ஒரு ஜான் வயிரும் சில கோரிக்கைகளும்.

This entry is part [part not set] of 26 in the series 20020812_Issue

சித்தார்த் வெங்கடேசன்


வானம் ஓர் போருக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது !
வென் மேகங்களும் கருமேகங்களும் தத்தம் படைகளுடன் தயாராய் நின்றன.

தஞ்சையில் ஓர் உழவன்….

‘வென்றுவிடு கருமேகமே வென்றுவிடு.
உன் வெற்றியில் தான் உள்ளது என் வாழ்க்கை.

கண்ணை திற !

பார்,

இப்போது மழையில் நனையாவிடில்
கடனில் மூழ்கப்போகும் என் நிலத்தை.

அழு. நான் சிரிப்பதற்காகவேனும் சிறிது அழு.

குமரியில் ஓர் மீனவன்.

வென்றுவிடு வென்மேகமே ! வென்றுவிடு !

மழை. அடுப்பை அனைக்கும் உயிர்கொல்லி.

வாழ்க்கை கடலில் தத்தலிக்கிறோம் நாங்கள்.
உன் இடியை விட்டு எங்கள் படகை உடைக்காதே.

……..

மனிதா ! இன்னுமா விளங்கவில்லை உனக்கு ?
கோரிக்கைகளை ஏற்பது அல்ல இயற்கையின் வேலை.

நீ என்ன செய்வாய் பாவம்.
ஒரு ஜான் வயிரல்லவா நிர்ணயிக்கிறது,
உன் சொல்லையும் செயலையும்.
***
siddhu_venkat@yahoo.com

Series Navigation