என்றான், அவன்!

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

எஸ். அர்ஷியா



அடர்மேகத்தைச் சுமந்திருந்த
முன் மாலை வானத்தில்,
கீற்றாய்க் கிளம்பிய மின்னல்
கிளர்த்திவிட்டுச் சென்றது,
அதே போலானதொரு
மழைநாள் மாலையை!

அடித்து ஊற்றிய அழகான மழையில்
தெருவெல்லாம் வெள்ளக்காடு.
நீர்வற்றிய ஆற்றின்
மணல் மடிப்பின் முன்னோட்டமாய்
நீரலைந்து ஓடியது.

தாழ்வார விளிம்பின் நெளிவுகளிலிருந்து
சீராய் வடியும் துளிகளில் கரையும் மனசு,
அலைந்து ஓடும் நீ¡¢ல் கலந்து
சங்கமமானது,
சாக்கடைக் குழியில்!

மழைவெளியில் கைநீட்டி
நீர்ப்பிடித்துத் திரும்பியவள்,
வெப்ப மூச்சில் திணறி,
‘ம்ஹ¥ம்…வேணாம்..வேணாம்…’
என்றது எல்லாம்
முனகலாய் மடிந்தது,
முடிந்துபோன கதை!

……

இன்னொரு மின்னலைத் தொடர்ந்து வந்த
இடியோசை,’என்ன பண்றீங்க?’
கேள்வியுடன் போனது.

வெளியே மழை…
உள்ளே அவள்…
வெப்ப மூச்சு இல்லை.
அவன் வயது :
52 வருஷம், 9 மாதம்,17 நாள்!


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா