கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அந்தி வான் என்னுள் ஏற்படுத்தும் பெரு வியப்பில்

பிரபஞ்ச நடுவில் என் தனிமையின் அச்சத்தில்

நியூரான்களின் இணைவதிர்வின் சிறு சிறு மின் புலத் தோன்றல்களில்,

என் தேவனே என் தேவனே

என்னை ஏன் நிரப்புகிறீர்.

காலம் காலமாக, பல ஆன்மீக அருளாளர்கள் தத்தம் இறை அனுபவங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில் பலரது வாழ்வில் இறை அனுபவங்கள் அவர்களது வாழ்க்கைகளையும், சில சமயங்களில் மனித நாகாிகத்தின் வரலாற்றினையும் கூட மாற்றியுள்ளன. மனிதன் எனும் உயிாினத்தின் அனைத்து கலாச்சாரங்களிலும் ஆன்மீகத் தேடல்கள், இறை அனுபவங்கள், இறை நம்பிக்கைகள் பொதுவாக உள்ளன. இறையனுபவங்கள் நம் மனித உயிாிகளுக்கே உாியதோர் உயிாியல் நிகழ்வாக இருக்கலாமா ?

நம் நரம்பு மண்டலம் தன்னியல்பிலேயே நம் ஆன்மீகத் தேடலுக்கான தூண்டுதலுடன் அமைந்துள்ளதாக கருதுகிறார் டாக்டர். ஆண்ட்ரூ நியூபர்க். நரம்பியல் ஆராய்ச்சியாளரான இவர், மற்றொரு (காலமான) முன்னணி மானுடவியலாளர் மற்றும் உளவியலாளரான டாக்டர். யூஜின் டி அக்யுலியுடன் இணைந்து எழுதிய ‘கடவுள் ஏன் இன்னமும் (மறைந்து) போகவில்லை ? ‘ (Why God Wonிt Go Away ?) எனும் நூலில் இறை அனுபவம் மற்றும் இறை நாட்டம் மனித இனத்தின் உயிாியல் அமைப்பின் ஓர் தனித்தன்மை வாய்ந்த கூறாக இருக்கலாம் எனக் கருதுகிறார். பல்வேறு மத பாரம்பாியத்தினாின் ஆன்மீக சாதனைகள் (சென் புத்த துறவிகளின் தியானமும், அசிசியின் புனித பிரான்ஸிஸ்தெிருச் சபை சகோதாிகளின் பிரார்த்தனையும்) மனித மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எப்போதும் மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகளின் இயக்கங்களை குறைப்பதுடன், வேறு சில பகுதிகளின் இயக்கங்களை அதிகாிப்பதை தன் பாிசோதனைகளில் பதிவு செய்துள்ளார்.

சான் டியோகோவின் கலிபோர்னிய பல்கலைகழகத்தினைச் சார்ந்த டாக்டர் விலையனுரெ¢ இராமச்சந்திரனின் நரம்பியல் ஆராய்ச்சிகளின் முடிவுகள் இறை அனுபவங்களின் உயிாியல் தன்மையினை மேலும் உறுதி செய்வனவாக உள்ளன. தன்ஆராய்ச்சி முடிவுகளின் தத்துவ மற்றும் மெய்யியல் தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இராமச்சந்திரன் எழுதிய ‘மூளைக்குள் மாயாத்மாக்கள் ெ மனதின் மர்மங்களுக்குள் ஓர் ஆய்வு ‘ (Phantoms in the Brain: Probing the Mysteries of the Human Mind) எனும் நூலில், மூளையின் ‘டெம்போரல் லோப் ‘ பகுதியில் வலிப்பு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அளித்த சிகிச்சையின் போது அவர்களிடம் தான் கண்ட அதீத இறை உணர்வினைக் குறித்து அதிசயிக்கிறார், ‘ ஓர் அசாதாரண புனித இருப்பை அவர்கள் உணர்ந்தனர். இறைவனுடன் தாம் நேரடி தொடர்பு கொள்வதாகவே அவர்கள் உணர்ந்தனர். சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களும் பிரபஞ்சம் தழுவிய பாிமாணங்கள் உடையதாகவே அவர்களுக்கு மிளிர்ந்தன. அனைத்து விஷயங்களையும் ஒரு விடுவிக்கப்பட்ட புதிராக மாற்றிவிட்ட ஞானோதயம் அவர்களுக்கு ஏற்பட்டது….பிரபஞ்சத்தின் அனைத்து ஞானத்தையும் தாங்கள் அறிந்துவிட்டதாக அவர்களை உணர வைத்த இந்த ஞானோதயம் மூளையின் அறிவுச் சார்ந்த பகுதிகளிலிருந்து ஏற்படவில்லை, மாறாக உணர்ச்சி சார்ந்த பகுதிகளிலிருந்துதான் எழுந்தது என்பதுதான் அவர்களே அறியாத முரணான விஷயம். ‘ அவர் மேலும் கூறுகிறார், ‘(இந்த ஆராய்ச்சிகள் மூலம்) நாம் நிச்சயமாக பெற முடிந்த ஒரு முடிவு என்ன வென்றால் மூளையின் சில நியூரானிய முடிச்சமைப்புக்கள் நம் சமய அனுபவங்களில் பங்கேற்கின்றன. சில வலிப்பு நோயாளிகளில் இச்சமய அனுபவங்கள் உச்சகட்ட வெளிப்பாடு கொள்கின்றன. ‘ தியோதர் டாடாவோஸ்கி தான் வலிப்புக் காணும் போது இறைவனைத் தொடும் உணர்வினைப் பெறுவதாகக் கூறுவதுண்டு.

மூளையின் உணர்ச்சி சார்ந்த சற்றே புராதன பகுதிகளுக்கும், தர்க்கம் மற்றும் பகுத்தறிவு சார்ந்த பகுதிகளுக்குமான உறவு ஒன்றோடொன்று முரண்பட்டதல்ல. மிக எளிமையானதாக தோன்றக் கூடிய பல அன்றாட வேலைகளில் கூட இவ்விரண்டு பகுதிகளின் ஒத்திசைவு இன்றியமையாதது. நவீன நரம்பியல் தன் மிக இளம் காலத்திலேயே(1848ெஇல்) பதிவு செய்து பின் மறந்துவிட்ட உண்மை இது. நமது மிகப் பொிய அறிவுபூர்வ சாதனைகளிலும் நமது உணர்வு பூர்வ தொன்மை தன்மை கொண்ட மூளைப்பகுதிகளுக்கு தொடர்பு இருக்கலாம். புகழ் பெற்ற நரம்பியலாளரான அந்தோனியோ தமாசியோ தனது ‘டெஸ்கார்த்தேயின் தவறு ‘ (Descarte ‘s Error) எனும் நூலில் இன்றும் நரம்பியலில் நிலவும் டெஸ்கார்த்தேயின் பகுப்புப் பார்வையின் அடிப்படையிலான உணர்ச்சிகள் மற்றும் கற்பனைக்கான தனி அறைத்தன்மை கொண்ட மூளைப்பகுதிகள் , பகுத்தறிவு, தர்க்கம் மற்றும் அறிவியல் ாீதியிலான அறிதல் ஆகியவற்றிற்கான தனி அறைத்தன்மை கொண்ட மூளைப்பகுதிகள் எனும் பிாிவு, மூளையின் உண்மை இயங்குமுறைக்கு சம்பந்தமற்றது என்பது மட்டுமல்ல நம் மூளையின் இயற்கையை அறிவதற்கும் தடையாக விளங்கக்கூடும் என கணிக்கிறார்.சில வருடங்களுக்கு முன்னால் ஸ்டான் ஃபோர்ட் பல்கலைகழகத்தின் நரம்பியங்கியலாளரான கார்ல் பிர்ப்ராம் நமது நினைவுகள் நம் மூளையின் அனைத்து பகுதிகளிலும் படர்ந்திருப்பதாக ஒரு கோட்பாட்டினை தன் ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைத்தார்.

எனவே இராமச்சந்திரன் மற்றும் நியூபர்க் ஆய்வுகளினை விவாதிக்கையில் நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது, நாம் மீண்டும் டெஸ்கார்த்தே பகுப்பில் சிக்கிவிடக்கூடாதென்பதே. ஒரு எளிமையான குறுகியலாக இறை அனுபவமே மூளையின் ‘இந்த பகுதியினைச் சார்ந்ததுதான் ‘ என நாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. கலை, அறிவியல் ஆகிய தேடல்களில் இறை அனுபவ விழைதலின் காரணத்தன்மையையும் நாம் இன்னமும் முழுமையாக அறிந்துவிடவில்லை. அதே நேரத்தில் நம் இறை நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களின் உயிாியல் மற்றும் நரம்புெஇயங்கியல் சார்ந்த பாிமாணங்களை அறிந்து கொள்வது அவற்றினை நாம் சுய அனுபவநிலையிலாவது ஆக்கபூர்வமாக நம் வாழ்வில் இயைத்திட உதவும்.

