கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

கோச்சா (எ) கோவின்


—-

ஒரு விஷயம் மிக நன்றாக இருந்தது.

இன்று அரசியல்வாதிகள் பலரும் அதிகாரம் வந்து விட்டாலும் வராவிட்டாலும், பாராமுகத்துடனோ அல்லது தான் உச்சாணிக்கொம்பில் இருப்பவர் எனும் நினைப்பிலோ மக்களிடம் இலகுவாக பழகுவதோ அல்லது பதில் சொல்வதோ கிடையாது.

இதில் திரு.கருணாநிதி வேறுபட்டு நின்றது மகிழ்ச்சியான விஷயம்.

மூன்று பதில்கள் மனதிலேயே நிற்கிறது.

1. செல்வி.ஜெயலலிதாவிடம் பிடித்து பற்றிக் கேட்டதற்கு, ‘ தன்னம்பிக்கை ‘ என்ற திரு.கருணாநிதியின் பதில்.

உண்மை. செல்வி.ஜெயலலிதாவின் அந்த குணம் திரு.கருணாநிதிக்கு மட்டும் வந்து விட்டால் பல நல்ல விஷயங்கள் தமிழகத்தில் நடக்கும். அவரும் சில தரமற்ற கட்சிகளுடன் கூட்டணிக்காக பல்லைக் கடித்துப் பொறுக்க வேண்டியதில்லை.

2. இக்கால இளைஞர்களுக்கான அட்வைஸ் பற்றிய கேள்விக்கு – ‘இளைஞர்கள் கேளிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துவது விட்டு, மொழி ஆக்கம், சரித்திரம், இலக்கியம், சமூக முன்னேற்றம் பற்றி கவனம் செலுத்த வேண்டும் ‘ என்ற அருமையான பதில். இது இக்கால இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டானது.

தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருவது, திரு.ஸ்டாலின் மகன், ஸ்நோ பெளலிங் அரங்கத்தைத் தொழிலாக நடத்துவது. இந்தக் டி.வி. நிகழ்ச்சி அவர் கட்டாயம் பார்த்திருப்பார். இனியாவது அவர் கேளிக்கைச் சாராத தொழிலை தொடங்க ஆவல். அவர் தந்தையும் , தாத்தாவும் தமிழத்தில் குறீயீடாக வாழ வேண்டியவர்கள் என்பது உணர வேண்டும்.

3. தன் வீட்டுக்கு வந்தவர் ‘கருணாநிதி ‘ என்று சொன்ன போது , அவரை ‘செருப்பால அடிப்பேன் ‘, ‘கலைஞர் என்று கூப்பிடாவிட்டால் ‘, என்று தன் மூன்று வயது குழந்தைச் சொன்னதாக ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் சொன்னார். திரு.கருணாநிதி இதைக் கண்டித்திருக்கலாம்.

நாமே, வயது முதிர்ந்த பிரதமரை ‘வாஜ்பாய் ‘ என்றும், ஜனாதிபதியை ‘அப்துல் கலாம் ‘ என்றும் சொல்வது உண்டு. மேலும் ‘ஜோதிபாசு ‘, ‘சோ ‘, வை.கோ ‘ ‘நல்லக்கண்ணு ‘ ‘மாலன் ‘ ‘மாறன் ‘ ‘சோனியா ‘ என்று தான் பொதுப்படை நிலையில் சொல்லுகிறோம்.

ஆனால் நமக்கான வீட்டாரை தாத்தா என்றோ ஐயா என்றோச் சொல்லுவோம்.

அப்படியிருக்க திமுக சாராதாவர் ‘கருணாநிதி ‘ என்று சொன்னதற்கு இப்படி ‘செருப்பால் அடிப்பேன் ‘ என்று மூன்று வயது குழந்தை சொல்வதை பெருமையுடன் சொல்லும் தந்தையை திரு.கருணாநிதியோ , திரு.மாலனோ கண்டித்திருக்கலாம். செய்யாதது கொஞ்சம் மனதை நெருடியது.

4. அப்புறம் இந்தக் கூட்டணி சட்டசபையில் தொடருமா என்ற கேள்விக்கு அவரின் பதில் சந்தோஷமானது ஒன்று. ஆனால், பா.ம.க மற்றும் தேசிய கட்சிகளின் நிலை வானிலை அறிக்கைப் போன்றது. அதனால் திரு.கருணாநிதி அவர்களை மட்டும் சாராமல் கட்சியைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.

மற்றபடி நிகழ்ச்சி தந்த திரு.கருணாநிதிக்கும் திரு.மாலனுக்கும் வாழ்த்துக்கள்.

—-

gocha2004@yahoo.com

Series Navigation

கோச்சா (எ) கோவின்

கோச்சா (எ) கோவின்