காதல் பகடை

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

மீனாக்ஸ்


அழகிய நிலவொளி.. ஆர்ப்பரிக்கும் கடல்..

அருகில் என் ஆருயிர்த் தோழி..

அலைகளை ரசித்துக் கொண்டிருந்தவள்

திடாரெனக் கேட்டாள்..

‘காதலைப் பற்றி ஒரே வரியில்

சொல்லடா பார்ப்போம்.. ? ‘

‘தோழி!

உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்..

ஆனாலும் உன்னிடத்தில் ஒரு சிறு குறை..

நீ காதல் வயப்பட்டிருக்கிறாய் – எப்பொழுதும்

காதலைப் பற்றியே பேச விழைகிறாய்.. ‘

அவள் கன்னம் சிவக்க

விழிகளில் வெட்கத்தைக் காட்டி,

‘குறையோடே இருந்துவிட்டுப் போகிறேன்..

கேட்டதற்கு பதில் சொல்!! ‘ என்றாள்..

நான் யோசித்தேன்..

‘காதலைப் பற்றி ஒரே வரியிலா ?

எனக்குத் தெரியவில்லை.. நீயே சொல்.. ‘

‘ம்ம்.. அப்படி வா வழிக்கு..!

கேட்டுக்கொள் –

காதல் என்பது

மனசுக்கு இதம் தரும் குளிர்ந்த நிலவு!

புரிந்ததா ? ‘

நான் சிரித்தேன்..

அவள் துடித்தாள்..

கோபத்தோடு அவள் நாவிலிருந்து

வார்த்தைகள் தெறித்து விழுந்தன..

‘ஏன் சிரிக்கிறாய் ?

காதல் என்பது உனக்கு நகைப்புக்குரியதோ ? ‘

‘இல்லை தோழி,

காதல் என்பது

நிலவாக இருக்கலாம்..

ஆனால்

அன்பென்ற சூரியனிடமிருந்து

வெளிச்சச் சரக்கை

இரவல் வாங்கித் தான்

நிலவு ஒளிரும்..

நான் சூரியனின் ரசிகன்..

எனது விருப்பம் நிலவிடம் இல்லை..!!

காதல் என்பது குளிர்ந்ததாய் இருக்கலாம்..

இருந்தாலும்,

குளிர்ச்சி என்பது உறைய வைக்கும்..

செயலிழந்து உறைந்து போவதைக் காட்டிலும்,

இறந்து போவது மேல்.!! ‘

அவள் விடாமல் அடம் பிடித்தாள்..

‘சரிடா வார்த்தைச் சித்தா!

மாற்றிச் சொல்கிறேன்..

காதல் என்பது

மனசுக்கு மருந்து!! ‘

சொல்லிவிட்டு

எதிர்பார்ப்புடன் என்னைப் பார்த்தாள்..

நான் மறுபடி சிரித்தேன்..

அவள், தன் முகத்தில் கோபம் காட்டி,

‘என்னடா ? ஏன் மறுபடி சிரிப்பு ? ‘ என்றாள்..

நான் புன்னகையுடன் சொன்னேன்,

‘நான் எதிர்பார்ப்பது

மருந்துகளை அல்ல்..

நோய் எதிர்ப்பு சக்தியைத்தான்..!! ‘

அவள் முறைத்துப் பார்த்து,

‘குதர்க்கம் பேசுபவனே..

நோயும் இல்லாமல் காதலும் இல்லாமல்

நீ வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறாய் ?

செத்துப் போ..!! ‘ என்றாள்..

‘காதலித்தாலும்

தினம் தினம் அதைத் தானே

செய்ய வேண்டும்.. ? ‘

‘ஹூம்! உன்னையும் ஒருநாள்

காதல் விழுங்கும்..

அப்போது பேசிக் கொள்கிறேன்..!! ‘

‘வாய்ப்பில்லை தோழி..

இதுவரை எத்தனையோ

பெண்களைப் பார்த்திருக்கிறேன்..

எதுவும் நடக்கவில்லையே.. ‘

‘என் செல்ல மடையா!

இது வரை நீ பார்த்ததெல்லாம்

பெண்களைத்தான்..

காதலை அல்ல..

காதல் சொல்லிவிட்டு வருவதில்லை..! ‘

‘வரட்டும்.. பார்த்துக் கொள்கிறேன்..!! ‘

**********

வீட்டு ஜன்னலின் வழியே

வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்..

பக்கத்து வீட்டு வாசலில் பரபரப்பு..

புதிதாய்க் குடி வருகிறார்கள் போலும்..!

அழைப்பு மணி ஒலித்தது..

கதவைத் திறந்தேன்..

அவள் அழகான புன்னகையுடன் நின்றிருந்தாள்..

எனக்குள் பிரமிப்பு..

‘அட பிரம்ம தேவா!

அத்தனை அழகையும்

இவளுக்கே கொடுத்துப் படைத்து விட்டாயே..

மற்றவர்களுக்கெல்லாம் எப்படி சமாளிக்கிறாய் ? ‘

என் மனதுக்குள் சிலிர்ப்பு..

அந்த வீணை,

வாய் திறந்து பேசியது..

‘நாங்கள் பக்கத்து வீட்டுக்குப்

புதிதாய்க் குடி வந்திருக்கிறோம்..

பால் காய்ச்சும் போது

உங்களையும் கூப்பிடலாம் என்று வந்தேன்..

வீட்டில் அம்மா இல்லையா ? ‘

அவளை உள்ளே அழைத்து,

என் தாயை அங்கே அழைத்து,

ஓரத்தில் ஒதுங்கி நின்றேன்..

என் தாயை அழைத்து விட்டு,

என் பக்கம் திரும்பி,

தலையைக் குனிந்து,

கொஞம் வெட்கம் கலந்து,

கண்களைச் சிமிட்டி,

‘நீங்களும் வரவேண்டும்.. ‘ என்றாளே,

அந்தத் தருணத்தில்

எனக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்ததே..

அதற்குப் பெயர் தான் காதலா ?

**********

வகுப்பில் நுழைந்ததும்

என் தோழியின்

இடம் தேடிப் போய் அமர்ந்தேன்..

அவள் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து,

‘என்னடா ? ‘ என்றாள்..

‘தோழி!

காதல் என்பது

எங்கும் எப்படியும் நுழைந்து விடுமோ ? ‘

‘ம்! எனக்கே அப்படித்தான் ஆனது..

என் இதயத்தின் வாசலில்,

‘இது பொது வழி அல்ல ‘

என்று எழுதித்தான் வைத்திருந்தேன்..

காதல் சிரித்துக் கொண்டே,

‘நான் எங்கும் நுழைவேன் ‘

என்று கூறி என்னுள் புகுந்து கொண்டது..! ‘

நினைவுகளில் மூழ்கியவள்,

திடாரென நிமிர்ந்து, ஆச்சரியத்துடன்,

‘இதென்ன ?

நீ காதலைப் பற்றிப் பேசுகிறாய் ? ‘ என்றாள்..

நான் தலைகுனிந்து, வெட்கப்பட்டு,

‘தோழி!

இப்போது என்னிடமும் ஒரு சிறு குறை..!!

நானும் காதல் வயப்பட்டிருக்கிறேன்..

எப்போதும் காதலைப் பற்றியே பேச விழைகிறேன்..!! ‘

என்றேன்..

அவள் புன்னகைத்தாள்..

என் தலையில் செல்லமாகத் தட்டி,

‘இப்போதாவது புரிந்து கொள்..

காதலை உணராத மனிதன் என்று எவனுமே இல்லை..

காதலை உணராத எவனும் மனிதனே இல்லை..!! ‘ என்றாள்..

இருவரும் சேர்ந்து சிரித்தோம்..!!

– மீனாக்ஸ்

Series Navigation

காதல் பகடை

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

மீனாக்ஸ்


அழகிய நிலவொளி.. ஆர்ப்பரிக்கும் கடல்..
அருகில் என் ஆருயிர்த் தோழி..
அலைகளை ரசித்துக் கொண்டிருந்தவள்
திடாரெனக் கேட்டாள்..
‘காதலைப் பற்றி ஒரே வரியில்
சொல்லடா பார்ப்போம்.. ? ‘

‘தோழி!
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்..
ஆனாலும் உன்னிடத்தில் ஒரு சிறு குறை..
நீ காதல் வயப்பட்டிருக்கிறாய் – எப்பொழுதும்
காதலைப் பற்றியே பேச விழைகிறாய்.. ‘

அவள் கன்னம் சிவக்க
விழிகளில் வெட்கத்தைக் காட்டி,
‘குறையோடே இருந்துவிட்டுப் போகிறேன்..
கேட்டதற்கு பதில் சொல்!! ‘ என்றாள்..

நான் யோசித்தேன்..
‘காதலைப் பற்றி ஒரே வரியிலா ?
எனக்குத் தெரியவில்லை.. நீயே சொல்.. ‘

‘ம்ம்.. அப்படி வா வழிக்கு..!
கேட்டுக்கொள் –
காதல் என்பது
மனசுக்கு இதம் தரும் குளிர்ந்த நிலவு!
புரிந்ததா ? ‘

நான் சிரித்தேன்..
அவள் துடித்தாள்..
கோபத்தோடு அவள் நாவிலிருந்து
வார்த்தைகள் தெறித்து விழுந்தன..
‘ஏன் சிரிக்கிறாய் ?
காதல் என்பது உனக்கு நகைப்புக்குரியதோ ? ‘

‘இல்லை தோழி,
காதல் என்பது
நிலவாக இருக்கலாம்..
ஆனால்
அன்பென்ற சூரியனிடமிருந்து
வெளிச்சச் சரக்கை
இரவல் வாங்கித் தான்
நிலவு ஒளிரும்..
நான் சூரியனின் ரசிகன்..
எனது விருப்பம் நிலவிடம் இல்லை..!!
காதல் என்பது குளிர்ந்ததாய் இருக்கலாம்..
இருந்தாலும்,
குளிர்ச்சி என்பது உறைய வைக்கும்..
செயலிழந்து உறைந்து போவதைக் காட்டிலும்,
இறந்து போவது மேல்.!! ‘

அவள் விடாமல் அடம் பிடித்தாள்..
‘சரிடா வார்த்தைச் சித்தா!
மாற்றிச் சொல்கிறேன்..
காதல் என்பது
மனசுக்கு மருந்து!! ‘

சொல்லிவிட்டு
எதிர்பார்ப்புடன் என்னைப் பார்த்தாள்..
நான் மறுபடி சிரித்தேன்..
அவள், தன் முகத்தில் கோபம் காட்டி,
‘என்னடா ? ஏன் மறுபடி சிரிப்பு ? ‘ என்றாள்..

நான் புன்னகையுடன் சொன்னேன்,
‘நான் எதிர்பார்ப்பது
மருந்துகளை அல்ல்..
நோய் எதிர்ப்பு சக்தியைத்தான்..!! ‘

அவள் முறைத்துப் பார்த்து,
‘குதர்க்கம் பேசுபவனே..
நோயும் இல்லாமல் காதலும் இல்லாமல்
நீ வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறாய் ?
செத்துப் போ..!! ‘ என்றாள்..

