கண்ணாடியும் விலங்கும்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

பூமா ஈஸ்வரமூர்த்தி


கண்ணோடு கண்ணாக
யாரைப் பார்க்கவும்
கல்லாய்
உறைந்து போகிறார்கள்

இப்படியும் ஒரு விலங்கு
மறுபடியும்
மானிட சப்தம் கேட்டு
திரும்பியது

குழந்தையின்
கையிலிருக்கும் கண்ணாடியின்
வினேதம் ஈர்க்க
அதையே பார்த்தது

விலங்கும் கல்லாய் மாறியது

Series Navigation