்கம் 912.

இந்த ஒரு பக்க கட்டுரையில் post-modernist/cultural studies scholarship என்ற தொடரை கண்ணன்

பின் நவீனத்துவம் என்பதாக திரித்துள்ளார்.மேலும் இக்கட்டுரை science studies, cultural studies and assorted disciplines என்று குறிப்பிடுவதை கண்ணன் திரித்து பின் நவீனத்துவம் குறித்த சர்ச்சை இது என்று காட்ட முயல்கிறார். EPW கட்டுரை praising new thinkers in science studies என்பதுடன்

சோகல் Bruno Latur,David Bloor,E.F.Keller,Katherine Hayles ஆகியோர் மட்டுமன்றி அஷிஸ் நந்தி,

வந்தனா சிவா எழுதியுள்ளதையும் குறிப்பிடுவதை சுட்டிக் காட்டுகிறது. ஆனால் கண்ணன் இதையெல்லாம் குறிப்பிடுவதில்லை.கண்ணன் தெரிதா,லகான் என்ற பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறார். இவ்வாறு எழுதுவதன் மூலம் இது பின்நவீனத்துவம்,பின் நவீனத்துவவாதிகள் குறித்த ஒன்றே என்று நம்பவைக்க முயல்கிறார்.கண்ணன் ஆதாரம் காட்டும் கட்டுரை இதை பின் நவீனத்துவம் மட்டும் குறித்த கட்டுரையாகவோ அல்லது சர்ச்சையாக சித்தரிக்கவில்லை.அதில் சில தகவல் பிழைகள் இருந்தாலும் அது இச்சர்ச்சை தொடர்புடைய பிற துறைகளை குறிப்பிடுகிறது.அது மட்டுமல்ல கட்டுரை தலைப்பு சுட்டி காட்டுவது போல் இந்த சர்ச்சை முற்போக்கு செயல்பாடுகளும், நவீன அறிவியல் மீதான விமர்சனங்கள் குறித்த சர்ச்சையும் கூட.

கண்ணன்/காலச்சுவடு ஆசிரியர் குழு நான் எழுதியுள்ளதை மறுத்து, கண்ணன் எழுதியுள்ளது சரி என்று வாதிட்டால் EPW ல் வெளியான அந்தக் கட்டுரையை முழுமையாக வாசகர்கள் முன் நான் வைக்கிறேன்.இந்த இதழ்,EPW April 18,1998 இணையத்தில் இல்லை,ஆனால் இது தொடர்புடைய வேறு சில கட்டுரைகள் EPW தளத்தில் உள்ளன (www.epw.org.in).EPW இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் படிக்கபடுவது.இந்தியாவில் பல கல்லூரிகள்/பல்கலைகழக நூலகங்களில் கிடைப்பது.கல்வித்துறை வட்டாரங்கள் தவிர பரவலாகவும் படிக்கப்படும் இதழ்.கண்ணன் குறிப்பிடும் இதழை நான் அமெரிக்கப் பல்கலைகழகம் ஒன்றின் நூலகத்தில் எளிதில் பெறமுடிந்தது.உலகெங்கும் உள்ள தமிழர்கள் இவ்வாறு EPW இதழைப் படித்து காலச்சுவட்டில் வெளிவந்துள்ளதுடன் ஒப்பிட முடியும் என்பதை அவருக்கு இதன் மூலம் நான் தெரியப்படுத்துகிறேன்.தெற்காசியா,குறிப்பாக இந்தியா குறித்த முக்கியமான வெளியீடுகளில் ஒன்று EPW.சமூக அறிவியலில் இந்தியாவிலிருந்து வெளிவரும் மிக முக்கியமான வெளியீடுகளில் ஒன்று அது.

கண்ணன் குறிப்பிடுவது போல் ‘அலன் சோக்கல்,மீரா நந்தா போன்றவர்கள் ‘ அதில் எழுதவில்லை. அந்த ஒரு பக்க கட்டுரையும், இவர்கள் இருவர் எழுதிய கட்டுரைகள் மட்டுமே அந்த இதழில் இது குறித்துப் பேசுகின்றன. (Truth,Reason and The Left-Alan Sokal 913-914,Reclaiming Modern Science For Third World Progressive Social Movements Meera Nanda 915-922). உண்மையில் இந்த ஒரு பக்க கட்டுரையும், சோகல், நந்தா கட்டுரைகள் வெளிவருவதற்கு முன்பே 1997ல் Gita Chadha Sokal ‘s Hoax and Tensions in Academic Left என்ற கட்டுரையில் இந்த சர்ச்சையை விவாதித்திருக்கிறார்(EPW Vol 32 N0 35). மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோகல் கட்டுரைக்கு அவர், கீதா தன் எதிர்வினையை எழுதியுள்ளார்( ‘Sokal ‘s Hoax: A Backlash to Science Criticism ‘,EPW VOL 33 NO 47-48 Nov21-Dec 4,1998 P2964-2968). இதற்கு சோகல் பதில் எழுதியிருக்கிறார்.Setting the Record Straight: A Response to Gita Chadha, April 8, 2000.இது தவிர சுந்தர் சருக்கை,மீரா நந்தா ஆகியோரும் இது குறித்து எழுதியுள்ளனர்.இது தொடர்பான கட்டுரைகள், (மீரா நந்தா எழுதிய கட்டுரை, 1996 ல் வெளியானது உட்பட ) பட்டியல் கீழே:(ஆதாரம்:http://www.physics.nyu.edu/faculty/sokal/)

‘The Science Question in Post-Colonial Feminism ‘, by Meera Nanda (Economic and Political Weekly, April 20, 1996)

‘Sokal ‘s Hoax and Tensions in Scientific Left ‘, by Gita Chadha (Economic and Political Weekly, August 30, 1997)

‘Truth, Reason, Objectivity and the Left ‘, by Alan Sokal (Economic and Political Weekly, April 18, 1998)

‘Reclaiming Modern Science for Third World Progressive Social Movements ‘, by Meera Nanda (Economic and Political Weekly, April 18, 1998)

Review of ‘Naked Science: Anthropological Inquiry into Boundaries, Power, and Knowledge ‘ (edited by Laura Nader), by Andrளூ Gunder-Frank (Economic and Political Weekly, October 17-24, 1998)

‘Sokal ‘s Hoax: A Backlash to Science Criticism ‘, by Gita Chadha (Economic and Political Weekly, November 21, 1998)

‘Science, Knowledge and Society ‘, by Sundar Sarukkai (Economic and Political Weekly, April 2, 1999)

‘Debate over Science: Moving Past Politics of Nostalgia ‘, by Meera Nanda (Economic and Political Weekly, May 1, 1999)

‘Setting the Record Straight: A Response to Gita Chadha ‘, by Alan Sokal (Economic and Political Weekly, April 8, 2000) .

‘Breaking the Spell of Dharma: A Case for Indian Enlightenment ‘, by Meera Nanda (Economic and Political Weekly, July 7, 2001)

முதலும், முடிவும் தெரியாமல் ஒரு பக்கக் கட்டுரை ஒன்றை வைத்துக் கொண்டு அதில் உள்ளதை மறைத்து, திரித்தும் எழுதுகிறார் கண்ணன்.EPW வில் இது குறித்து கட்டுரைகள் இனியும் வெளியாகலாம்.இந்தக்

கட்டுரைகள் தலைப்புகளைப் பார்த்தாலே இது அறிவியல் குறித்த, அறிவியல் குறித்த விமர்சனங்கள் குறித்த சர்ச்சை என்பது புலனாகும்.உதாரணமாக மீரா நந்தா எழுதிய முதல் கட்டுரை அறிவியலும், பின் காலனித்திய பெண்ணியம் குறித்த கட்டுரை.இது தவிர science wars குறித்து வேறு பல கட்டுரைகளை பல வெளியீடுகளில் அவர் எழுதியுள்ளார்.இந்த சோகல் சர்ச்சையைப் பற்றி Frontline ல் ஜெயராமன் எழுதியிருக்கிறார்.அதை இணையத்தில் கீழ்கண்ட முகவரியில் காணலாம்.

http://www.imsc.res.in/~jayaram/Sokal/sok1/sok1.html

விஷயம் இப்படியிருக்க கண்ணன் மலையை சில சோற்றுபருக்கைகளால் மறைத்துவிடலாம் என நினைக்கிறார்.

2

EPW கட்டுரையில் சில தகவல் பிழைகள் உள்ளதாகக் குறிப்பிட்டேன்.Social Text ஆசிரியர் குழு இந்தக் கட்டுரையை பரீசிலிக்காமல்,பெயர்களை கண்டு மயங்கி பிரசுரிக்கவில்லை.அவர்களுக்கு இது ஒரு ‘பரிசோதனை ‘ என்று தெரியாது.கட்டுரையைப படித்து,சோகலுடன் விவாதித்தே அவர்கள் அதை பரிசீலித்துள்ளார்கள்.அதை உடனடியாகவெளியிடவில்லை. Science Wars சிறப்பிதழுக்கு பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்தார்கள்.இது குறித்து social text சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளதை இணையத்தில் காணலாம்.

http://www.math.tohoku.ac.jp/~kuroki/Sokal/sokaltxt/00005.txt

http://www.nyu.edu/pubs/socialtext/sokal.htm

ஆங்கிலத்தில் உள்ள இதை நான் மொழிபெயர்த்து தரலாம், ஆனால் விரிவஞ்சி அதைத் தவிர்க்கிறேன்.மேலும் சோகல் இது குறித்து எழுதியுள்ளார்.அதை அவரது இணையதளத்தில் காணலாம்.EPW கட்டுரையின் மையக்கரு ஏன் இந்தக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது என்பதை விட இந்த சர்ச்சையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளும், அவை குறித்த விவாதங்களும்தான். சோகல் எழுதியுள்ளது, social text சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள பதில் இரண்டும் பின் நவீனத்துவம் மட்டும் குறித்துப் பேசவில்லை.இந்தக் கட்டுரை Science Wars இதழில் வெளியிட ஏன் முடிவு செய்தோம் என்பதையும் அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்.இந்த Science Wars குறித்து கண்ணன் ஒரு வரி கூட எழுதவில்லை.இந்த சிறப்பிதழில் உள்ள கட்டுரைகள் பட்டியல், எதற்காக இந்த இதழ் என்பதை இணையத்தில் காணலாம்

http://www.nyu.edu/pubs/socialtext/sciencewars.html

இந்த இதழில் கட்டுரை எழுதியுள்ளவரகள் மானுடவியல்,அறிவியல் ஆய்வுகள்,சமூகவியல்,உயிரியல், கலாச்சார ஆய்வுகள்,science studies, science and technology studies, பெண்ணியம் உட்பட பல துறைகள்/ஆய்வுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.சோகல் உட்பட சிலர் வெளிப்படையாக தங்களை இடது சாரி என்று தெரிவிப்பவர்கள் (உ-ம் Stanley Aronowitz,Richard Levins).வேறு சிலர் அறிவியல்-தொழில்நுட்பம்-சமூகம் குறித்து முக்கியமான ஆய்வுகளை செய்திருப்பவர்கள்(உ-ம் Langdon Winner,Dorothy Nelkin,Les Levidow), பெண்ணியம்-அறிவியல்

குறித்து எழுதியுள்ள Sarah Franklin, Ruth Hubbard, Hilary Rose, Sandra Harding,அறிவியல் குறித்த சமூகவியலிலும், அறிவியல் குறித்த தத்துவம் குறித்தும் எழுதியுள்ள Steve Fuller, அறிவியல் குறித்த மானுடவியல் ஆய்வுகளை செய்துள்ள Emily Martin,Sharon Traweek, cultural studies/literary studies துறைகளை சேர்ந்த Andrew Ross,George Levine என்று பலதுறையினர், பல்வேறு கண்ணோட்டங்களை முன்வைக்கும் அறிஞர்கள் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளை பின் நவீனத்துத்துவக் கட்டுரைகள் என்ற ஒரு வகைக்குள் கொண்டுவரமுடியாது. அந்த இதழைப்

படித்தவர்களுக்கு இது புரியும். மேலும் இதில் எழுதியுள்ள பலர் உலக அளவில் புகழ் பெற்றவர்கள்.த்ததம் துறைகளில் முன்னோடியான ஆய்வுகளை செய்துள்ளவர்கள்.உதாரணமாக SCIENCE AND FEMINISM

குறித்து Sandra Harding எழுதியுள்ளதை விமர்சிக்கலாம், புறக்கணிக்க முடியாது.மீரா சிவ நந்தா அஷிஸ் நந்தி, வந்தனா சிவா எழுதியுள்ளதை விமர்சிக்கிறார்.இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களும், மக்கள் அறிவியல் இயக்கங்களும் ஹிந்த்துவ அரசியலையும், வேத கணிதம் போன்றவற்றை பல்கலைகழகங்களில் கற்பிக்க முயற்சிப்பதை எதிர்கின்றன. மீரா இது குறித்து மட்டும் பேசுவதில்லை, மாறாக அறிவியல் குறித்த பெண்ணிய விமர்சனங்கள் மீதும் தன் விமர்சனத்தை முன்வைக்கிறார்.பகுத்தறிவு,காரணம் போன்றவற்றின் மீது வைக்கப்படும் விமர்சனம் வலது சாரி அரசியலுக்கு உதவுகிறது என்ற நிலைப்பாட்டை முன்வைக்கிறார். அவர் கட்டுரைகளில்

பின் நவீனத்துவம் குறித்து மட்டும் விமர்சனம் உள்ளது என்று கூற முடியாது.இதே போல்தான் சோகல் எழுதியுள்ள கட்டுரைகளையும் பின் நவீனத்துவம் மீதான விமர்சனம் மட்டுமே என்று கூற முடியாது. இந்த விவாதங்களில்

அறிவியல் மீதான பெண்ணிய விம்ர்சனங்கள், பின நவீனத்துவ வாதிகள் அறிவியல் குறித்து எழுதியுள்ள்வை,

அறிவியலின் வரலாறு,தத்துவம்,அறிவியல் ஆய்வுகள், என பலதுறைகளில் உள்ள கருத்துக்கள் சர்சிக்கப்படுகினறன.

பின் நவீனத்துவவாதிகள் சிலர் குறிப்பாக விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால் இடதுசாரிகளில் பின் நவீனத்துவத்தை

முற்றிலுமாக நிராகரிக்காமல் அதன் சாதகமான அம்சங்களை கருத்தில் கொள்பவர்கள் உண்டு.அதை விமர்சித்து நிராகரிப்ப்பவர்களும் உண்டு.இந்த விபரங்கள் இந்த சர்ச்சைகளை தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.

நவீன அறிவியல் மீதான பெண்ணிய ஆய்வுகள் கடந்த 25/30 ஆண்டுகளில் ஒரு புதிய புரிதலை முன்வைத்துள்ளன.E.F.Keller, Helen Longino,Sandra Harding,Hilary Rose,Donna Haraway,Banu Subramaniam,Lynda Birke,Ruth Hubbard,Sarah Franklin என்று ஒரு நீண்ட பட்டியல் தரமுடியும்.Donna Haraway எழுதியுள்ளவை science studies, feminism, cyberspace studies உட்பட பலதுறைகளில் உள்ள ஆய்வாளர்களால் முக்கியமானவை எனக் கருதப்படுபவை. பெண்ணியக் கோட்பாடுகள்/ஆய்வுகளில் அறிவியலில் தாக்கத்தினை

ஏற்படுத்தியுள்ளன(1).

பலதுறைகளை சார்ந்தவர்கள் அறிவியலும்,பெண்ணியமும் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.உதாரணமாக என் நண்பர் பானு சுப்பிரமணியம் Evolutionary Ecology யில் முனைவர் பட்டம் பெற்றவர்.பெண்ணியம்,அறிவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர்/கொள்பவர்.சமீபத்தில் signs இதழில் இவருடன் நடத்தப்பட்ட ஒரு உரையாடல் வெளியாகியுள்ளது. அறிவியல் மீதான பெண்ணிய விமர்சனங்கள்/ஆய்வுகள் பல்கலைகழக வட்டாரங்களில் பாடத்திட்டங்களில் இடம் பெறுவது இன்று சர்வ சாதாரணம்.

இது போல் science studies,sociology of science, philosophy of science,history of science,anthropology,science technology studies என பல துறைகளில் கடந்த 35/30 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள், முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள் நவீன அறிவியல் குறித்து பல கேள்விகளை எழுப்பின. அறிவியல் எனும் செயல்பாடு, அறிவியல் கோட்பாடுகள் நிரூபிக்கப்படும் விதம், அறிவியல் ஆய்வுகளில் உள்ள மெய்காண் முறை -இவையெல்லாம் விரிவாக ஆராயப்பட்டன.அறிவியலாளர்களுடன் பரிசோதனைக்கூடங்களில் தங்கி அவர் செயல்படும் விதம் விரிவாக ஆராயப்பட்டது.இவை நவீன அறிவியலின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கின.இவை தொடர்ந்து புத்தகங்கள்,சஞ்சிகைகள், மாநாடுகள்,கருத்தரங்குகள் மூலம் கல்வி உலகில் பரவலாக தெரிய வந்தன.சில அறிவியலாளர்கள் இது குறித்து முணுமுணுத்தாலும் ஒரு இயக்கமாக இதை எதிர்க்கவில்லை.ஆனால் இதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமும், அறிவியல் குறித்த இந்த கண்ணோட்டங்கள்/விமர்சனம்ங்கள்.அறிவியலுக்கு எதிரானவை என்ற கருத்தும் வலுப்பெற்றது. ஒரு திருப்புமுனையாக The Higher Superstition(2) என்ற நூல் வெளியானது.இதைத் தொடர்ந்து கருத்தரங்குகள், வேறு சில நூல்கள் வெளியாயின. அதே சமயம் வலதுசாரிகள் கை அமெரிக்காவில் ஒங்கியிருந்தது.வலதுசாரிகள் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகளை பெருமளவில் கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்ட போது அதை எதிர்த்து பசுமை இயக்கங்கள், நவீன அறிவியல் மீதான விமர்சகர்கள் குரல் கொடுத்தனர். இந்தப் பிண்ணனியில் வெளியானது Science Wars சிறப்பிதழ். அறிவியலாளர்களுக்கும், social sciences/humanities துறைகளில் உள்ள நவீன அறிவியல் விமர்சகர்களுக்கும் நடந்த,நடக்கும் கருத்துப் போர்தான் Science Wars. நான் இதை சுருக்கிக் கொடுத்துள்ளேன்.

அறிவியல் போர் குறித்து எழுத வேண்டுமெனறால் ஒரு நூல்தான எழுத வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் இது பற்றி பல நூல்கள், கட்டுரைகள் உள்ளன.உத்தேசமாக சொலவதென்றால் ஆங்கிலத்தில் சுமார் 30 புத்தகங்கள்,200 கட்டுரைகள் அறிவியல் போருடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவை.இதில் சர்சிக்கப்பட்ட்வரகளின் நூற்களை நான் சேர்க்கவில்லை.இந்த சர்ச்சை தொடர்புடைய நூல்கள்,கட்டுரைகள் பற்றியே குறிப்பிடுகிறேன்.(இரண்டு தகவல்தொகுப்புகளில் தேடியபின் ஒரு உத்தேசமாகவே இதை முன்வைக்கிறேன்).

சோகல் கட்டுரை எழுப்பிய சர்ச்சை குறித்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள், சுமார் 20 புத்தகங்கள் உள்ளன. இரண்டும் தொடர்புடைய நூல்கள்,கட்டுரைகளும் உள்ளன.இவையெல்லாம் பல்வேறு கண்ணோட்டங்களில்,பல் வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டவை.இதை பின் நவீனத்துவம் குறித்த சர்ச்சையாக குறுக்க முடியாது.சோகல் கட்டுரை,அதற்கான எதிர்வினைகள் உலகின் பல நாடுகளில் சர்ச்சிக்கப்பட்டன.இன்றும் இந்த சர்ச்சைகள் குறித்து நூல்கள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் கண்ணன் எழுதுகிறார்: ‘ மேற்படி நிகழ்வு பின் நவீனத்துவம் பற்றிய பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது ‘.

பின் நவீனத்துவம் சர்ச்சையின் ஒரு பகுதிதான்.இதை EPW வில் வெளியான கட்டுரைகளை மட்டும் கருத்தில் கொண்டே நிரூபிக்க முடியும்.கண்ணன் அறிவியல் போர்கள் குறித்து ஒரளவு விரிவாகக் கூட எழுதவில்லை.ஆனால் சோகல் எப்படி ஏமாற்றினர் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.சோகல் எழுதியுள்ளது குறித்த அவரது புரிதலும் கேலிக்குரியதுதான்.ரோசா வசந்த் கண்னன் எழுதியுள்ளது எவ்வளவு அபத்தம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.(http://www.geotamil.com/forum/topic.asp ?TOPIC_ID=11&whichpage=21)

சோகல் கட்டுரை இணையத்தில் உள்ளது.EPW கட்டுரையை கண்ணன் படித்துவிட்டு மூலப் பிரதி என்ன சொல்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் தான் பெரிய மேதாவி போல் எழுதியிருக்கிறார். அது மட்டுமல்லாது கறுப்பு தொகுப்பில் அந்தக் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக

எழுதியுள்ளார்.இவர் மூலக்கட்டுரையைப் படித்துவிட்டு இந்த முடிவிற்கு வந்தாரா ? அப்படித் தெரியவில்லை. ஏனெனில் மூலக்கட்டுரையை படித்ததற்கான சான்று எதுவும் அவர் எழுதியதில் இல்லை. EPW ல் வெளியானதை, அதுவும் ஒரு இதழில் வெளியான ஒரு பக்க கட்டுரையை மட்டும் படித்துவிட்டு எழுதியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