இராமச்சந்திரனின் ஆய்வு முடிவுகள் நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்டவை யென்றால், கனடாவைச் சார்ந்த டாக்டர். மிக்கேல் பர்சிங்கர் தம் ஆய்வுக்கு தன்னையே ஆட்படுத்திக் கொண்டுள்ளார். காந்தப்புலத்தினுள் தன் ‘டெம்போரல் லோப் ‘பினை ஆட்படுத்திய போது தான் ஒரு ‘இறை அனுபவத்தை ‘ பெற்றதாக கூறும் பெர்சிங்கர், பல ஆரோக்கியமான நபர்களை(புகழ் பெற்ற ‘Skeptical Inquirer ‘ பத்திாிகையின் மைக்கெல் ஹெர்மர் உட்பட) தம் ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களை இறை அனுபவத்தை அல்லது அதனை ஒத்த அதீதத் தன்மை கொண்ட அனுபவங்களை (உதாரணமாக வேற்றுக்கிரகவாசிகளுடன் சந்திப்பு, தேவதைகளுடன் சந்திப்பு போன்றவை) பெற வைத்துள்ளார். ‘கடவுள் நம்பிக்கைகளின் நரம்பியல் சார்ந்த உளவியல் அடித்தளங்கள் ‘(Neuropsychological Bases of God Beliefs ) எனும் நூலில் பெர்சிங்கர் ‘டெம்பொரல் லோப் ‘பின் இத்தன்மை மனித வாழ்வின் ஜீவித்திருத்தலுக்கு மிக முக்கிய பணியாற்றுவத ‘கக் குறிப்பிடுகிறார். ‘பஞ்சங்கள், பட்டினிகள், சகிக்க முடியாத கொடுமைகள் என பல கொடிய இடையூறுகளை சகித்து இன்றும் ஜீவிக்கும் மனித உயிாினத்தின் நம்பிக்கைக்கு வலிமை அளித்தது இந்த ‘டெம்பொரல் லோப் ‘ சார்ந்த இறை அனுபவங்களே. ‘

எனில் இறை என்பது தான் என்ன ? 40 ஹெர்ட்ஸ் காந்த புலம், நம் ‘டெம்போரல் லோப் ‘ பகுதிகளின் நியூரான் வலை பின்னலில் ஏற்படுத்தும் ஒரு மின்காந்த புலம் சார்ந்த சூறாவளியின் விளைவுதானா ? அண்ட்ரூ நியூபர்க்கினை பொருத்த வரையில் இக்கேள்வி பொருளற்றது.ஒரு படத்தினை பார்க்கும் பொழுது ஒருவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்து விட்டு அப்பதிவுகள் மறு நிகழ்வு மூலம் அவர் அப்படத்தை உண்மையில் பார்த்துக்கொண்டிருக்கிறாரா என தீர்மானிப்பது போன்றது அது என்பது நியூபர்க்கின் வாதம். ஆனால் ஒன்றை மட்டும் நியூபர்க் நிச்சயப்படுத்துகிறார், ‘நம் ஆன்மீக வேட்கை என்பது நம் உயிாியல் கட்டமைப்பில் தன்னியல்பிலேயே உள்ளதோர் இயல்பாகும். ‘

மனித வரலாற்றின் முக்கியமான மேதைகள், மனித குல வாழ்வியலுக்கு முக்கிய பங்களித்தவர்கள் அனைவருமே ஒரு விதத்தில், ‘தன்னை ‘க் கடந்த மாபெரும் ‘ஏதோ ‘வொன்றுடன் ‘தன்னை ‘ இணைத்துக் கொண்டவர்கள்தாம். இத்தகைய ‘தன்னைக் கடந்ததோர் பிரபஞ்சம் தழுவிய ‘ அனுபவம் அவர்கள் வாழ்வின் மிகப் பொிய சாதனைகளுக்கு வழி வகுத்ததோடல்லாமல், மனித உயிாினத்தின் வாழ்வில் முக்கிய திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு பெரும் சோகம். அது இலட்சிய முனைப்புடன் வாழும் தனிமனிதனின் வாழ்வை அர்த்தமற்றதாக்கும் நிச்சய உண்மைத் தன்மையுடன் விளங்குகிறது.இன்று மனித இனம் அடைந்துள்ள பெரும் பாிணாம பயண வெற்றி, (குகைகளிலிருந்து அணு ஆயுதங்கள் வரை என்கிற அளவிலாவது), இலட்சியப் பைத்தியங்களால் தான் ஏற்பட்டுள்ளது. மரணம் எனும் உண்மை அளிக்கும் பெரும் அதிர்வுக்கும் அர்த்தமற்ற தன்மைக்கும் எதிரானதாக விளங்கும் இலட்சிய உத்வேகங்களில் மிகவும் மகத்தானதாக விளங்கி வருவது ‘தன்னைக் கடந்ததோர் பிரபஞ்சம் தழுவிய அனுபவம் ‘ தான். மிகச்சிறந்த மனங்களின் உந்து சக்தியாக இது விளங்கி வந்ததை பலர் உணர்ந்துள்ளனர். ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்வில் இவ்வுணர்வு பிரபஞ்சத்தினை தன் சமன்பாடுகள் மூலமாக அறிந்துணரும் முயற்சியாகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு சிறிய சட்டகங்களுள் வெளிப்படும் சமய உணர்வு தன் வாழ்வின் துக்கங்களை எதிர்கொள்ளும் ஓர் அதிர்வுகளை உறிஞ்சும் கருவியாகிறது.

யுங்கிய (Jungian) உளவியலாளரான கிரெக் மொஹென்சன் ‘கடவுள் ஒரு சோக மன அதிர்ச்சி ‘ ‘(God Is a Trauma) எனும் நூலில் மன அதிர்ச்சியூட்டும் சோக நிகழ்வுகள் தனி மனித மனத்தின் ‘நான் ‘ அம்சத்தின் முன் ஏற்படுத்தும் பிரம்மாண்டத்திற்கும், பக்தனின் மனம் தன் இறைவனின் பிரம்மாண்டத்தின் முன் கொள்ளும் அச்ச மயமான பக்திக்குமான இணைத் தன்மையை சுட்டிக்காட்டுகிறார். (பகவத் கீதையில், விஸ்வ ரூப தாிசனம் அர்ஜுனன் மனதில் பிரமிப்பை விட அச்சத்தையே பொிதும் தூண்டியது. தன் இறைவனின் முழுமையான பிரபஞ்ச ஆளுமையின் தாிசனத்தை கண்ட அர்ஜுனன் அது தன் கண்களின் முன்னிருந்து மறைந்து போவதையே விரும்பினான். யூத திருமறையில் யோபு தன் வாழ்வை சிதைத்தழித்த யஹீவாவின் மாபெரும் சக்தியின் முன் அடைந்த மனக் கிளர்ச்சியும் இங்கு நோக்குதற்குாியது.) தன்னை மீறி மிகக் கொடூரமாகவும், மிகவும் வன்முறையுடனும் தன் வாழ்வின் போக்கை ஸ்தம்பிக்க வைக்கும் அனைத்து சம்பவங்களையும் தன் மனம் காணும் முறையே கடவுள் எனும் வார்த்தை என கார்ல் யுங் கூறுவார்.

ஆக, கடவுள் அல்லது இறை அனுபவங்கள் அல்லது பிரபஞ்ச தாிசனங்கள் அனைத்துமே ஒரு டார்வினிய தகவமைப்பாக மனித சமுதாயத்தில் இயங்கி வந்துள்ளனவா ?

1971ெஇல் ‘சுயநலமுடைய மரபுக்காரணிகள் ‘ (Selfish Genes) எனும் தன் நூலில் புகழ் பெற்ற நியோடொர்வினிஸ்டான ாிச்சர்ட் டாவ்கின்ஸ், ‘மீம்கள் ‘ எனும் கலைச் சொல்லை உருவாக்கி பயன்படுத்தியிருந்தார். மரபுக்காரணிகள் எவ்வாறு இயற்கை தேர்வின் மூலம் உயிாியல் பாிணாமத்தை ஏற்படுத்தியுள்ளனவோ, அதைப் போலவே சில கோட்பாடுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், நம்பிக்கைகள் தாம் மூளைகளில் தம்மை தகவமைப்பு மூலமாகவும், தன்னைச் சுமப்போருக்கு அளிக்கும் பாிசுகள் மூலமாகவும் தம்மை காலம் காலமாக (மனித மூளைகளில்) ஜீவிக்கின்றன எனும் கருத்தினை அவர் அந்நூலில் கூறியிருந்தார். இவ்வாறு மனித மூளைகளில் ஜீவிக்கும் எண்ண/நம்பிக்கை வடிவுகளை அவர் மீம்கள் என குறிப்பிடுகிறார்.

டார்வினிய தத்துவ பின்புலமுடைய டானியல் டெனட் மற்றும் ஸுஸன் பிளாக்மோர் போன்றவர்கள் மத நம்பிக்கைகளின் பரவுதலுக்கான காரணிகளை மிமியியல் (memetics) அடிப்படையில் ஆராயத் தலைப்படுகின்றனர். (மிமியியல் ஒரு உண்மையான அறிவியல்தானா என்பது குறித்து காரசாரமான விவாதங்கள் இன்னமும் முடிந்தபாடில்லை. காலம் சென்ற பாிணாமவாத அறிவியலறிஞரான ஸ்டாபன் கவுல்ட் மீம்களை ‘அர்த்தமற்ற குறியீடு ‘ என சாடுகிறார்.) முக்கியமாக, நியோடொர்வினியவாதியான ஆரோன் லிஞ்ச் ‘தொற்றிப் பரவும் எண்ணங்கள் ‘ (Thought contagion) எனும் நூலில் எத்தகைய தகவமைப்புக்கள் மற்றும் சுமப்போருக்கு பாிசளிக்கும்செயல்பாடுகள், சமயம் சார்ந்த மீம்களை வாழ வைக்கின்றன என ஆராய்கிறார். ‘சுவர்க்கம் ‘, ‘நிரந்தர நரகம் ‘, ‘கர்ம வினை ‘ போன்ற மீம்கள் குறிப்பிட்ட நம்பிக்கை சார்ந்த நடத்தைகளை தலைமுறைகளுக்கு கடத்திச் செல்ல உதவுதலை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் சில மீம்களும் அவை சார்ந்த நடத்தைகளும் மனித ஜீவித்தலுக்கு இன்றியமையாத உயிாியல் அடிப்படை கொண்டவை என்பதே இராமச்சந்திரன்நெியூபர்க்ெபெர்சிங்கர் ஆய்வுகளின் வெளிப்பாடாக உள்ளன. இன்னமும் சாியாகச் சொன்னால், எந்த மீம்கள் டெம்பொரல் லோப் சார்ந்த ஆன்மீக அனுபவங்களை மிகச் சிறப்பாக கொடுக்க முடியுமோ அவை சந்ததிகளுக்கு கடத்த தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

தனிமனித வாழ்வினை அர்த்தமற்றதாக்கும் ஆற்றலுடைய இறப்பினைத் தாண்டி மனிதம் வாழ வழிவகுக்கும் உயிாியல் தகவமைப்பாக சமயத்தையும் அதன் மையமாக விளங்கும் ஆன்மீக இறை அனுபவங்களையும் காண்பது குறுகியல் வாதமாகவே படலாம். ஆனால் சமய உணர்வின் உயிாியல் இருப்பிடத்தை அறிதல் சமய அனுபவங்களை மேலும் செதுக்கி அழகு படுத்துகிறது. இந்திய தத்துவ மரபு சார்ந்த அறிதலில், புலன் சார்ந்த அறிதல் நம் மனத்திரையில் எழுப்பியதே இப்பிரபஞ்சம். முடிவில் நம்மைத்தான் நாம் அறிந்து கொள்கிறோம். நாம் உருவாக்கும் அத்தனை அறிதல் முறைகளும், தேவெ தேவியரும், இறைக் கோட்பாடுகளும், இயற்பியல் சமன்பாடுகளும், இறக்கப்பட்ட திருமறைகளும் நாம் உருவாக்கியவையே. இராமச்சந்திரனின் கூறுவது போல ‘நம் உடல் என நாம் அறிவதும் கூட மூளை ஏற்படுத்தும் ஒரு பிம்பமே. மாயை என்பதன் பொருளை நரம்பியல் இன்று அறிகிறது. ‘ தன்னைத் தான் உணரும் ஒரு பிரபஞ்ச மனதின் பகுதிகளாக தொடங்கி , பின் அப்பகுதித் தன்மையிலிருந்து முழுமைக்கு விாிவடைய வைக்கும் மனத்தொழில்நுட்பக் கருவிகளாக சமயத்தினையும் அதன் சடங்காச்சாரங்களையும் இங்கு நாம் காண்கிறோம். சித்தர் பாடல்களிலும், அத்வைத வேதாந்தத்திலும், பெளத்த ஞான மரபுகளிலும் தெய்வானுபங்களை, சமயக் குறியீடுகளை கருவிகளாக ெ பார்க்கும் பார்வை சில ஆழ்ந்த உயிாியல் உண்மைகளால் மீண்டும் உறுதி செய்யபட்டுள்ளது. இராமச்சந்திரனை பொறுத்தவரையில் மனமும் பருப்பொருட் பிரபஞ்சமும் ‘சிவ தாண்டவத்தின் வெளிப்பாடு. ‘

ஆபிரகாமிய சமயங்களில் (மார்க்சியம் உட்பட), இத்தகைய பார்வை கடினமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். மார்க்சியம் தவிர்த்து மற்ற ஆபிரகாமிய மதங்களில் தனித்தன்மை கொண்ட இறைவனின் இருப்பு சத்தியமானது. கேள்விகளுக்கும் ஆராய்ச்சிகளின் மூலமான அறிதலுக்கும், ஆத்மா இரண்டறக் கலப்பதற்கும் அப்பாற்பட்டது. இந்நிலையில் (அம் மத பீடங்களுக்கு / இறையியலாளர்களுக்கு) இறைவனை ஓர் உயிாியல் நிகழ்வாக, ஓர் டார்வினிய தகவமைப்பாக மாற்றுவது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத ஒன்று. நியூபர்க்ெஇராமச்சந்திரன் ஆகியோாின் ஆராய்ச்சிகள் கூட ‘இறைவன் நம்மை படைத்ததால் அவனை அறிய நம் மூளையில் ஒரு செயல்பாட்டினையும் எழுதியிருப்பது ஆச்சாியமல்ல ‘ எனும் சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பெர்சிங்காின் முடிவுகளோ மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உதாரணமாக, ‘உயிாியல் ஒழுக்கவிதிமுறைகளை ‘ குறித்த வத்திகான் தலைமைபீட கருத்துக்களை

தொிவிப்பவரான பிஷப் எலியோ சர்கேஷியா இந்த ஆராய்ச்சி முடிவுகளை ‘மனித இயற்கையை பொருள்முதல்வாதத்தின் தவறான நோக்குடன் ஆராய்ந்ததால் எழுந்தவை ‘ என கண்டிக்கிறார். நாம் நம்முடைய உயிாியல் பாிணாம பாரம்பாியத்தை ெ நம்மில் அதன் வெளிப்பாடுகளை அத்தனை எளிதாக தள்ளிவிட முடியாது. இப்பார்வை நமக்கு பல விதங்களில் ஒளி அளிப்பதாக உள்ளது. தனிமனிதன் மற்றும் சமூகம் உணரும் சமயத்தின் மிகப்பொிய ஆற்றலின் மூலத்தின் ஒரு முக்கிய பாிமாணத்தை இது நமக்கு காட்டுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் தனிமைப்படல்தான் மதத்தின் ஆற்றலுக்கு காரணம் எனும் மார்க்சிய கோட்பாட்டினை பொய்ப்பிக்கிறது. மார்க்சியவாதிகள் தங்கள் கோட்பாட்டினை வேண்டுமானால் பின்வருமாறு மாற்றி கூறலாம், ‘இந்த உயிாியல் செயல்பாடு தீவிரத்தன்மையுடன் இயங்க சமூகக் காரணிகள் தேவை. ‘ ஆனால் பல்வேறுபட்ட சமுதாயங்களிலும் சமய உணர்வின் வெளிப்பாடு (சீனத்தில் ஃபாலுன் காங் உட்பட) சமூகக்காரணிகளுக்கும் அப்பாற்பட்ட வலுவான ஆழமான சில காரணிகளின் செயல்பாட்டைக் காட்டுகிறது. ‘முழுமையான உண்மையை ‘ வெளிப்படுத்தியதாக தங்களைக் கருதிக் கொண்ட பல ‘இறுதி தீர்க்கதாிசிகள் ‘, ‘இறைவனின் ஒரே தூதர்கள் ‘, அவர்கள் மூலம் இறக்கப்பட்ட ‘திருமறைகள் ‘ ஆகியன உண்மையில் ஒரு டார்வினிய உயிாியல் கூற்றின் வெளிப்பாடு என்பதனை உணர்வது பல மதவெறி சார்ந்த மானுட சோகங்களை தவிர்க்கலாம்.

பல்வேறு கலாச்சாரங்களில் உருவான, பல்வேறு முகப்பூச்சுக்களை ஏற்றுள்ள இறை நம்பிக்கைகள் இப்பார்வையில் ஒரே உயிாியல் தொழிலினை ஆற்றுபவையாகின்றன.

***

அரவிந்தன் நீலகண்டன்

***

பின்-குறிப்பு-1:

கட்டுரையில் காணப்படும் கிழக்கத்திய மேற்கத்திய இறைக்கோட்பாட்டு வரையறைகள் குறித்து:

தனித்தன்மையும் மனிதத் தன்மையும் கொண்ட ஆபிரகாமிய கடவுட் கோட்பாட்டினை வைஷ்ணவத்தின் சைதன்ய பக்திெவேதாந்த மரபின் இறைக்கோட்பாட்டில் காணலாம். மேலும் சார்டின், புனித தெரசா (கல்கத்தாவின் தெரசா அல்ல) போன்ற கிறிஸ்தவ இறையியலாளர்கள் மற்றும் மெய்ஞானிகள் ஆகியோாின் இறையுணர்வு, சூஃபி இறையுணர்வான ‘வக்தத்ெஉல்வெஜூத் ‘ போன்றவையோ தனித்தன்மை கொண்ட இறைவனை

கொண்டவையல்ல. எனவே தீர்மானமான வரையறைகள் இங்கு தவறானவை. ஆபிரகாமிய மற்றும் கிழக்கத்திய மதங்களின் மேலோங்கிய தன்மையைக் கொண்டே இப்பகுப்புகள்

செய்யப்படுகின்றன. ெஅரவிந்தன் நீலகண்டன்

பின்குறிப்பு – 2

பகவத் கீதையின் விஸ்வரூப தாிசனம் – இரு பதிவுகள்

விஸ்வரூப தாிசனம் முதலில் அர்ஜுனனுக்கு களிப்பூட்டினாலும் அதனைத் தொடர்ந்து அவனுக்கு ஏற்படுவது பேரச்சமே.

முன்னம் காணாக் காட்சி கண்டேன்

உள்ளம் வியந்து களிப்புற்றேன்;

மனமோ அச்சம் எய்திட யானும்

நடுக்கம் உற்றுத் தவிப்பதனால்

முன்புள்ள இனிய உருவம் தாங்கி

அமைதி அருள்வீர் ஜகதீசா (பகவத் கீதை அத் 11: ஸ்லோ 45)

ஆனால் அதே உருவத்தை கண்ணுற்ற மற்றொருவருக்கோ அதே தாிசனம் மீண்டும் மீண்டும் எண்ணி ஆனந்தப்படும் விதத்தில் அமைகிறது. த்ருதராஷ்ட்ரனிடம் சஞ்சயன் பின்வருமாறு கூறுகிறார்.

அரசே! ஹாியின் அற்புத உருவம்

தனையே மீண்டும் மீண்டும் யான்

எண்ணி வியப்பால் மேலும் மேலும்

ஆனந்தம் தனை அடைகின்றேன். (அத் 18: ஸ்லோ 77)

ஆக சஞ்சயனுக்கும் அர்ஜுனனுக்குமான வேறுபாடென்ன ? அர்ஜுனன் இன்னமும் தானகலா போராளி ஆனால் சஞ்சயனோ சாட்சி. உபநிஷத பறவைகளின் வேறுபாட்டின் பிரதிபலிப்பினையே நாம் அர்ஜுனசெஞ்சய வேறுபாட்டில் காண்கிறோம் என எண்ணத் தோன்றுகிறது.

(பகவத் கீதை மொழிபெயர்ப்பு : மதிப்பிற்குாிய பொியவர் துளசிராம்

வெளியீடு : விவேகானந்த கேந்திரம்)

***

Series Navigation