ஒரு பதிவை முழுமை செய்கிறேன்

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

மலர்மன்னன்


அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதையைப் பற்றி வெ.சா. எழுதியிருப்பதை திண்ணையில் படித்தேன். அச்சிறுகதை பின்னர் பலவாறு பிரபலமடைந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். முதலில் இலக்கியச் சிந்தனை என்கிற அமைப்பில் முந்தைய மாதத்தின் சிறந்த சிறுகதையாக அது தேர்வு செய்யப்பட்டதையும் வெ.சா. குறிப்பிட்டு அதில் தமக்கு மிகவும் சந்தோஷம் என்று எழுதியிருந்தார். எனது பெரு மதிப்பிற்குரியவரான அவரை அவ்வாறு சந்தோஷப் படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறு கதையை முந்தைய மாதத்துச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்தது நான்தான். பதிவுகள் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை நினைவூட்டலானேன்.

அன்புடன்,
மலர்மன்னன்

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்