கடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

நேச குமார்



சென்ற வாரத்திண்ணையில் வஹ்ஹாபி அவர்கள் இது போன்றெழுதியிருக்கின்றார்:
//சென்ற வாரத் திண்ணையில் நேச குமார் எழுதியதை[சுட்டி-6]ப் படிக்க நேர்ந்தது.

அடுத்து, “பார்ப்பனர்”, “சங்கராச்சாரி”, “சனாதன குட்டை” என்ற சொற்களை நான் பயன் படுத்தி இருப்பதாக வழக்கம்போல் நேச குமார் உளறி இருக்கிறார். அவருடைய மனநிலை குறித்து எனக்கிருக்கும் பரிதாபம் [சுட்டி-7] ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காகத் திண்ணையில் நான் அவ்வாறெல்லாம் ‘தகாத’ சொற்களைப் பயன் படுத்தி இருப்பதாகக் குற்றச்சாட்டை வைத்திருக்கும் நேச குமாருக்கு எதிர்க் கேள்வி வைக்கவில்லை எனில் நான் குற்றவாளி ஆகிப் போவன். எனவே, ஒருவார காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு, நேச குமார் தன் குற்றச்சாட்டை நிரூபித்தே ஆகவேண்டும். //

சுட்டி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802075&format=html

***

ஜனவரி 10, 2008 தேதியிட்ட தனது கட்டுரையில் முகமதியர்கள் என்று மலர்மன்னன் குறிப்பிட்டதைப் பற்றி புலம்பிக் கொண்டே வஹ்ஹாபி இத்தகைய வாசகங்களைப் பயன்படுத்தியுள்ளார்:

//ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, **பார்ப்பனர்களை** ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.//

//அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான்//

//திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள், 40 நாட்கள் ஜெபம் செய்தனர்//

***

தனியே இதை படிப்பவர்களுக்கு நான் பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனக் குட்டை போன்ற பதங்களைக் கண்டு மனம் புண்பட்டதாகத் தோன்றும். இப்படியெல்லாம் அவரோ மற்ற இஸ்லாமியர்களோ திட்டுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும், கோபமும் இல்லை. ஒரு ஜாதி அல்லது மதத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் சாடிவிட்டுப் போகட்டும்.

வசதிக்குத் தகுந்தாற்போல் இவர்கள் பொதுவாக நமது சமூகத்தில் இருக்கும் சுதந்திரத்தையும், நமக்குள் இருக்கும் சுதந்திர விவாதத்தையும் எளிதாக தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். அமெரிக்காவின் கறுப்பர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே சவுதி தனது கறுப்பு முஸ்லீம்களை அமெரிக்காவைவிட தாழ்வாக, அடிமைகளாக 1962வரை வைத்திருந்தது போல.

இன்று பொது சமூகத்திலும், இணையத்திலும் இதே யுக்தி இந்த சவுதியினால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லீம் அடிப்படைவாத வஹ்ஹாபிகளால் மேற்கொள்ளப்படுகின்றது – மீண்டும் மீண்டும் பிராம்மணர்களைப் பற்றிய கடுமையான, மிகவும் மோசமான வார்த்தைகளையும் தாக்குதல்களையும் பயன்படுத்துவதன் மூலம் தமிழ் சமூகத்தில் நிலவும் பிராம்மண எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களது பிற சமூக வெறுப்பை நியாயப் படுத்த முயல்கிறார்கள். இது பல சமயங்களில் மிகவும் நுணுக்கமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இவர்களால் நடத்தப்படுகிறது. இது ஒருவிதத்தில் வஹ்ஹாபிகள் உலகெங்கும் கடைப்பிடிக்கும் யுக்தி – அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதே யுக்தி இவர்களால் கடைப்பிடிக்கப் படுகின்றது. இதற்கு பலியாகும் கறுப்பிளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாதச் செயல்களுக்கு பலியாக, அரபிகளோ உல்லாசமாக மெர்சிடஸ்களிலும், ரோல்ஸ் ராய்ஸ்களிலும் அதே வெள்ளை அமைப்புடன் சமரசமாகப் போய், அது அளிக்கும் எல்லாவித சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதே விஷயத்தை இந்த தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கடைப்பிடிக்கின்றார்கள். ஒரு புறம் முற்போக்கு பேசும் பிராம்மணர்களோடு உறவாடி அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அமைப்பு சார்ந்த வசதிகளைப் பெற்றுக் கொண்டு, இன்னொரு புறம் அதே பிராம்மணர்களின் எதிரியாக தங்களை முன்னிறுத்தி அதன் மூலம் பிராம்மண எதிர்ப்பாளர்கள் ஆதரவையும், அவர்களது அமைப்பு சார்ந்த வசதிகளையும் பெற்றுக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றார்கள்.

இதை இன்று அதிகம் செய்வது வஹ்ஹாபிகளே. இவர்கள் இதை இஸ்லாத்திற்குள்ளும் செய்கிறார்கள். உலகெங்கும் வஹ்ஹாபிகள் தங்களுக்கு கேடயமாக பயன்படுத்திக் கொள்வது, வஹ்ஹாபிசத்தை ஒப்புக்கொள்ளாத ஏனைய முஸ்லீம்களைத் தான். இப்படி ‘உப்பு மூட்டை’ ஏறிக்கொண்டே உலகெங்கும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு, சுமப்பவர்களை நாசமடையச் செய்கிறார்கள் – ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

நாகூர் ரூமியின் எழுத்தை வசதிக்கேற்றபடி பயன்படுத்திக் கொள்ளும் இதே வஹ்ஹாபிகள், தமது எண்ணிக்கை அதிகரித்தால் அதே நாகூர் ரூமியை காஃபிர் என்றழைக்கத் தயங்க மாட்டார்கள். தமிழிணையத்தில் நாகூர் தர்காஹ்வை இடிக்க வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக வஹ்ஹாபிகள் எழுதும் நிலையில் இந்த வன்கோட்பாட்டால் அழிவுக்குள்ளாவது அனைவருமே என்பதை அனைவரும் உணரவேண்டும்.

***

வஹ்ஹாபி இப்படி பயன்படுத்துவதையும், அதை இல்லவே இல்லை என்று மறுத்து என்னிடம் ஆதாரம் கேட்பதையும், அதைச் சுட்டினால் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வாரா, யாருடைய மனநிலை எப்படி இருக்கிறது, யார் உளறுவது போன்ற கேள்விகளை நான் எழுப்ப விரும்பவில்லை. ஏனெனில், இத்தகைய பாணியையும், வாதங்களையும் அநேகமாக இவர்கள் அனைவரிடத்திலும் காண்கிறேன். இந்த நீண்ட, நெடிய விவாதத்தின் மூலம் நான் இவர்களின் உளப்பாங்கை மற்றவர்கள் அறிந்து கொள்ள வழி செய்கிறேன், அவ்வளவே. இங்கே நான் சுட்டிக் காட்ட விழைந்தது ஒரு சராசரி இஸ்லாமிஸ்ட் மனப்பான்மையை. பார்ப்பனர், சங்கராச்சாரி போன்ற பதங்களைப் பயன்படுத்திக் கொண்டே அதே கட்டுரையில் முஸ்லீம்களை முகமதியர்கள் என்றழைப்பதால் மனம் புண்படுவதாக புலம்பும் இஸ்லாமிஸ்ட்டுகளின் இரட்டை மனோபாவத்தையே நான் சுட்டிக் காட்ட விரும்பினேன்.

அடிப்படையில் இந்த வஹ்ஹாபியிடம் மட்டுமல்ல, இங்கே எழுதிய எழுதும் மற்ற வஹ்ஹாபிகளிடமும் நான் மீண்டும் மீண்டும் இதே கேள்வியையே முன் வைக்கிறேன். பதில்கள் இன்றுவரை வரவில்லை. வெறும் உரத்த சப்தமே வருகிறது இவர்களிடமிருந்து. எனது கேள்விகள்:

** முஸ்லீம்களை ஏனையோர் முகமதியர்கள் என்று அழைப்பது அவர்களது மனதைப் புண்படுத்துகிறது என்றால், அகமதியாக்களையும் பஹாய்களையும் முஸ்லீம்கள் என்றழைக்கலாமா? ஏனெனில், ஈரானில் அரசே பஹாய்கள் தங்களை முஸ்லீம்கள் என்றழைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துவிட்டது, பாகிஸ்தானில் அஹமதியாக்கள் தங்களை முஸ்லீம்கள் என்றழைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றம். முஹமது உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை முஹமதிக்கள் என்றழைப்பது தவறு என்றால், அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா? ஏனெனில், இந்த மதநிறுவனர்களும் தங்களை பாரம்பரிய நபிமார்கள் வழியில் வந்து தூய்மையான இஸ்லாமிய மதத்தை அதன் தூய வடிவில் போதித்தவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். **

