This entry is in the series 20071108_Issue

வைகைச் செல்வி



அம்மா உனக்கொரு பாட்டெழுத

எம்மாத்திரம் நான் நீயறிவாய்.

நெஞ்சப் பேழையில் உன் நினைவே

தஞ்சம் புகுந்தது பூப்போல.

கண்ணே மணியே நல்முத்துப்

பொன்னே என்றெனைக் கூப்பிட்ட

பெற்ற தாயினைக் காணாமல்

கற்ற கலைகளை மறந்திட்டேன்.

தொட்டுத் து¡க்கிய நீயின்றி

பட்டுப் போனது என் வாழ்க்கை.

இருட்டு உலகில் தனியாக

குருட்டுப் பிணமாய் அலைகின்றேன்.

தவிக்கும் என்னைத் தேற்றாமல்

கவிதை கேளாக் கல்லறையில்

என்னைக் கொஞ்சித் துயிலவைத்த

அன்னை இன்று உறங்குகிறாள்.

நேசர் வருகை நாள்தனிலே

பாச முகத்தைக் காண்பதற்காய்

ஏங்கி நிற்பேன் என் தாயே

து¡ங்கு நீயும் அதுவரையில்.

*****

Series Navigation