ஜான் லென்னான்
சொர்க்கம் இல்லையென்று கற்பனை செய்யுங்கள்
முயன்றால் சுலபம் தான் அந்தக் கற்பனை
நமக்குக் கீழே நரகமும் இல்லை
நமக்கு மேலே வெறும் வானம் தான்
கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும்
இன்றைப் பொழுதுக்கே வாழ்கிறார் என்று.
தேசங்கள் இல்லையென்று கற்பனை செய்யுங்கள்
கடினமில்லை அந்தக் கற்பனை
வாழ்வதற்கு எதுவுமில்லை, கொல்வதற்கும் எதுவுமில்லை.
மதமும் கூட இல்லவே இல்லை
கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும்
அமைதியாய் வாழ்க்கை வாழ்கிறார் என்று
கனவு காண்பவன் என்றென்னைச் சொல்லலாம்,
ஆனால் நான் மட்டுமல்ல –
நீங்களும் இணைவீர் ஒரு நாள் என்றும்
உலகமே ஒன்றாய் வாழ்ந்திருக்கும் என்றும்
நம்புகிறேன் நான்.
உடைமைகள் எதுவுமில்லையென்று கற்பனை செய்யுங்கள்
முடியுமா உங்களால் என்று வியக்கிறேன்.
பேராசைக்கும் இடமில்லை, பசிக்கும் இடமில்லை.
மனித சகோதரத்துவம்
உலகு முழுமையையும் எல்லா மக்களும் பகிர்ந்து கொள்வதைக்
கற்பனை செய்யுங்கள்.
கனவு காண்பவன் என்றென்னைச் சொல்லலாம்,
ஆனால் நான் மட்டுமல்ல –
நீங்களும் இணைவீர் ஒரு நாள் என்றும்
உலகமே ஒன்றாய் வாழ்ந்திருக்கும் என்றும்
நம்புகிறேன் நான்.
– மொழிபெயர்ப்பு : கோபால் ராஜாராம்