காதல் கழுமரம்.

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

எம்.கே.குமார்


மெல்ல கதவைத் தள்ளிக்கொண்டு
உள்ளே வரும் காற்று………

வயதுக்கு வந்ததை
வாசனையால் தெரியப்படுத்தும் பூக்கள்….

முயற்சி செய்து உன் சிரிப்பில்
தோற்றுப்போகும் மின்னல்……..

இறுக்கமான இடத்தைக்கூட
தொட்டுத்தடவிப்பார்க்கும் மழை நீர்……….

கால நேரமில்லாது வந்து என் மனதைக்
காவல் காக்கும் கனவுகள்…….

தூரத்திலே நின்று கொண்டாலும் ஏங்கும்போது
உன்னைத்தருவித்து எனக்குள் ஒதுங்கும் தூக்கம்…………..

என எல்லாமுமாய் என் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு
ஓடித்தான் வருகின்றன………..

எத்தனை தடவை…….இறந்தாலும் கண்டுகொள்ளாத
காதல் கழுமரம் உன்னைத்தவிர……………….

yemkaykumar@yahoo.com

Series Navigation

எம்.கே.குமார்

எம்.கே.குமார்