கனவுகளின் நீட்சி

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

ப.மதியழகன்



கனவு பற்றிய
கதைகளை அவ்வப்போது
எவரேனும் ஒருவர் சொல்ல
எதிரே அமர்ந்து கேட்க
நேரிடுகிறது!

அன்றாடம்
அவரவர் வாழ்க்கையில் குறுக்கிட்டுத்
தொல்லை தருபவர்களுக்கு
கனவுகளில் அனுமதியில்லை
– அல்லது
எவரோ அனுமதிப்பதில்லை

கனவுலகில்
சட்ட விதிமுறைகள் இல்லை
ஆகவே, சில நேரங்களில்
கம்ப்யூட்டர் கேம்ஸ் போல
அசாதாரணமாகத் தோன்றும் அவைகள்
திடுக்கிட்டுத் விழித்தெழ நேர்கின்ற
கோரவிபத்துக் கனவொன்றில்
சிறு காயம் கூட நமக்கு
ஏற்படுவதில்லையே…

என்றாவது நமது இருத்தலற்ற
கனவை கண்டிருக்கின்றோமா?
எப்படியேனும் நடப்பவைகளுக்கு
ஒரு சாட்சியாகவேணும்
நாம் இரு்போமல்லவா?

நமது ஆளுமைகள்
கனவில செல்லுபடியாகாது
அதுவும் ஒருவித
வண்ணத்திரைப்படமே!

எந்தவொரு கனவும்
சில நிமிடங்களில் கலைந்துவிடும்
அப்படியில்லாமல் நீண்டுகொண்டே சென்றால்
கனவெனும் அனுபவம்
மீண்டும் அசைபோட
இனிமையாய் இருக்குமா?

mathi2k9@gmail.com

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts