கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

விஸ்வாமித்ரா


ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நான் திண்ணையில் பல வாரங்கள் எழுதியிருந்தேன். அதனை வரவேற்றுப் பாராட்டிய நண்பர்களுக்கும், கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும் எனது காலம் கடந்த நன்றிகள். இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு எனக்குத் தனிப்பட்ட முறையில் பல மின்னஞ்சல்கள் வந்தன. அவற்றிற்கெல்லாம் தனித் தனியாகப் பதில் அளிப்பதற்குப் பதிலாக பொதுவாக இங்கு புத்தகத்தை விற்பனை செய்யும் கடை விபரத்தினை இங்கு இட்டுள்ளேன். ஆர்வமுள்ள வாசகர்களும், என்னிடம் இந்த விபரம் குறித்து கேட்டிருந்த நண்பர்களும் கீழ்க்கண்ட புத்தக நிலையத்தில் புத்தகத்தினை வாங்கிக் கொள்ளூமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்னும் ஒரு சில நண்பர்கள் நான் தான் ம வெங்கடேசன் என்று நினைத்து என்னிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலானோர் பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தனர். புத்தகத்தை எழுதிய ம வெங்கடேசன் நான் அல்ல, அதை இங்கு அறிமுகப் படுத்தியது மட்டுமே என்னுடைய சிறிய பணி என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிகத் தகவல்களுக்கு வாசகர்கள் திரு.ம வெங்கடசனை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஈ வெ ரா ஒரு சீர்த்திருத்தவாதி என்றும், ஒரு பெரியார் என்றும், பொய்யான தகவல்கள் பல பரப்பட்டு தமிழ் நாட்டு மக்கள் மூளைச் சலவை செய்யப் பட்டு வருகின்றனர். அவரது உண்மை முகம் ஒரு அரசியல்வாதி என்பதனை இந்தப் புத்தகத்தின் உள்ள உண்மைகளைப் படித்து அறிந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

புத்தகம் கிடைக்குமிடம்:

New Book Lands

Foreign & Indian Books

52-C North Usman Road, T ‘Nagar

Chennai-17. Phone 28158171, 28156006 Fax: 24336312

www.newbooklands.com

அன்புடன்

விஸ்வாமித்ரா

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா