கவலையில்லா மனிதன்

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

ஆனந்தன்


சில நேரங்களில்,
கவலைப்படவில்லையே
என்று கவலை..

உலக அழகி மனைவியானாலும்
பிரபஞ்ச அழகி கிடைக்கவில்லையேயன்றும்
சில நூறுகள் கிடைத்தால்
ஆயிரங்கள் கிடைக்கவில்லையேயன்றும்

இருக்க வீடு கிடைத்தால்
ஆள அரசவைக் கிடைக்கவில்லையேயன்றும்
இருப்பதை விட்டுவிட்டு
பறப்பது கிடைக்கவில்லையே
என்றும் கவலை…

ஆசைகளைத் துறக்க வேண்டுமே
என்ற கவலை புத்தனுக்கு
பாரதப் போரை வெல்ல வேண்டுமே
என்ற கவலை தருமனுக்கு

எதிர் வரும் தேர்வை
வெல்ல வேண்டுமே
என்ற கவலை மாணவனுக்கு,

மானிடனுக்கு,
தலை விரித்தாடும் தீவிரவாதம்
நிறுத்த வேண்டுமே
என்று கவலை…

என் வாழ்வில்
கவலையில்லா மனிதனைப் பார்ப்பேனா
என்ற கவலை,
எப்பொழுதும், எனக்கு..!
***
ஆனந்தன்

k_anandan@yahoo.com

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்