சோகல் கட்டுரையை நானும் படித்திருக்கிறேன்.அதை தமிழில் மொழிபெயர்ப்பது கடினம்.அதற்கான கலைச்சொற்கள் தமிழில் உள்ளனவா என்ற கேள்வியுடன், தமிழில் சோகல் மேற்கோள் காட்டும் பலவற்றை தருவது மிகவும்

கடினம்.கட்டுரையின் நடை சாதாரணக் கட்டுரைகளைப் போன்றது அன்று.பகடி செய்யும் முயற்சி என்பதால்

அத்தகைய நடையில் கட்டுரை உள்ளது.கறுப்பு தொகுப்பை நான் படித்ததில்லை/பார்த்ததில்லை.எனவே இந்த

மொழிபெயர்ப்பு குறித்து எனக்கு சந்தேகம் எழுந்தது.தமிழில் முழுக் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளதா அல்லது ஒரு பகுதி வெளியாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. பதிவுகள் விவாத களத்தில் டி சே தமிழன் கறுப்பில் உள்ள கட்டுரை பிரவீண் என்பவரால் இயன்றளவு சுருக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது* என

தெளிவுபடுத்தியுள்ளார். * Trnasgressing the boundaries,Quantum Mechanics,-Quantum Gravity -Towards a Liberatory Science என்ற தலைப்புகளில் (http://www.geotamil.com/forum/topic.asp ?TOPIC_ID=11&whichpage=21)

இப்போது கண்ணன் எழுதியுள்ளதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.மூலக்கட்டுரையைப் படித்து இந்த முடிவிற்கு வந்ததாக கண்ணன் வாதிட்டால் அதை நிரூபிக்கட்டும்.கட்டுரை சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்றால் தான் எழுதியது பொய் என்பதை ஒப்புக்கொள்ளட்டும்.

மேலும் மூலக்கட்டுரையையோ அல்லது அது குறித்த சர்ச்சையைப் பற்றி ஏதும் அறியாத போது EPW கட்டுரை கூறுவதை திரிக்காமல் நேர்மையாக எழுதியிருந்தாலவது பரவாயில்லை.ஆனால் அவர் உண்மைகளை மறைத்து,தகவல்களை திரித்து,பல்வேறு துறைகள்/கண்ணோட்டங்கள் குறித்த சர்ச்சையை பின் நவீனத்துவம்

குறித்த சர்ச்சையாக மட்டும் சித்தரிப்பது ஏன்.பின் நவீனத்துவவாதிகள் முட்டாள்கள் என்பதை மறைமுகமாக

சொலவதற்காக இல்லை தான் ஏதோ பின் நவீனத்துவவாதிகள் செய்த பெரும் தவறை துப்பறிந்து கண்டுபிடித்ததாக காட்டிக் கொள்ளவா.

இது இணைய யுகம்,தமிழர்கள் உலகெங்கும் உள்ளார்கள், EPW இதழ்களை இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ தேடிப்படிப்பது எளிது, இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, பல துறை இதழ்கள்/சஞ்சிகைகளில்

விவாதிக்கப்பட்ட சர்ச்சை.கண்ணன் இப்படி எழுதியிருப்பது நேர்மையற்ற செயல்.தமிழ் சூழலில் செயல்படும் சிலர் மீது பழி சுமத்துவதற்காகவும், அவர்களை கேலி செய்யவும் அவர் இவ்வாறு எழுதியிருப்பது காலச்சுவட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.அவர் அதன் பதிப்பாளர்-ஆசிரியர் எனும் போது காலச்சுவடு மீது எப்படி நம்பிக்கை,மதிப்பு ஏற்படும்.இந்த சர்ச்சையைப் பற்றி அறிந்த ஒருவருக்கு நான் காலச்சுவடு இணையத்தில் உள்ளது படியுங்கள் என்றால் அவர் படித்துவிட்டு இதையா படிக்க சொன்னீர்கள் இதுதானா தமிழ்சூழ்லின் அறிவின், நேர்மையின் தரம் என்று எதிர்கேள்விதான் கேட்பார்.

காலச்சுவடும்,கண்ணனும் வாசகர்களிடம் மன்னிப்பினைக் கோரி, இந்த சர்ச்சையைக் குறித்த ஒரு விரிவான,

நேர்மையாக எழுதப்பட்ட கட்டுரையை வெளியிடலாம்.கறுப்பு தொகுப்பில் உள்ள கட்டுரை முழுமையான மொழிபெயர்ப்பு அல்ல என்ற போது அது குறித்தும் வருத்தம் தெரிவித்து, அவ்வாறு எழுதியது தவறு என்று ஒப்புக்கொண்டு கறுப்பு தொகுப்பு சம்பந்தப்ட்டவர்களை குறித்து எழுதியது சரியல்ல என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் காலச்சுவட்டின் நம்பகத்தன்மை ஒரளவேனும் காக்கப்படும்.

காலச்சுவட்டின் அனைத்து இதழ்களையும் நான் படித்ததில்லை.படித்த அளவில் காலச்சுவட்டில் வெளியானவை

எல்லாம் விமர்சனத்திற்கும், கேலிக்கும் அப்பாற்பட்டவை அல்ல என்று சொல்ல முடியாது.காலச்சுவட்டில் ஒரு அபத்தமான பிரச்சாரக் கதை ஏதோ பெரிய தத்துவத்தை கூறும் தொனியில் எழுதப்பட்டு வெளியாகியுள்ளது.

அது போல் நகைப்புக்குரிய,அபத்தமான கருத்துக்களை கொண்ட கட்டுரை ஒன்றையும் என்னால் சுட்டிக்காட்ட

முடியும்.இவ்வாறு இருக்கும் போது காலச்சுவடு கறுப்பு தொடர்புடையவர்கள் குறித்து அவ்வாறு எழுதியிருப்பதை

என்னவென்று சொல்வது.

அறிவியல் தொழில் நுட்பம்,சமூகம் குறித்து தொடர்ந்து படித்தும்,எழுதியும் வருபவன் நான்.இந்த சர்ச்சையை அதன் ஆரம்பம் முதல் கவனித்து வருபவன்.இந்த சர்ச்சையில் பேசப்படுகிற பலரது நூற்களையும்,கட்டுரைகளையும் படித்தவன்/படிப்பவன்.அது மட்டுமின்றி அவற்றின் சிறப்பை அறிந்தவன்.என்னால் இந்த சர்ச்சையில் முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளையும்/கண்ணோட்டங்களையும் முழுமையாகப் புரிந்து கொண்டு விட்டேன் என்று கூற முடியாது.அதே சமயம் சர்ச்சை எவைப்பற்றியது என்பது தெரியும்.கிட்டதட்ட 12 துறைகள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் இவை.இதை வெறும் பின் நவீனத்துவம் குறித்த சர்ச்சையாக ஒருவர் சித்தரித்தால் அது பச்சைப் பொய் என்பது எனக்குத் தெரியும்.அது மட்டுமல்ல இங்கு கண்ணன் அறியாமையால் இதை எழுதவில்லை, வேண்டுமென்றே திரித்தும்,மறைத்தும் எழுதியுள்ளார். அறிவியல் தொழில்நுட்பங்கள் மீதான பெண்ணிய விமர்சனங்கள் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரையை 1988(89 ?) ல் தமிழில் எழுதினேன்.Feminism and Science குறித்து நான் தொடர்ந்து அக்கறைகாட்டி வருகிறேன்.இது போல் இச்சர்ச்சையில் தொடர்புடைய பல துறைகள் மீது கவனம் உண்டு.இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட பலருடன் எனக்கு தொடர்பிருந்த்து அல்லது இருக்கிறது. இப்படியிருக்கும் போது தமிழில் இப்படி பட்ட கட்டுரை வெளிவருவம் போது நான் கருத்து சொல்வது தவிர்க்க இயலாதது.அவ்வாறு சொல்லாவிட்டால் அது நான் ஒரு மோசடிக்குத் துணை போவதற்கு ஒப்பாகும்.

