காய்கறி சவ்டர்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

கிழக்கு அமெரிக்காவின் ஒரு வகை சூப்


தேவையான பொருட்கள்

3 மேஜைக்கரண்டி டால்டா

1 வெங்காயம் பெரியது, தூளாக நறுக்கியது

3 உருளைக்கிழங்குகள் பெரியது. சிறியதாக நறுக்கிக்கொண்டது

3/4 கோப்பை செலரித் துண்டுகள்

2 கோப்பை தூளாக வெட்டிய காரெட்டுகள்

2 தேக்கரண்டி உப்பு

1/8 தேக்கரண்டி கருமிளகுத் தூள்

3 கோப்பை சிக்கன் ப்ராத்

3 கோப்பை பால்

1/2 தேக்கரண்டி காய்ந்த கொத்துமல்லி இலைகள்

1/4 கோப்பை குளிர்ந்த தண்ணீர்

1/4 கோப்பை சோளமாவு

செய்முறை

டால்டா அல்லது வெண்ணெயை ஒரு பெரிய பாத்திரத்தில் உருக்கிக்கொண்டு அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்

இத்துடன் செலரி, காரட் துண்டுகளைப் போட்டு 10 நிமிடங்கள் வதக்கி, பின்னர் அதில் சிக்கன் பிராத், உருளைக்கிழங்குகள், உப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கொதி வரும் வரை வைக்கவும். கொதி வந்ததும், மெதுவான தீயில் 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்து எல்லாக் காய்கறிகளும் மென்மையாகும் வரை வைக்கவும்.

இதில் பால், கொத்துமல்லி சேர்த்து கொதி வரும் வரை வைக்கவும்

தனியான இன்னொரு பாத்திரத்தில் சோளமாவை குளிர்ந்த நீரில் கரைத்து நன்றாக கரைந்ததும், சூடான சூப்புடன் சேர்த்து பரிமாறவும்.

***

Series Navigation

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை