கவி

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அத்திவெட்டி


விக்ரமாதித்யனைப் படிப்பது
சுகம்.
ரணம்.
விக்ரமாதித்யனைத் தரிசிப்பது
உத்தமம்.
உபத்திரவம்.
கவிதை எழுதலாம்
விக்ரமாதித்யனாக முடியாது
விக்ரமாதித்யன் கவிஞன்.

ரத்தத்தில் தோலில்,
மூளையில், வயிற்றில்,
வாயில், கழுத்தில்
புற்று வரும்.

வாக்கியமாக, சொல்லாக,
எழுத்தாக, கவிதையாக
வந்தது புற்று
விக்ரமாதித்யனுக்கு.

வாழப்பண்ணுகிறவர்
பலர்.
வாழ்ந்து பண்ணுகிறவர்
சிலர்.

விக்ரமாதித்யன்
சாகப்பண்ணுகிறான்
விக்ரமாதித்யன்.

விக்ரமாதித்யன்
செத்துப் பண்ணுகிறான்
விக்ரமாதித்யன்.

வாழப்பண்ணுகிறவர்
கவிதையை
சாகப்பண்ணுகிறார்
விக்ரமாதித்யனை.

Series Navigation

இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அத்திவெட்டி

இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அத்திவெட்டி