கலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சிகள்

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

மாக்கீ ஷீல்ஸ், பிபிஸி


பள்ளிக்கூடங்களில் இருக்கும் பொதுவான சடங்குகளான தாய்நாட்டு வணக்கம், இடைவேளை போன்றவைகளோடு, புதிதாக இன்னொன்று, ‘ஓம் ஸ்கூல் ‘ என்று பெயரிடப்பட்டு கலிபோர்னிய பள்ளிக்கூடங்களில் சேர்ந்திருக்கிறது.

ஆனால் கலிபோர்னியாவின் அரசாங்கப் பள்ளிகளில் யோகா பயிற்சி, ஏராளமான சிறுவர்களுக்கு அமைதியையும் ஒழுக்கத்தையும் கொண்டுவந்து தருகிறது.

கூச்சலும் குழப்பமுமாக விளையாட்டு அறைக்கு வரும் சிறுவர்களின் ஆரவாரம் பள்ளிக்கூடத்துக்கு வெளியே கேட்பதாக இருக்கிறது.

சாதாரணமாக, ஒரு ஆசிரியருக்கு, இப்படிப்பட்ட கும்பலை அமைதிப்படுத்த பல நிமிடங்கள் பிடிக்கும். ஆனால், கதீட்ரல் ஹில்ஸ் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக இருக்கும் ஃபில்லிஸ் அவர்களுக்கு இவர்களை நான்கு வரிசைகளாக நிற்க வைக்க அதிக நேரம் ஆவதில்லை.

‘சரி, எல்லோரும் வண்ணாத்திப்பூச்சி சுவாசப்பயிற்சி பண்ண ஆரம்பியுங்கள் ‘ என்று சொல்கிறார்.

‘உங்கள் விரல்களை கூப்பி, உங்கள் தாடைகளுக்குக் கீழ் வையுங்கள் ‘ எனச் சொல்கிறார்.

‘சுவாசித்து உங்களது முழங்கைகள் மேலே வந்து உங்கள் தலைகள் பின்னால் செல்லவேண்டும். மூச்சை வெளியே விட்டு உங்கள் முழங்கைகள் கீழே வந்து, தலை முன்னுக்கு வரவேண்டும் ‘ என்று சொல்கிறார்.

ஜிம்னேசியம் என்ற இந்த விளையாட்டு அறை அமைதியாக அவர் சொல்வது போலக் கேட்கிறது. இந்த 10-14 வயது சிறுவர்களின் அமைதியும், கவனத்தின் அளவும் வேறெங்கும் பார்க்க இயலாதது. கூச்சலும் குழப்பமும் கொண்டிருந்த இந்த சிறுவர்கள் திடாரென மாறியது ஆச்சரியமானது.

‘இந்த 10-14 வயது சிறுவர்கள் சற்று நேரம் அமைதியாக இருக்க இது உதவுகிறது ‘ என்று திருமதி ஃபில்லிஸ் கேம்ப் கூறுகிறார்.

பள்ளிகளில் யோகா சொல்லித்தருவதற்கு ஏராளமான விமர்சகர்கள் இருந்தாலும், யோகாவினால் சிறுவர்கள் பல முறைகளில் பயன் பெறுவதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன என்று அமெரிக்க ஐக்கியநாடுகள் யோகா அஸ்ஸோசியேஸன் கூறுகிறது.

இங்கு படிக்கும் சாய்ரா ‘நான் படிப்பில் முன்பு மோசமான மதிப்பெண்களை வாங்கிக்கொண்டிருந்தேன். இப்போது நல்ல் மதிப்பெண்கள் வாங்குகிறேன்.யோகா எனக்கு கவனத்தைக் குவிக்க உதவுகிறது. ‘ என்று கூறுகிறார்.

இங்கு இவரது நண்பரான இப்ராஹிம் அலி, ‘கணக்கு பாடத்துக்கு நான் சாய்ராவுடன் செல்கிறேன். யோகா நன்றாக உதவுகிறது. மனத்துக்கு ஓய்வு கொடுக்கவும், பிறகு நன்றாக வேலை செய்யவும் உதவுகிறது ‘ என்று கூறுகிறார்.

கலிபோர்னியா பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் உடல்நலம் தேவையான அளவுக்கு இல்லாமல், மூன்றில் இரண்டு பங்கு பள்ளிகள் தோல்வியடைந்ததும், இவ்வாறு யோகா வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

இங்கு ஆசிரியராக இருக்கும் மோசுன், ‘கடினமான யோகா உடலமைப்புகள் நன்றாக நிற்கவும், கால்களுக்கு உறுதி தரவும், வேகமாக ஓடவும் உதவுகின்றன. ஒற்றைக்காலில் நிற்கும் யோகா முறைகள், உடலுக்கு சமனத்தைக் கொடுக்கின்றன ‘ என்று கூறுகிறார்.

கலிபோர்னியாவின் புகழ்பெற்ற நடிகர்களும் பிரபலங்களும் யோகா மாணவர்களாக இருப்பது அறிந்ததே என்றாலும், மடோன்னா, ஸ்டிங் போன்றவர்கள் யோகாவை பிரச்னைக்குள்ளான உள்நகர பள்ளிகளில் சொல்லித்தர உதவ முன்வந்திருப்பதும், அதனை பிரபலப்படுத்த வந்திருப்பதும், யோகா பல இடங்களில் பரவுவதற்கு காரணமாக இருக்கிறது.

http://news.bbc.co.uk/hi/english/education/features/newsid_1988000/1988800.stm

Series Navigation

மாக்கீ ஷீல்ஸ், பிபிஸி

மாக்கீ ஷீல்ஸ், பிபிஸி