எஸ். ஷங்கரநாராயணன்
கடவுளின் காலடிச் சத்தம் – 1
கவிதை சந்நிதி
1
கறுப்புக் குதிரை
வெள்ளை ரஸ்தா
கவிதைப் பயணம்
2
காதலி வரவில்லை
காத்திருக்கும் காதலன்
நலமா என்றது புல்வெளி
3
சிலுவையில் ஏசு
முள்ளில் கிரீடம்
பனித்துளி வைரம்
4
கைநிறையக் கடிதம்
வருத்தமாய் தபால்காரன்
கடிதம் வராதவர் விசாரிப்பு
5
கானகப் பயணம்
ஓங்கியெழும் பாடல்
ரசித்து கூட நிலவு
6
சாகச் சொல்லும் வாழ்க்கை
வாழச் சொல்லும் மரணம்
என்ன செய்ய
7
யானை உண்ணும்
தென்னையோலை
தலையைத் தலையை ஆட்டியது
8
விற்ற வீட்டை
தாண்டிப் போகையில்
விசாரிக்கும் பூமரம்
9
பிரசவ அறை
அழும் குழந்தை
சிரிக்கும் கடவுள்
10
புத்தாண்டா பிறந்தநாளா
சிரிக்கும் பூமரம்
தினசரி
11
அய்யோ பதறி
சருகுயர்த்தும் காற்று
உதிரும் நட்சத்திரம்
12
குடையை மடக்கி
வீட்டுக்குள்ளே வர
குடைசிந்தும் மழை
13
இலையுதிர் காலம்
போய்விட்டன பறவைகள்
வந்தது மரங்கொத்தி
14
குடிசைவாசல்
கயிற்றுக்கட்டில்
கோபுரவிளக்கு
15
மௌனம் ஏன் பெண்ணே
ஏதாவது பதில் சொல்
உன் சலங்கைக்கு
16
என் வீட்டில் போலவே
பன்னீர்ப் பூ மரம்
எதிரி வீட்டிலும்
17
மூன்றாம்பிறை நாளில்
குளத்தில் முழு நிலா
யாரவள் குளிப்பது
18
நதியில் வீழ்ந்த மலர்
மிதந்து போக
நகரவில்லை நிலா
19
வண்ணத்துப்பூச்சிகளுக்குக்
காத்திருக்கும் பூக்கள்
மனிதன் கண்டு முகம்சுளிக்கும்
20
சூரியக் கோபம் கண்டு
முகம் கருக்கும்
வெள்ளை மேகம்
21
குடிகாரக் கணவன்
சாத்தியிருக்கும் கதவு
வாலாட்டும் தெருநாய்
22
ஒட்டுகிறான்
பன்ச்சர்
சட்டையில் கிழிசல்
23
தந்தை மகற்காற்றும் உதவி
அப்பப்ப
செலவுக்குத் துட்டு தரல்
24
கண்மூடிய தவத்தில்
துறவி
பூத்துக்குலுங்கும் மரம்
25
தலை நிறையப் பூவைத்து
சமையல் செய்கிறாள்
அசைவம்
26
வியர்வைபெருக குனிந்துபெருக்க
அறை சுத்தமாச்சு
உடலும்
27
டென்னிஸ் வீராங்கனை
கழுத்துச் சங்கிலி
பளபளக்கும் வியர்வை
28
ஓடைமணல்
ஓரமாய்ப் படகு
வரும் நீருக்காய்
29
நலமா என்றது நிலா
பதில் சொல்லவில்லை
சோளக்கொல்லை பொம்மை
30
ஓடையில் புதுவெள்ளம்
மணல் பார்வையில்
காணாமல் போயின மரங்கள்
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- புறம்போக்கு
- பெண்மை விலங்கில்
- நூல் வெளியீட்டு, அறிமுக விழா
- ’எண்’ மகன். நாடகம்- பரீக்ஷா
- சிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்
- “கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்
- தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு
- யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
- நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
- பெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்
- வரவேற்பின்மை
- நறுக் கவிதைகள்
- அப்பாவி நாவுகள்
- தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !
- என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7
- உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…
- காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை
- தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்
- விட்டுவிடுங்கள்
- வின்சென்டின் அனுபவக் குதிர்
- இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)
- பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
- அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை
- தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1
- இழப்பு
- கறுத்த நாயும் பாத்றூமும்
- இழப்பு
- என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
- கடவுளின் காலடிச் சத்தம் – 1
- சந்திப்புக்கு அடுத்து பிரிவு
- எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat
- கழுதை ஏர் உழவு!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]
- திருமணம்
- ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது
- வேதவனம் விருட்சம் 7
- விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
- ஆக்ரமிப்பு…,
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று