இந்த சர்ச்சை தொடர்புடைய சில இணையதளங்கள்

http://www.nyu.edu/pubs/socialtext/sokal.html

http://www.drizzle.com/~jwalsh/sokal/articles/articles.html

http://www.keele.ac.uk/depts/stt/stt/sokal.htm

http://www.physics.nyu.edu/faculty/sokal/

Intellectual Impostures-Alan Sokal and Jean Bricmont எழுதிய நூல்

இதை திண்ணையில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன், விரிவாக அல்ல.இந்த சர்ச்சைகள் குறித்த சில புத்தகங்கள்,கட்டுரைகளை தனியாக வேறொரு கட்டுரையில் பட்டியலாகத் தர உத்தேசித்துள்ளேன்.

social text அந்தக் கட்டுரையை வெளியிட்டது சரியா ?சோகல் அப்படி ஒரு கட்டுரையை எழுதி ஒரு நாடகம்

நடத்தியது முறைதானா ? இது போல் பல கேள்விகள் உள்ளன. மேலும் அறிவியல் போர்கள் சர்ச்சையில் முன்வைக்கப்பட்ட/படும் கருத்துக்களுக்கும் C.P.Snow எழுதிய Two Cultures என்ற நூலில் கூறப்பட்டுள்ள

கருத்துக்களுக்கும் தொடர்புண்டா ? ஆம் ஒரளவிற்கு.ஒரு நீண்ட கட்டுரை மூலம் இவற்றை ஒரளவிற்கு

வாசகர்கள் முன்வைக்க முடியும்.ஆனால் இது குறித்து, அதாவது சோகல் கட்டுரை எழுப்பிய சர்ச்சை,அறிவியல்

போர்களின் பிண்ணனி குறித்து ஆங்கிலத்தில் உள்ள ஒரு நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால்

400 பக்கங்களாவது வரும்.இந்தியச் சூழலில் நடைபெற்ற விவாதங்கள்,அவற்றின் பின்னணிகளையும் சேர்த்து

எழுதினால் நூல் 500 அல்லது 550 பக்க அளவிற்கு நீண்டு விடும்.உதாரணமாக இந்தியாவில் 1980 களின் துவக்கத்தில் அறிவியல் மனோபாவம் குறித்த அறிக்கை மீதான விவாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இது குறித்த ஒரு நூல் தமிழில் வெளியானது.இன்று விற்பனைக்கு கிடைக்கிறாதா என்பது கேள்விக்குறி ? மொழிபெயர்த்து வெளியிடுவது எளிதல்ல.ஏனெனில் தமிழில் கலைச்சொற்கள் இல்லை. கோட்பாடுகள்

பல குறித்து நானறிந்த வரையில் தமிழில் ஒரு அறிமுகக்கட்டுரை அல்லது நூல் கூட இல்லை.அறிவியலின் தத்துவம் குறித்து தமிழில் எத்தனை நூல்கள்/கட்டுரைகள் உள்ளன.அவற்றில் எத்தனை நூல்கள்/கட்டுரைகளில்

Thomas Kuhn முன் வைத்த கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன, Paul Feyeraband ன் நூல்கள்

குறித்த விவாதம் உள்ளது. அறிவியல் குறித்த ஒரு முக்கியமான விவாதம் பற்றிய ஒரு அறிமுகக் கட்டுரையைக் கூட தமிழில் தருவது எளிதல்ல என்ற நிலை குறித்து யோசிக்க வேண்டும்.

கண்ணன் குறைந்தபட்சம் EPW ல் வெளிவந்த கட்டுரைகளில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை தொகுத்து இந்தப் பிண்ணனியைக் கூடத் தெரியாமல் கறுப்பு தொகுப்பாளர்கள் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு பக்கக் கட்டுரையில் உள்ள தகவல்களைக் கூட திரித்து எழுதுகிறார்.கறுப்பு தொகுப்பாளர்கள் இந்தக் கட்டுரையை ஏன் வெளியிட்டோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.பின்ணனி தெரியாமல் இக்கட்டுரையை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவ்வாறு செய்திருக்கலாம்.

(1) இது குறித்த ஒரு புரிதலுக்கு L.Schiebinger(1999) Has Feminism Changed Science Hardvard University Press என்ற நூலைக் காண்க.சமீபத்தில் வெளியான signs இதழிலும் இது குறித்த கட்டுரைகள் உள்ளன.

(2)The Higher Superstition:The Academic Left and Its Quarrels With Science P.Gross,N.Levitt 1994

Johns Hopkins University Press. Academic left என்பதை கீழ்கண்டவாறு இவர்கள் வரையரை செய்கிறார்கள்

‘to designate those people whose doctrinal idiosyncrasies sustain the misreadings of science,its methods,and its conceptual foundations that have generated what now a days passes for a politically progressive critique of it ‘

K.Ravi Srinivas

http://in.geocities.com/ravisrinivasin

Series Navigation