கடலம்மா….
கோவின் – கோச்சா

கடலலைத் தாலாட்டில்
எம் சோகம் தீர்ந்ததுண்டு.
கட்டுமரமேயானாலும்
நீ காத்திடுவாய் என்றே
அகண்ட ஆழ்கடல் சென்று
வாழ்தலின் விடை கண்டோம்…
எமக்கு அனைத்துமாய்
இருந்த உன்னை,
அன்னையாய்
அது தாண்டி,
‘இறை ‘ என்றே கொண்டோம்..
தெய்வமே, கடலே…
ஏன் எம்மை
‘இரை ‘ என்று நினைத்தாய்….
உனை விட்டால்
உயிர் வாழ
யார் எமக்கு உதவுவார்…. ?
சந்தோஷம் முடிந்தபோன
இந்த சுனாமி ஆக்ரோஷம் தாண்டி
உன் மேல் இருக்கும்
நம்பிக்கைத் தளராமல்
இதோ,
கரையிலிருந்து
கட்டுமரத்தை
கடலில் தள்ளிக்கொண்டு….
நாங்கள் –
அப்பாவி மீனவர்கள்….
— கோவின் – கோச்சா —-
gocha2004@yahoo.com