ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue


அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் இருக்கும் அப்பர் பியட்மாண்ட் ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கும் அறிவியலாளர்கள் ஒரே வருடத்தில் 20 அடிக்கு மேல் வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது இதே மரம் இயற்கையில் வளரும் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகம். மற்ற மரங்கள் சாதாரணமாக ஒரு நல்ல வருடத்தில் சுமார் 18 இஞ்சுகளே வளருகின்றன.

பரிசோதனைக்காக பவுலோனியா paulownia என்னும் மரத்தை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இது இயற்கையிலேயே வேகமாக வளரும் சீனா பிரதேச மரம். இதன் மெல்லிய கிளைகள் ஊதா மலர்களால் வசந்தகாலத்தை அழகு படுத்துகின்றன. ஆராய்ச்சியாளர்கள் இந்த மரத்தின் ஏழு வகைகளை வளர்த்தார்கள். இதில் அதிக வேகமாக வளரும் மரம் 18 முதல் 20 அடி உயரம் வளர்கிறது.

கால்நடைக்கழிவு நிலத்தடி நீரையும் மண்னையும் மாசு படுத்துவதை தடுக்க செய்த முயற்சிகளின் போது இந்த மர வகை வெகு வேகமாக வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரத்தின் மிக வேகமான வளர்ச்சியால், இது கால்நடைக்கழிவுகளில் இருக்கும் மாசுகளை உணவாக உறிஞ்சிக்கொள்வதால் நிலத்தடி நீரும் தரையில் செல்லும் நீரும் மாசுபடுவதைத் தடுக்கிறது.

இதுவரை இந்த வகை மரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று திட்டமிடவில்லை. இதற்கான தேவை இல்லை. ஆகவே இந்த வகை மரங்களை வளர்ப்பதில்லை. இந்த வகை மரங்களுக்குத் தேவை இல்லை ஏனெனில் இந்த வகை மரங்களை யாரும் வளர்ப்பதில்லை. ‘ என்று கூறுகிறார் இதனை ஆராய்ந்த டாக்டர் பெர்க்மான்.

இந்த வகை மரங்கள் குறைந்த எடை கொண்ட மரத்தைத் தருகின்றன. இந்த மரம் நாற்காலி போன்றவைகளை செய்யவும் இசைக்கருவிகளைச் செய்யவும் பயன்படுகிறது. இவ்வாறு வெகுவேகமாக வளரும் மரங்கள் பல வகையில் உபயோகப்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

Series Navigation

செய்தி

செய்தி