காஞ்சி சங்கராச்சாரியார் கைது

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

அருளடியான்


கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப் பட்டு இருக்கிறார். இவரது கைதை கண்டித்து பா. ?.கவைச் சேர்ந்த இல. கணேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது போலவே, திருவாடுதுறை ஆதினம் கைது செய்யப் பட்டபோது, அவருக்கு ஆதரவாக மயிலாடுதுறை பா. ?.க எம்.எல்.ஏ ெ ?க.வீரபாண்டியன் கருத்து தெரிவித்து இருந்தார். வீரப்பன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்யும் தமிழ் நாடு காவல்துறை இந்த பா. ?.க தலைவர்களை கைது செய்யுமா ? சங்கராச்சாரியார், தன் மடத்தின் பணத்தில் இருந்து ரூ.10 இலட்சத்தை வங்கியில் இருந்து எடுத்து கூலிப்படைக்கு கொடுத்துள்ளார். சங்கரமடத்துக்கு நன்கொடை தரும் வெளிநாட்டு இந்தியர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. சங்கர மடத்துக்கு எங்கிருந்தெல்லாம் பணம் வருகிறது என்பதையும், அது எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இந்திய ஆட்சியில் உயர் பதவியில் இருப்பவர்கள் இது போன்ற குற்றப்பின்னணி சாமியார்களை சந்திப்பதையும், அவர்கள் அமர்ந்திருக்கும் நிலையில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். இது மதச்சார்பற்றவர்களுக்கும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெரிதும் வேதனை தருவதாக உள்ளது.

சென்னையில் கைது செய்யப் பட்ட சதுர்வேதி சாமியார், கைதேர்ந்த தாதாக்களை விஞ்சும் கிரிமினல் ஆக இருந்திருக்கிறார். இவர் புராணக்கதைகளைக் கூறியே, பெண்களை கற்பழித்து இருக்கிறார். அவர்களது குடும்பத்தில் இருந்து பணமும் கறந்து இருக்கிறார். இவருக்கு ஆறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன. வெளிநாடுகளில் 12 மணி நேரம் உழைக்கும் இந்திய கணிப்பொறி வல்லுனர்கள் கூட இவ்வளவு சம்பாதித்து இருக்க மாட்டார்கள். பாலியல் சுகம், பணம் என்று சினிமா வில்லன்களை விட சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.

இந்து மதத்தில் நிலவும் இது போன்ற முறைகேடுகளை கடவுள் மறுப்பாளர்கள் விமர்சிக்கும் போது, அதனை கடவுள் நம்பிக்கையாளர்களில் சரிபாதி பேர் ஏற்கக் கூடும். மீதி பாதி பேர் பெரியாரிய பாணியிலான விமர்சனத்தை ஏற்க மாட்டார்கள். சுகி. சிவம் போன்ற இந்து மத அறிஞர்கள், போலிச் சாமியார்களுக்கு எதிரான ஒரு இந்து மத அமைப்பை த் தோற்றுவித்து, தமிழகம் முழுதும் கிளைகள் அமைத்து, இது போன்ற முறைகேடுகளை தடுக்க வேண்டும். அப்பாவி பெண்கள் சாமியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை, பாலியல் பலாத்காரம் செய்பவர் மு ?லிம் பாவா ஆனாலும், கிறி ?துவ பாதிரியார் ஆனாலும், இந்துச் சாமியார் ஆனாலும் கல்லெறிந்து கொடூரமாகக் கொலை செய்யப் படவேண்டும். இவர்கள் மீது இறக்கம் செலுத்தக் கூடாது. இவர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.

—-

aruladiyan@yahoo.co.in

Series Navigation

அருளடியான்

அருளடியான்