ஒரு பாதசாரியின் கனவுகள்

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

கே.பாலமுருகன்


கவிதை

கே.பாலமுருகன்

மெல்ல அகன்று
பாதை நெடுகவும்
வளர்ந்திருந்தது
வெயில்

தரையில் சாய்ந்த
நிழல் சாட்சியாகப்
பின்தொடர
கழன்று கொண்டிருந்தது
வெறுமையான
பொழுதுகள்

எங்காவது
தலைச்சுற்றி
விழலாம்

கார் மோதி
சாலையில் புரண்டு
மடியலாம்

தெரிந்தவர் யாரையாவது
பார்த்துக் கடன்
கேட்கலாம்

குறைந்தபட்சம்
மரத்தடியில் அமரலாம்

இப்படி ஏதாவது
நிகழும் தருணத்தில்
என் நிழல்
வெயிலுக்கு அஞ்சி
ஓடியிருக்குமா
என்பதில்தான்
பெருத்த சந்தேகம்

மீண்டும்
பயணம்
தொடரலாம்

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்