எப்போதும் முந்துவது…

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

செல்வராஜ் ஜெகதீசன்வழக்கமான தன்

விளையாடுமிடத்தில்

முதல் வண்டியில் என்றும்

முந்தி ஏறும் மகன்

இடைப்பட்ட ஒன்றில்

இன்றைக்கு அமர்ந்தது
முன்னே இருப்பவனை

முழுதாய் பார்க்க என்றான்.

எப்போதும் முந்துவது

என்பதை விடுத்து

மற்றவரைக்

காண்பதென்பதில்

என் வரைக்கும்

ஏக திருப்தி.

o

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி