கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


திரு. ஜெயபாரதன் விடுத்திருந்த வினாவும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற கோரிக்கையையும் (அல்லது கட்டளையையும்) அண்மையில்தான் கண்டேன். இது குறித்து ஒரு தெளிவானவிளக்கத்தை நான் முன்வைக்க வேண்டியுள்ளது. திரு.நாக. இளங்கோவனுடன் நான் விவாதித்தது ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டினைக் குறித்து. அதற்கு ஆதாரமாக திரு.இளங்கோவன் நேருவைக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நான் நேரு ஒரு வரலாற்றறிஞர் அல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். ‘ஈவெராவோ நேருவோ வரலாற்றறிஞர்கள் அல்ல. ‘ என்பதுதான் எனது வாக்கியம். இதற்கு பொருள் நேருவுக்கு வரலாற்றறிவு கிடையாது என்பதல்ல. That he is not a historian is not synonymous with the statement that he is ignorant of history. நேருவின் மீது கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருப்பினும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் பாரதத்தின் பழங்கால வரலாற்றில் அவர் ஒரு authority எனக் கருத முடியாது. இது வீர சாவர்க்கருக்கும் பொருந்தும். நாக. இளங்கோவன் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டிற்கு சான்றாக வீர சாவர்க்கரை குறிப்பிட்டிருந்தால் நான், ‘வீர சாவர்க்கர் மத்திய கால பாரதத்தினைப் பொறுத்த வரையில் சிறந்த வரலாற்றறிஞர்தாம் ஆனால் வேத கால பாரதத்தினைப் பொறுத்தவரை வரலாற்றறிஞர் என ஏற்க முடியாது ‘ எனக் கூறியிருப்பேன். எனவே நான் பண்டித நேருவிற்கு எவ்வித அவமரியாதையும் அளிக்க அக்கூற்றினைக் கூறவில்லை. அர்னால்ட் டாயீன்பீ ஹை.ஜி.வெல்ஸ் போன்ற அறிஞர்களுடன் ஒப்பிடத்தக்க உலக வரலாற்று நூலை அளித்தவர் நேரு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் ஆரிய படையெடுப்பு விவகாரத்தில் நேருவைக் காட்டிலும் பாபா சாகேப் அம்பேத்கரே ஆழமாக அக்கருதுகோளை அலசியுள்ளார். எவ்வாறாயினும், நேரு வரலாற்றறிஞர் அல்ல என்பது நேருவுக்கு வரலாற்றறிவு இல்லை எனும் ரீதியில் அறியப்பட்டு அது திரு,ஜெயபாரதனுக்கோ பிறருக்கோ மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்கு என் வருத்தத்தை நான் பதிவு செய்து கொள்கிறேன்.

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்