‘காதலித்தாலும்
தினம் தினம் அதைத் தானே
செய்ய வேண்டும்.. ? ‘

‘ஹூம்! உன்னையும் ஒருநாள்
காதல் விழுங்கும்..
அப்போது பேசிக் கொள்கிறேன்..!! ‘

‘வாய்ப்பில்லை தோழி..
இதுவரை எத்தனையோ
பெண்களைப் பார்த்திருக்கிறேன்..
எதுவும் நடக்கவில்லையே.. ‘

‘என் செல்ல மடையா!
இது வரை நீ பார்த்ததெல்லாம்
பெண்களைத்தான்..
காதலை அல்ல..
காதல் சொல்லிவிட்டு வருவதில்லை..! ‘

‘வரட்டும்.. பார்த்துக் கொள்கிறேன்..!! ‘

**********

வீட்டு ஜன்னலின் வழியே
வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்..
பக்கத்து வீட்டு வாசலில் பரபரப்பு..
புதிதாய்க் குடி வருகிறார்கள் போலும்..!

அழைப்பு மணி ஒலித்தது..
கதவைத் திறந்தேன்..
அவள் அழகான புன்னகையுடன் நின்றிருந்தாள்..
எனக்குள் பிரமிப்பு..
‘அட பிரம்ம தேவா!
அத்தனை அழகையும்
இவளுக்கே கொடுத்துப் படைத்து விட்டாயே..
மற்றவர்களுக்கெல்லாம் எப்படி சமாளிக்கிறாய் ? ‘
என் மனதுக்குள் சிலிர்ப்பு..

அந்த வீணை,
வாய் திறந்து பேசியது..
‘நாங்கள் பக்கத்து வீட்டுக்குப்
புதிதாய்க் குடி வந்திருக்கிறோம்..
பால் காய்ச்சும் போது
உங்களையும் கூப்பிடலாம் என்று வந்தேன்..
வீட்டில் அம்மா இல்லையா ? ‘

அவளை உள்ளே அழைத்து,
என் தாயை அங்கே அழைத்து,
ஓரத்தில் ஒதுங்கி நின்றேன்..
என் தாயை அழைத்து விட்டு,
என் பக்கம் திரும்பி,
தலையைக் குனிந்து,
கொஞம் வெட்கம் கலந்து,
கண்களைச் சிமிட்டி,
‘நீங்களும் வரவேண்டும்.. ‘ என்றாளே,
அந்தத் தருணத்தில்
எனக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்ததே..
அதற்குப் பெயர் தான் காதலா ?

**********

வகுப்பில் நுழைந்ததும்
என் தோழியின்
இடம் தேடிப் போய் அமர்ந்தேன்..
அவள் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து,
‘என்னடா ? ‘ என்றாள்..

‘தோழி!
காதல் என்பது
எங்கும் எப்படியும் நுழைந்து விடுமோ ? ‘

‘ம்! எனக்கே அப்படித்தான் ஆனது..
என் இதயத்தின் வாசலில்,
‘இது பொது வழி அல்ல ‘
என்று எழுதித்தான் வைத்திருந்தேன்..
காதல் சிரித்துக் கொண்டே,
‘நான் எங்கும் நுழைவேன் ‘
என்று கூறி என்னுள் புகுந்து கொண்டது..! ‘

நினைவுகளில் மூழ்கியவள்,
திடாரென நிமிர்ந்து, ஆச்சரியத்துடன்,
‘இதென்ன ?
நீ காதலைப் பற்றிப் பேசுகிறாய் ? ‘ என்றாள்..

நான் தலைகுனிந்து, வெட்கப்பட்டு,
‘தோழி!
இப்போது என்னிடமும் ஒரு சிறு குறை..!!
நானும் காதல் வயப்பட்டிருக்கிறேன்..
எப்போதும் காதலைப் பற்றியே பேச விழைகிறேன்..!! ‘
என்றேன்..

அவள் புன்னகைத்தாள்..
என் தலையில் செல்லமாகத் தட்டி,
‘இப்போதாவது புரிந்து கொள்..
காதலை உணராத மனிதன் என்று எவனுமே இல்லை..
காதலை உணராத எவனும் மனிதனே இல்லை..!! ‘ என்றாள்..

இருவரும் சேர்ந்து சிரித்தோம்..!!

– மீனாக்ஸ்

Series Navigation