நாளையே இன்னொரு முஹமதோ அஹமதோ வந்து தம்மிடம் இறைவன் அனுப்பிய ‘மலக்’ ஒன்று வந்து நெருக்கிப் பிடித்து மூச்சுத் திணறச் செய்து, முஸ்லீம்கள் எல்லோரும் வழிகேட்டில் இருக்கிறார்கள், உண்மையான அல்லாஹ் அனுப்பிய உண்மையான குரானை முஸ்லீம்கள் திரித்துவிட்டார்கள், இன்றிலிருந்து உனக்கு இந்த இறையாவேச நிலையில், கனவில் வெளிப்படுவதே உண்மையான குர்ஆன் மற்றதெல்லாம் ஷைத்தானின் வேதம் என்று ஊதி, ஓதினால், அதை நம்பி அந்த நல்லடியார்களும், அஹ்ஹாபிகளும், இப்னு அஷீர்களும் இதற்கு மாறாகச் சொல்பவர்களெல்லாம் தங்களது மனதைப் புண்படுத்துகிறார்கள் என்று புலம்பினால், வன்முறையில் இறங்கினால் அதற்கு வஹ்ஹாபி என்ன சொல்வார்?

ஏற்கெனவே சொல்லிவிட்டார். பல லட்சக்கணக்கான முஸ்லீம்கள் நபி என்று கருதும் மிர்ஸா குலாம் அஹமது அவர்களைப் பற்றி இதே வஹ்ஹாபி இப்படி எழுதுகின்றார்:

//மிர்சா குலாம், எலிஜா முகமது, ரஷாத்கலீபா வழியில் யார் வேண்டுமானாலும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கழிப்பிடத்திற்கு உள்ளே சென்றால் வேலையை முடித்துக் கொண்டு சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். காரணம், மிர்சா நப்பி செத்துப் போனது கக்கூஸில்!//

பார்க்க சுட்டி : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605056&format=html

வஹ்ஹாபியின் இரட்டை நிலைப்பாடு எல்லா விஷயங்களிலும் பிரதிபலிப்பதைக் காணலாம். இது வஹ்ஹாபியின் மனோபாவம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முகமதியர்களின் மனப்பாங்கும் இப்படித்தான் இருக்கிறது, துரதிர்ஷ்டவசமாக. ஆன்மீகத் தத்துவங்களின் மீதல்லாமல், மூட நம்பிக்கைகளின் மீதும், வன்முறை மூலமும் கடவுள் பற்றிய ஒரு நம்பிக்கையை மனிதக்கூட்டத்தின் மீது திணிக்கும்போது இதுவே நிகழ்கிறது.

***

நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல, முஸ்லீம்கள் தங்களுடைய நம்பிக்கைகள் மீது இவ்வளவு பிடிப்பு கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் – அது வன்முறையின் மூலமும், மூளைச் சலவையின் மூலமும் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதால். பின்பு, முஹமது நபி என்பதற்கு என்ன ஆதாரம்? மிர்ஸா குலாம் அஹமது நபி என்பதற்கு என்ன ஆதாரமோ அதே ஆதாரம் தான் முஹமது நபி என்பதற்கும் இருக்கிறது. அதே ஆதாரம் தான் உலகெங்கும் இருக்கும் கல்டுகளின் தலைவர்களைச் சுற்றியிருப்போர் தமது தலைவரே இறைநபி, இறுதி நபி என்றெல்லாம் நம்பி இறுமாந்து போவதற்கும் இருக்கிறது. என்ன வித்தியாசம், சரித்திர விபத்துக்களால் ஒரு குறிப்பிட்ட கூட்டம் இதற்குள் அகப்பட்டுக் கொண்டது. மதம் என்ற மூளைச்சலவையின் காரணமாக இந்த அகப்பட்டுக் கொண்ட கூட்டம் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் கடவுளின் சித்தத்தை காண முயல்கிறது – தம்மைத் தவிர மற்றதையெல்லாம் கடவுளின் எதிரியான ஷைத்தானின் கூட்டம் என்று கருதுகிறது. இங்கே இவர்கள் இன்று பிராம்மணர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும், எண்ணிக்கை அதிகரித்தவுடன் (பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்று) இதே போன்ற வெறுப்பை ஒட்டு மொத்த இந்து சமூகத்தின் மீது உமிழ்வதும், சவுதியில் வஹ்ஹாபிகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும் நிலையில் அங்கே இதுபோன்றதொரு வெறுப்பை ஷியாக்கள் மீதும், வஹ்ஹாபிசத்தை ஏற்காத முஸ்லீம்கள் மீதும் உமிழ்வதும் அவர்களை ஷைத்தானின் அடியாட்கள் என்று demonise செய்வதும் நிகழ்கிறது.

***

குரான் பற்றி நான் சொன்னதை வஹ்ஹாபியும் இப்னு பஷீர் என்பவரும் எழுதியுள்ளார்கள். முதலாவதாக நான் எங்குமே இது சவுதியில் நடைபெற்றது என்றோ, குகையில் கிடைத்த மற்ற குரான்கள் என்றோ குறிப்பிடவில்லை. இணையத்தில் எங்காவது தென்படுகின்ற எதையாவது என்னுடைய எழுத்தோடு சம்பந்தப்படுத்தி, பார்ப்பவர்களைக் குழப்பும் யுக்தி. நான் எழுதுபவை அனைத்திற்கும் நான் பொறுப்பேற்கின்றேன். அதே சமயம் இஸ்லாத்தைப் பற்றி அரைகுறையாகப் புரிந்து கொண்டு எழுதுபவர்களின் எழுத்துக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?

யேமன் நாட்டில் ஒரு மசூதியில் பழைய குரான் பிரதிகளை கண்டெடுத்தவர்கள் அந்த மசூதியின் புனர்நிர்மானத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள். பின்பு அவற்றை ஆய்ந்தது, அந்நாட்டின் பழம்பொருள் துறைத்தலைவர் இஸ்லாமாயில் (காதி இஸ்லாமியில் அல்-அக்வா). இவர் இவற்றை ஆய்வதற்கான வசதிகள் யேமனில் இல்லாததால், உலக நாடுகள் பக்கம் திரும்பி ஜெர்மானிய ஆய்வாளர்களிடம் இப்பணியை ஒப்படைத்தார். இக்குழு திருக்குரான் பலமுறை திருத்தப்பட்டிருப்பதையும் (கண்டெடுத்த பல குரான்கள் இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளைச் சார்ந்தவை – கிபி ஏழு எட்டாம் நூற்றாண்டுகள்) பழைய ஹிஜாஸி வரிவடிவில் அவை எழுதப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தார்கள். திருக்குரான் இன்றிருக்கும் வடிவிலேயே முஹம்மதுவுக்கு இறைவனால் சொல்லப்பட்டது என்ற முஹமதிய நம்பிக்கைக்கு மாறாக திருக்குரான் என்பது காலத்தோடு மாற்றமடைந்தது என்ற உண்மையை அறிவியலும் அல்ட்ரா வயலட் கதிர்களும் நிரூபித்தன. ஆம், இந்த குரான் சுவடிகளை அல்ட்ரா வயலட் கதிர்களின் கீழ் கொண்டுவந்தபோது, இவை காலத்தோடு மாற்றம் பெற்றிருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டனர்.

இது சம்பந்தமாக அமெரிக்காவின் ‘தி அட்லாண்டிக்’ ஜர்னலில் வந்த கட்டுரையை இங்கே காணலாம்:

http://www.derafsh-kaviyani.com/english/quran1.pdf

இதை ஏன் உடனடியாக சொல்லவில்லை என்ற கேள்விக்கும் அவர்களே பதில் சொல்லியிருக்கின்றார்கள். அப்படி உடனடியாக இதை வெளியிட்டிருந்தால், உலகெங்கும் நம்பிக்கையாளர்களிடமிருந்து பெரும் கூச்சல் எழுந்திருக்கும், கலவரங்கள் உருவாகி அந்த முயற்சி அத்துடன் நிறுத்தப்பட்டிருக்கும். 1997 வரை இந்த குரான் பிரதிகளை மைக்ரோ ஃபிலிம்களில் ரெக்கார்ட் செய்து ஜெர்மனிக்கு எடுத்து வந்திருக்கின்றனர் (இன்றும் ஒரிஜினல் சுவடிகள் யேமனின் ஆவணக்காப்பகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை ஜெர்மானியர்கள் தாம் என்றில்லை, இன்று முஸ்லீம் ஆராய்ச்சியாளர்களும் ஆய்ந்து வருகின்றனர். பார்க்க:

