கடிதம் நவம்பர் 4,2004 – அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

கோபி


அன்பின் நாகூர் ரூமி அவர்களுக்கு,

முதலில் தங்களின் எழுத்துகளை நெடுநாளாய் வாசித்து வரும் வாசகன் என்ற உரிமையில் இந்தக் கடிதம்.

உங்கள் புத்தகம் மீதான சர்ச்சையை மரத்தடியில் படித்து அதற்கான உங்களின் பதில் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் உங்களின் புத்தகம் மீதான சர்ச்சைக்கான உங்கள் பதிலை திண்ணையில் படிக்க நேர்ந்தது.

நான், முதலில் எழும்பிய பிரச்சினையை விட உங்களின் புத்தகத்தின் மீதான விமர்சனத்துக்கு பதிலிறுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த நேரம் உங்களின் பதில் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. அவர் கேட்டிருந்த கேள்விகளில் ஒன்றுக்கேனும் நீங்கள் பதிலிறுத்ததாய் தெரியவில்லை. பொதுவில் அவருக்கு அரபு மொழி தெரியாது அதனால் அவர் கருத்தில் அர்த்தமில்லை என்பதாய் நீங்கள் சொல்வது போல் எனக்கு பட்டது. சரி விடுங்கள் நபிகள் மீதான கேள்வியை விட்டு தாங்கள் எழுதிய புத்தகத்தின் மீதான கேள்விகளுக்கு தாங்கள் சரியான விளக்கம் தருவீர்கள் என்று உங்களின் தொடர்வாசகன் என்ற முறையில் வேண்டுகோளை விடுக்கிறேன்.

தாங்கள் பதில் மறுக்கும் பட்சத்தில் திரு. நேசக்குமார் அவர்கள் கேட்ட கேள்விகள் விடையற்று கிடக்கிறது. அவரது கேள்விகளில் புண்படுத்தும் நோக்கத்தை காணவில்லை. உண்மையான விமர்சனம் இருக்கிறது. அவர் எழுப்பிய கேள்விகள் சாதாரண வாசகனாகிய எனக்கும் எழுந்துள்ளது. உங்கள் புத்தகத்தை வாங்கி படிக்கும் என் போன்ற வாசகர்களுக்காகவாவது பதிலிறுக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்

கோபி

—-

madhurai_gopi1976@yahoo.com

Series Navigation

கோபி

கோபி