கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

K J ரமேஷ்


கடற்கரைக்கு வந்து சூரிய குளியல் குளித்து, கடலில் நீந்துபவர்களுக்கு எதேனும் ஏற்பட்டால்

காப்பாற்றும் உயிர் காப்பாளர்களாகத் தோன்றும் ‘சாண்டில்ய அழகிகளும் ‘ கட்டு மஸ்தான ஆணழகர்களும் வரும் ‘பே வாட்ச் ‘ என்ற தொடர்.

கடற்கரையில் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவ சிறுமியர், மற்றும் வளர்ப்புப் பிராணிகள்

நாய், குரங்கு இவற்றிற்கு அடைக்கலம் கொடுத்தல், கணவன் மனைவி சண்டையை தீர்த்தல், காதலன் காதலி

ஊடல் தணித்து சேர்த்தல்,தற்கொலைக்கு முயலும் அபலைப் பெண்களுக்கு ஆறுதல் என்று பலவிதக் குடும்ப,

சமூகப் பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவ்வப்போது கடலில் மூழ்கி தத்தளிப்பவர்களைக் காப்பாற்றி

‘உயிர் முத்தம் ‘ கொடுத்து நுரையீரலுக்கு புது மூச்சு கொடுத்து நம் தமிழ் சினிமா ஸ்டைலில் வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியேற்றி…. இப்படி சம்பிரதாயமான முதலுதவிகள் செய்து கொண்டிருக்கும் போது

பீங்க் பீங்க் என்று சைரன் அலற ஆம்புலன்ஸ் வந்து விடும். கடமை வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் கடமையை தொடர கண்காணிக்கும் கூண்டுக்கு புறப்பட்டு விடுவார்கள். அப்படி யாரையாவது காப்பாற்ற முடியாமல் போய்விட்டால் மனவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு குற்றவுணர்வில் தவித்து கலங்கி அழுதுப்

புரண்டு ஆர்ப்பாட்டம் செய்து சக வீரர்கள் ஒருவருகொருவர் ஆறுதல் சொல்லி தேற்றும் நாடகமும் உண்டு.

ஒருவர்கொருவர் காதல், ஒருத்தி காதலனை இன்னொருத்தி அபகரிக்கும் காதல் போட்டி,

முக்கோணக்காதல், ஒரு நாள் உறவு,பிரிவு கண்ணீர் எல்லாம் உண்டு. ஆனால் இதிலிருக்கும் ஒரே

விசேஷமான விஷயம் என்ன தெரியுமா ?

அதற்கு முன்னால் ஜோவின் கதையை பார்ப்போம்.ஜேன் பென்குவின் முட்டையை ஏன்

வீசியெறிந்தாள் ?ஜோ வடதுருவத்திற்குச் சென்று பனிகரடியோடு சண்டையிட்டது உண்மை யென்றால் பென்குவின் முட்டை அங்கே கிடைத்திருக்காது. பென்குவின் பறவை தென் துருவத்தில் மட்டுமே

காணப்படுகிறது. ஜோ விட்ட புருடா ஜேனுக்குப் புரிந்து வெறுத்துப் போய் முட்டையை வீசியெறிந்தாள்.

பென்குவின் பறவையைப் பற்றி இன்னும் ஒரு செய்தி. அம்மா பென்குவின் முட்டையிட்டு விட்டு

‘ஊர் சுற்ற ‘ கிளம்பி விடும். அப்பா பென்குவின் ‘தாயுமானவனாகி ‘ அடை காத்து குஞ்சு பொரிக்கும்.

இதே போல்தான் கடல் குதிரையும். அப்பா கடல்குதிரைதான் முட்டைகளை தன் வயிற்றில் உள்ள பையில்

சுமந்து குஞ்சு பொரிக்கும். மனித இனத்தில் தான் ‘பொறுப்புள்ள ‘ அப்பாக்கள் இருக்கிறார்கள் என்று

நினைப்பவர்கள் இதை போல் அசட்டு அப்பாக்கள் மற்ற இனங்களிலும் இருப்பதை நினைத்து

சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

சரி இந்த வாரம் நம் மாவீரன் ஜோ என்ன செய்தான் என்று பார்ப்போம். ஜேனுக்கு சாலமன் வைத்த

சான்ட்விட்ச் ரொம்ப பிடிக்கும். ஏற்கெனவே ஜோ மீது செமக் கடுப்பில் இருந்தவளை சமாதானப்படுத்தும்

எண்ணத்தில் எப்படியாவது ஒரு பெரிய சாலமன் மீனைப் பிடித்து தந்து அவள் கோபத்தை தணிக்கலாம் என்று ஆற்றங்கரையில் மீன் பிடிக்க உட்கார்ந்தான். இரண்டு மூன்று நாட்களாகியும் ஒரு பெரிய மீன்

கூட கிடைக்கவில்லை. வழக்கம் போல் விடை உங்களுக்குத் தெரியும் தானே ? இல்லையென்றால் விடை அடுத்த வாரம்….

நம் கடற்கரை காவல்காரர்களிடம் என்ன விசேஷம் ? இத்தனை கதைகளுக்கும் அவர்கள் அணியும்

கவர்ச்சிகரமான ந்ீச்சல் உடைதான்! பார்பி பொம்மை போல் இருக்கும் அவர்களது அங்க வளைவுகளைப்

பார்த்து ரசிப்பதற்குத்தான் இந்தத் தொடர். அதுதானே அவர்களின் தொழில் ரீதியான உடை!! இந்தத் தொடரில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் வேறு எந்த உடையும் தேவைப்படாது. அதிகப்படியாகப்

போனால் ஒரு துண்டு.

இதில் நடிக்கும் பமேலா ஆண்டர்சன்,யாஸ்மின் பிளீத்,மைக்கேல் நியூமென், டேவிட் ஹாசல்ஹாஃப்

இவர்களை ஜீன்ஸ்,டா ஷர்ட், கோட் சூட் போன்ற முழு ஆடைகளுடன் பார்த்தால் நம்மால் அடையாளம்

காண முடியாமல் போகலாம்.

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation