நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மனிதன் உலகத்தின் கடல்களில் வாழும் திமிங்கலம் போன்ற பெரும் மீன்களை அழித்தும், அதிகப்படியாக மீன்பிடித்தும் உலகத்தின் கடல்களை வெற்றிடமாக ஆக்கி வருகிறான்.
இதுவரை எவ்வளவு அழிந்திருக்கிறது, எவ்வளவு கடல்வளத்தை மீட்டெடுக்க முடியும் என்பது இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை
14 பல்கலைக்கழகங்களும், பல நாட்டு அறிவியல் அமைப்புக்களும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக, கடல்வளத்தின் அழிவைப்பற்றி வரலாற்று ரீதியாக ஒரு முடிவுக்கு வர முடிகிறது.
வால்ரஸ், கடல்பசு, கடல் ஆமைகளும், பெரும் காட் மீன் களும் திரிந்துகொண்டிருந்த கடலும், கடற்கரைகளும் வெற்றிடங்களாக ஆகி வருவதை இது படம்பிடித்துக் காட்டுகிறது
இன்று, திமிங்கலங்களும், கடல் பசுக்களும், மெனெட்டாக்களும், துறவி சீல்களும், இன்னும் பல பெரும் மிருகங்களும் பல கடல்களில் காணாமல் போய்விட்டன
முக்கியமான விஷயம், வரலாற்று ரீதியாக மனிதன் கடலின் வளத்தை மனித உபயோகத்துக்காக தொடர்ந்து அழித்துக்கொண்டிருப்பதுதான் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
‘எல்லா கடற்கரை ஓரங்களிலும் பெரும் விலங்குகள் பெரும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்திருக்கின்றன. ‘ என்று ஜெரமி ஜாக்ஸன் கூறுகிறார். இந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் முக்கிய ஆசிரியராக இருக்கும் இவர், ‘இன்று பார்க்கும் கடற்கரை, நீங்கள் முன்பு பார்த்திருக்கக்கூடிய கடற்கரையை விட மிக மிக வித்தியாசமானது ‘ என்றும் கூறுகிறார்.
சீஸபேகே கடற்கரை. திமிங்கலங்களும், சுறாக்களும் போய்விட்டன.
சமீபத்தில் கடற்கரை ஓரங்களில் இருக்கக்கூடிய காட், ஆயிஸ்டர், கடல் ஆமைகள் காணமல் போனதால், கடற்கரை சுற்றுசூழல்கள் அழிந்துவிட்டன என்று இவர் கூறுகிறார்.
பேராசிரியர் ஜாக்ஸன் ஸ்கிரிப்ஸ் கடல் ஆராய்ச்சி மையத்தில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார். இவர் வரலாற்றாசிரியர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள், உயிரியலாளர்கள் போன்றோரை அழைத்து ஒரு வரலாற்று ரீதியான கடல் பற்றிய பார்வையை தேடி ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்.
இவர்கள் பழைய எலும்புகள், கல்லான எலும்பு சிதிலங்கள், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள் போன்றவற்றையும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகள் மூலமும் கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரை எவ்வாறு கடல் சார்ந்த சுற்றுசூழல் மாறி இருக்கிறது என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
கரீப்பியன் கடலில் 4 கோடி ராட்சத பச்சை ஆமைகள் இருந்ததாக ஆராய்ச்சி சொல்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் சீஸபேகே கடற்கரையில் திமிங்கலங்களும், பெரும் சுறாக்களும் அதிக அளவில் வாழ்ந்து வந்தன என்றும் இந்த ஆராய்ச்சி கண்டறிந்திருக்கிறது.
இந்தக் கடற்கரையில் படகு ஓட்டுவதும் கப்பல் விடுவதும் கூட கடினமாகிற அளவுக்கு ஷெல் மீன்கள் இருந்தன. ஆயிஸ்டர் கூட்டங்கள் இந்தக் கடற்கரையில் நிறைந்திருந்தன.
மக்களுக்கு இன்னும் எவ்வளவு இழப்பு நடந்திருக்கிறது என்று தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
‘நூறு வருடங்களுக்கு முன் மைன் மாநிலத்தில் இருந்த காட் மீனின் சராசரி அளவு ஒரு மீட்டர் நீளம் ‘ காட் மீன்கள் இன்று சிறியவை.
இவ்வாறு அதிக அளவில் மீன் பிடிப்பதால், சுற்றுச்சூழல் கேடும், மீன்கள் வாழும் இடங்களின் அழிவும், வியாதிகளும், மனிதன் உருவாக்கும் தட்பவெப்ப மாறுதலும் அதிகரிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வரலாற்று ரீதியான இந்தப் பார்வை, மீண்டும் கடற்கரை ஓரங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், அவைகளை மீட்டெடுக்கவும், கடற்கரைகளை சரியான முறையில் மேலாண்மை செய்யவும் பயன்படும் எனக் கருதுகிறார்கள்.
இந்த ஆராய்ச்சி journal Science. இல் வெளியிடப்பட்டிருக்கிறது
- சிக்காத மனம்
- சேனைக்கிழங்கு பக்கோடா
- பூசணி அல்வா
- புதிய மாஸெரெட்டி கார்
- கிருமிப் போர்முறை (Germ warfare)
- கடலை அழிக்கிறது மனிதக்குலம்
- ஜாதி…
- தனிமை
- தொழில்
- இருக்கிறது..ஆனால் இல்லை…
- நிகழ்வின் நிழல்கள்…..
- காதலும் கணினியும்
- நிலவு ஒரு பெண்ணாகி
- ஒரு அரசியல் பயணம்
- ஜோதிடம் கல்லூரிகளில் சொல்லித்தருவதில் தவறில்லை.
- இந்த வாரம் இப்படி (சூலை 29, 2001)
- ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.
- பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள்