ஏ மனமே கலங்காதே!

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

திருமதி. கற்பகம் சோமசுந்தரம்.


நிரந்திரமில்லாத இயற்கையின் சீற்றத்தை கண்டு கலங்காதே
உன் திறமையில் நம்பிக்கை வை,

வெற்றிக்கு முன் ஏற்படும் தடைக்கற்களை கண்டு கலங்காதே
அதற்கு கிடைத்த பயிற்சிகாலத்தில் நம்பிக்கைவை,

இயற்கையில் ஏற்படும் மாறுதல்களை கண்டு மயங்காதே
உனக்கு கிடைத்த வாய்ப்புகளில் நம்பிக்கைவை,

இருள் நீண்டுவிடும் என்று இருமாந்துவிடாதே
விரைவிலெயே விடியல் வெளிச்சத்தை கொண்டுவரும்,

கடும்பனிக்காலம் நிலைத்துவிடும் என்று நினையாதே
வசந்த காலம் காத்திருக்கு கவலைபடாதே,

உன் வாழ்க்கை விளையாட்டில் தோற்றுவிடுவோமோ என்று வருத்தப்படாதே
ஆண்டவன் இட்டபனிகளை செய்வதாகவே நினை நீ தொலைப்பதற்கு ஒன்றுமில்லை
கலங்காதே மனமே!

skarpag@yahoo.com

Series Navigation

கற்பகம் சோமசுந்தரம்.

கற்பகம் சோமசுந்தரம்.