This entry is in the series 20020428_Issue

சதீஷ்


முன் போல கவிதை மலர்கள்
மலர்வதில்லை.
தென்றலாய் நீ வருடியபோது
வசந்தமாய் வந்த கவிதைகள்
இப்போதெல்லாம் வருவதேயில்லை.
நீ அருகில் இருந்தபோது
பீறிட்ட கவிதை ஊற்றின்
சுவடே தொியவில்லை இப்போது.
வறண்ட இதயத்தின்
சருகு நினைவுகளை
வார்த்தைகளாக்கிக் கவிதையென
சொல்லிக்கொள்ள
மனம் ஒப்பாது எப்போதும்.

Series Navigation