காரியம் தொடர் காரணம்

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

க.செ.வெங்கடேசன்-அபுதாபி


காரியம் தொடர் காரணம்
தொடர்ந்த காரியத்தின்,
சங்கிலி தொடர்வான நிகழ்வை
பரம்சாற்றும் “மீமாம்ச” வேத சாரம் மறந்து,
அயல்மொழியின் பின்னே ஆர்பட்டதுடன்!..
“பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு”இல்.

“காலத்தின் சுருக்க வரலாறு” ஆங்கில வடிவில்,
ஆறறிவு அறிவியலின் பால் அறியும்,
ஒளி வேக பயணம்-வயது இன்மையாய்…
தாய் மொழி வாய் வழி கதை
கடவுளுக்கு வயதில்லை!
கடவுளின் பயணம்-ஒளியின் உச்சம்,…
என்பதை மறந்து.

அணுவை உடைக்கும் ஐரோப்பிய
ஆராய்ச்சியை நம்பும் ஆறறிவு,
ஆராய்ச்சியின் முடிவு
“அத்”, “த்”, வைதமாய் கீதையில் உள்ளதை,
அறியாமை என்று மறுதலிக்க.

படித்தவை அனைத்தும் கேள்வியாய்?…
ஏழறிவு பரிணாமம் தொடங்கிடுமோ!?,
ஆறறிவின் மரணம் வாய்க்க.

நிகழ்கால அறிதல் கூட,
எதிர்மறையாகலாம்!.
ஏழறிவின் பரிணாமத்தால்ஸஸஸ.

நிகழ்கால வாழ்வின்
அறிவியல்,அறிவு இயல், அறியும் இயலின்
தத்துவம் நீங்குதல்
இனிதிலும் இனிதே!…

………….

Series Navigation

க.செ.வெங்கடேசன்-அபுதாபி

க.செ.வெங்கடேசன்-அபுதாபி