சமய மோகன்
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
சென்ற வாரம் மதிப்பிற்குரிய ஞாநி அவர்களின் இன்னொரு ரஜினிகாந்த் ? என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை படித்தேன். அக்கட்டுரையில் அவரது பார்வையை தெளiவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் திண்ணையின் வாசகனாகிய என்னுடைய பார்வையினை கீழே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
விஜயகாந்த் அவர்கள் சொந்தமாக பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். அதனைப்பற்றி இதுவரை பெரிய புகார்கள் எதுவும் எழவில்லை என்று ஞாநி அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக அவர் மக்கள் தொண்டாற்றுபவராகவோ, இல்லை திறமைசாலியாகவோ கருதமுடியாது. அவர் ஒன்றும் ஏழை மக்கள் படிப்பதற்காக துவக்கப்பள்ளி நடத்தவில்லை. இன்றைய சூழலில் பணம் காய்க்கும் பெரும் நிறுவனமாக கருதப்படும் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். அவர் ஆளுங்கட்சி எதுவாயினும் அதற்கு துதிபாடுவார், காரணம் அவர் நடத்தி வரும் கல்லூரி. ஆளுங்கட்சியை பகைத்துக் கொண்டால் பொறியியல் கல்லூரியில் எப்படி பணம் தேடுவது. தேடிய பணத்தை மக்களுக்காக செலவு செய்வது போல வேஷம் போடுவது. இவர் செய்யும் நல உதவி சிலகாலங்களாக தானே ? (அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டவை தானே ?
விஜயகாந்த் அவர்கள் கலைஞர் கருணாநிதிக்கு கலைவிழா எடுத்தபோது திமுக ஆளுங்கட்சி என்பதை மறந்துவிட வேண்டாம். இன்று பா.ம.க. மற்றும் திமுகவை விமர்சிக்கும் எண்ணம் உள்ளவருக்கு ஏன் அதிமுகவை விமர்சிக்கும் எண்ணம் வரவில்லை ?. இந்த மூன்றாண்டுகளில் அதிமுகவை விமர்சிக்காதது ஏன் ?, அவர் நடத்தும் பொறியியல் கல்லூரி தானே|.
இன்று சினிமாதுறையினரை பாதிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வந்துள்ளதே, அதனை விமர்சிக்கும் எண்ணம் ஏன் இவருக்கு வரவில்லை ?. தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்தவேண்டுமென்றால் வரிக்கட்டணம் அதிகம் என்பதனால் தானே இன்று பாண்டிச்சேரியில் நடத்துகிறார்கள் சினிமாக்காரர்கள். இதற்காக என்ன செய்தார் இவர் ?.
காவிரி பிரச்சினைப் போராட்டத் தகராறுகளைப் பற்றி :
மைசூரிலும் மாண்டியாவிலும் நடந்து வந்த தமிழ்நாட்டுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளில் இராஜ்குமார் ரசிகர்கள் முக்கிய பங்கினை வகித்தார்கள். செப்- 24 2002 அன்று தமிழகத்துக்கு காவிரி நீரை தரக்கூடாது என வலியுறுததி அடுத்த நாள் நடக்கவிருக்கும் ஊர்வலத்தைப்பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுவரை தமிழக நலன் மிது அக்கறையுள்ளதாக கூறிக்கொள்ளும எந்தவொரு நடிகரும் இதனை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இராஜ்குமார், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் ஊர்வலம் நடத்தியபொழுது எந்தவொரு கண்டனக்குரலும் உடனே தமிழகத்திலிருந்த நடிகர் மத்தியில் வரவில்லை.
முதலில் பாரதிராஜா செப் 27 2002 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் கே.சி. கவுடா கர்நாடகத்தில் நடந்த நிகழ்வுகளில் பங்குபெற்றதை கண்டித்தும், மெத்தனமாக இருக்கின்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் என்ன செய்ய போகின்றார்கள் ?. என்று வினவியும் அறிக்கை வெளiயிட்டார். இதன் பின்னரே நடிகர் சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டறிக்கை வந்தது.
அக்டோபர் 2 2002 அன்று தமிழகத்திரையுலகின் சார்பில் அனைத்து பிரிவினரின் கூட்டத்தை தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பாரதிராஜா கூட்டினார். தமிழர் பாதுகாப்பு அணி என்ற பெயரில் புதிய அமைப்பை தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கங்களும் இணைந்து உருவாக்கின. அக்கூட்டத்தில் தான் 12 ம் தேதி நெய்வேலியில் மிகப் பெரிய பேரணி நடத்த முடிவெடுத்தனர். முதலில் போராட்டம் எதுவும் நடத்த விருப்பம் தெரிவிக்காத நடிகர் சங்கம் பின்னர் பாரதிராஜாவை ஆதரித்து போராட்டத்தில் தாங்களும் பங்களிப்பதாக அறிவித்தது.
அக்டோபர் 6 2002 அன்று பாரதிராஜா தலைமையிலான குழுவினர் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் முருகையாவை சந்தித்து அனுமதி மற்றும் பாதுகாப்பு தர வேண்டுமென்று கோரினார்கள். அனுமதியும் அளிக்கப்பட்டது.
முதலில் பாரதிராஜாவின் தலைமையிலான நெய்வேலி போராட்டத்திற்கு திமுக ஆதரவு தந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் நடந்த நிகழ்வுகளினால் அதிமுக இப்பேராட்டத்தை தங்களுக்கு ஆதரவான போராட்டம் என்று கூறிக்கொள்ளும் என்பதற்காகவும், திமுகவின் தலைவர் கலைஞரை பாரதிராஜா கண்டுகொள்ளவில்லை என்பதற்காகவும் இதிலிருந்து பின்வாங்கியது . பிறகு விஜயகாந்தை முன்னிறுத்தி பாரதிராஜாவை பின்னுக்கு தள்ளும் செயலில் இறங்கியது .விஜயகாந்த் தலைமையில் நடிகர் சங்கம் முழுப்பொறுப்பேற்று அறவழியில் போராட்டம் நடத்தினால் தான்திமுக கலந்து கொள்ளும் என்று அறிவித்தது.
முதலில் இப்பிரச்சனையின் போது வெளiநாட்டில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். பாரதிராஜா தான் போராட்டத்திற்கு வித்திட்டவர். அதற்கான நடவடிக்கையிலும் :டுபட்டவர் பின்னால் நடந்த நிகழ்வுகளில் அரசியல் ஆதாயத்திற்காக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழுணர்வுடையவராக விஜயகாந்த் இருந்திருந்தால் இராஜ்குமாருடைய தமிழக எதிர்ப்பு
நடவடிக்கைகளை சினிமாத்துறை நண்பர்கள் மூலமாக தடுக்கும் வகையில் தனக்கு இயன்றதை செய்திருக்க வேண்டாமா ?. இல்லையெனில் நெய்வேலி போராட்டத்திற்கு இவரல்லவா விதை போட்டு செயலாற்றிருக்க வேண்டும் ?
சண்டியர் திரைப்படத்தின் பெயரை மாற்றக்கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருட்டிணசாமியின் ஆதரவாளர்கள் தேனியில் படப்பிடிப்பை நிறுத்தும் அளவுக்கு வன்முறையை நிகழ்த்திய போது நடிகர் சங்கத் தலைவராக என்ன செய்தார் இவர் ?.
ஒரு சமுகம் மேம்பட எத்தனையோ விதத்தில் பாடுபடலாம். மக்களுக்கு நன்மை செய்ய எத்தனையோ வழிகளுண்டு. அரசியல் முலமாகத்தான் செய்யவேண்டும் என்பதல்ல. ஒரு நடிகராக இருந்துகொண்டே சமுதாயம் மேம்பட பல தரமான திரைப்படங்களை தர முயலலாம். திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக இருந்துகொண்டு திரைப்பட துறை வளர்சிக்காக முயற்சிகள் மேற்கொள்ளலாம். நடிப்பின் சிகரமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்து இரண்டாண்டுகளாகிறது. ஆனால் முடிந்தபாடில்லை. அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் :டுபடலாம். இதுபோன்ற செயல்கள் திரைப்படத்துறையை மேன்மை அடையச் செய்யும். இதனை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிக்கொண்டு பதவிக்காகவும், புகழுக்காகவும் இன்றைய அரசியலுக்கு வர நினைப்பது மேலும் தமிழகத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும்.
பாமக இன்று வன்முறையை அதிகமாக கையாளுகின்றது என்பதே அதன் மேல் வைக்கப்படும் விமர்சனம். இதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல எனக்காட்டி கொள்ளும் வன்முறையாளராகவே இவர்கள் இருக்கிறார்கள். அதைவிட சிறப்பாக வன்முறை கலாச்சாரத்தை வளர்த்துவிடும் இவரை எப்படி அரசியலுக்கு அழைப்பது ?.
ரஜினிக்கு ஆதரவாக சினிமா துறையிலிருந்து எழுந்து குரல்களை விட அதிகமாக ஆதரவு குரல் விஜயகாந்த்க்கு எழுந்துள்ளதாக குறிப்பிட்டிருந்திர்கள். ரஜினிகாந்த் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக அடையாளங்காட்ட சிலக்காலங்களாக முனைந்தார். விளைவு அவர் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். சினிமாதுறையினர் தங்களுக்கு இலாபம்
தரும் எந்த நபரையும் ஆதரிப்பர் என்பது கடந்த கால வரலாறு. இதுவே ரஜினிக்கும் நடந்தது. ஆரம்ப காலத்தில் அனைவரும் ரஜினியின் துதிபாடினார் (அப்பொழுது ரஜினியின் படம் தயாரிப்பாளருக்கு பணம் காய்க்கும் மரம்). இன்றைய நிலைமை வேறு, ஆகவே துதிபாடுதல் விஜயகாந்த் பக்கம் சாய்ந்துள்ளது. விஜயகாந்த் வகிக்கும் இன்றைய நடிகர் சங்கத்தலைவர் என்ற பதவியே அவருக்கு இவ்வளவு ஆதரவு குரல்கள் தோன்றக் காரணமே தவிர வேறொன்றுமில்லை.
பாமக , திமுக, அதிமுக போன்ற கட்சிகளை எதிர்ப்பதற்காக விஜயகாந்த் போன்ற நபரை வளர்க்க நினைப்பது இடத்துக்காக மரத்தை வெட்டிய கதையாகிவிடும். மேலும் தமிழகத்தை இழிவு நிலைக்குக்கொண்டுபோய் விடும். இனி வரும் அரசியல் தலைவர்கள் தொலை நோக்கு பொருளாதார சிந்தனை, அரசியல் , சமூக மேம்பாட்டு சிந்தனையுடையவர்களாக, விஞ்ஞான வளர்ச்சி பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் சிந்தனையாக இருக்கிறது. எனவே விஜயகாந்த் இன்றைய சூழலில் நல்ல மாற்றாக விளங்குவார் என்று அவரை ஆதரிப்பது என்பதெல்லாம் நீந்ததெரியாதவன் முத்தெடுக்க கடலுக்கு சென்றதுபோல ஆகிவிடும்.
நன்றி.
வாழ்த்துகளுடன்.
கி. சமயமோகன்.
samayamohan@yahoo.co.in
- கடிதம் ஜூலை 15, 2004
- பாரென்ஹீட் 9/11
- Capturing the Freidmans (2003)
- பாப்லோ நெருடா
- அரசியலும் ஆங்கில மொழியும்
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15,2004
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- மெய்மையின் மயக்கம்-8
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- விழிப்பு
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- மழை வருது
- கழிவுகள்
- அதே கனவு
- நிஜங்களாக்கு….
- சமாதானமே!
- உணர்வு
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- எங்கள் தாயே
- நாகூர் ஹந்திரி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- குண்டுமணிமாலை
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- தீருமா சென்னையின் தாகம் ?
- உள் சாரல்
- நிஜங்களாக்கு….
- துணைநலம்
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- சத்தியின் கவிக்கட்டு 15
- கருவறை சொர்க்கம்
- சாவோடு வாழ்தல்
- காற்றுக்கிளி
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கணவனைக் கொல்லும் காரிகை
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- வெந்தயக் கோழிக்கறி
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911