ஒரு வெங்காயம் விவகாரமான கதை.

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

கோச்சா (எ) கோவிந்த்


பொதுவாழ்வில் தலியிடுவதற்கு முன் பெரிய மைனராய் விளங்கினார் ஈவெரா.

அந்நாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர் நிலாக் காலங்களில், ராமசாமியும், அவர் கூட்டாளிகளும் விலை மாதர் கூட்டத்துடன் காவிரியாற்று மணலுக்கு செல்வர். இரவு முழுதும் ஆற்று மணலில் கூத்தடித்து விட்டு விடியற்காலத்தில் தான் வீட்டிற்கு திரும்புவர்.

இக்கூட்டத்திற்கு ஈவெராவின் வீட்டில் இருந்து தான் சாப்பாடு கொண்டு போக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையாருக்குத் தெரிய கூடாது.

இச்சமயம் தன் மனைவி நாகம்மையின் உதவியாயே நாடுவார் ஈவெரா. அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவன் விரும்பும் உணவுகளை ஆக்கி விடுவார். அந்த உணவுகளை வீட்டு புறக்கடை வழியாக வண்டியேறி காவிரிக்கு போய் விடும்.

வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தனது ஆரியமாயையில் இலக்கியத்து நளாயினியின் வரலாற்றை இழிவாக எழுதிய பெரியாருக்கு அவர் வீட்டில் நாகம்மை வடிவில் வாழ்ந்த நளாயினியைக் கவனிக்க நேரமில்லையா.

எந்த விஷயத்தையும் பகுத்தறிவோடு அணுக வேண்டும் என்று பக்கம் பக்கமாய் கட்டுரை எழுதிய அண்ணா, பின்னர் ஏன் பெரியார் தனது தள்ளாத வயதில் இளவயது பெண்ணை மணந்தார் என்ற ஒரே காரணத்துக்காக தி.கவை முன்னேற்றப்ப் பாதைக்கு கொண்டு செல்ல புதுக்கட்சியைத் தொடங்கினார் ? அப்போழுது பெரியாரின் பகுத்தறிவு, பின் தங்கிய ஒன்று என்பதை அவர் உணர்ந்து விட்டார் என எடுத்துக் கொள்ளலாமா.. ?

—-

இப்படி ஒரு கட்டுரையை ஒரு மாணவர்,((ஆர்.விஜயகுமார், 3ம் ஆண்டு, அரசு கலைக் கல்லூரி குமாரசாமிப் பட்டி சேலம், ))) ஆண்டு விழா மலரில் எழுத,

அது உண்மையா இல்லை கருத்துச் சுதந்திரம் படி எழுத அனுமதி உண்டா என்று எதுவும் எண்ணாமல், அக்கல்லூரி முதல்வர் லட்சுமணன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தை என அன்புடன் அழைக்கப்பட்ட பெரியார்.ஈவெரா பாடுபட்ட கருத்து சுதந்திரம் நாசாகிக்கொண்டிருப்பதன் அடையாளம் தான் இது.

—-

ஒரு வெங்காய கட்டுரை விவகாரமானது இப்படித்தான்.

—-

செய்தி: தினகரன், புதன், 8 செப்டம்பர் 2004

Series Navigation