” A professor of literature and human science at Sousse University in Tunis, Abdeljelil heads a team of scholars compiling a critical edition of the Koran. The book will publish a number of alternative readings found in a collection of Koranic mashaf (mas-Haf, or manuscripts) — some dating from the first Islamic century — that had been stockpiled in the Grand Mosque in Sanaa and uncovered three decades ago.
The first tentative conclusions published by researchers with access to the Yemeni mashaf reveal that in several cases the organization of the text is different — the suras (chapters) sometimes in a different order — and that there are differences in the text itself. Because published findings are few, though, it is still impossible to say how wide is the divergence from the authoritative text. Abdeljelil speculates that, were his small team bolstered with more scholars, the edition could be published in as soon as 10 years. He is cautiously enthusiastic about the project. He has good reason to be cautious”.

http://www.zackvision.com/weblog/2003/07/quran-textual-analysis.html

***

காபாவே 1979ல் கைப்பற்றப்பட்டு, அங்கே உயிர்க்கொலை நடைபெறவில்லை என்று ஆயிரக்கனக்கான ஆதாரங்களையும் மீறி வாதிடும் நம்பிக்கையாளர்களை என்னதான் செய்யமுடியும்? நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் யூதர்களால் உடைக்கப்பட்டது, அதை வெடிவைத்து அமெரிக்கர்களே தகர்த்துக் கொண்டார்கள், ஹதீதுகளில் யூதர்கள் வேண்டுமென்றே மாற்றங்களைச் செய்தார்கள், ஷியா பிரிவைத் தோற்றுவித்து இஸ்லாத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது யூதர்கள் என்பது போன்ற மயக்கங்களில் ஆழ்ந்திருப்பதற்கு நம்பிக்கையாளர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஆனால், இத்தகைய நம்பிக்கைகளால் கண்கட்டப்படாமல், திறந்து பார்க்கும் மற்றவர்களுக்கு இதெல்லாம் நகைப்பிற்கிடமாக அல்லது எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறதல்லவா – அது போன்றதுதான் இந்த ‘நம்பிக்கையும்’.

ஆம், எப்படி முஹமது ஒரு நபி என்பதற்கு அடித்தளம் எதுவும் இல்லையோ, எப்படி முஹமதுவிடம் பேசியது காப்ரியேல் என்ற மலக் தான் – அந்த மலக்கு, கடவுள் சொன்னதையெல்லாம் முஹமதுவின் காதில், கனவில் சொன்னது என்பது ஒரு ‘நம்பிக்கையோ’ , எப்படி அல்லாஹ் என்ற அரபிக் கடவுள் காபாவுக்கு மேலே ஏழு வானங்களுக்கப்பால் உட்கார்ந்து கொண்டு உலகில் இருக்கும் மனிதர்களின் நடவடிக்கைகளையெல்லாம் கண்காணித்து வருகிறார் என்பது ஒரு ‘நம்பிக்கையோ’, எப்படி முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் எல்லாம் கடவுளால் காய்ச்சிய எண்ணைக் கொப்பறையில் போட்டு வதக்கப்படுகிறார்கள் என்பது ஒரு ‘நம்பிக்கையோ’ , அதே போன்றதொரு ‘நம்பிக்கைதான்’ இப்படி குரான் என்பது அன்றிலிருந்து இன்றுவரை ஒரே மாதிரி இருக்கிறது, அது சொர்க்கத்தில் தங்க ஏட்டில் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது, அது மாற்றமடைகிறதா என்பதை சாமி சவுதியின் மேலே உட்கார்ந்து கொண்டு சாக்கிரதையாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது. இந்த ‘நம்பிக்கையை’ இன்று யேமனில் கண்டெடுக்கப் பட்ட பழைய குரான் பிரதிகள் சற்றே அசைக்க முயல்கின்றன, அவ்வளவுதான்.

ஒவ்வொரு முறை இந்த நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு மாறாக அல்லது அந்த நம்பிக்கைகளின் மூடத்தனத்தை சுட்டிக் காட்ட முற்படும்போதெல்லாம் இப்படி வன்முறையும், அந்த வன்முறையைத் தொடர்ந்து கேள்வி கேட்பவர்கள்/ முயற்சி செய்பவர்கள் முடக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது இன்றைய இணைய யுகத்தில் நாம் அறிந்ததுதானே. சந்தேகம் இருந்தால் தமிழ் எழுத்தாளர் ரசூலிடம் கேட்டுப் பார்க்கலாம்.

அன்புடன்,

நேச குமார்.

http://nesamudan.blogspot.com
http://islaamicinfo.blogspot.com
http://nesakumar.blogspot.com

Series Navigation