என்னை தேடாதே

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

வே பிச்சுமணி



தோள்மேல் வேதாளமாய்
உன் நினைவுகள்
விரட்டுவதற்கான பதில் தெரியாத
விக்கிரமாதித்தியன் போல்

கொடுஞ் சிறையில் தூங்காதிருக்க
தொடர்ந்து முகத்தில் பீச்சி அடிக்கும்
நீர்போன்ற நினைவுகளால்
தூங்காத கைதியாய்

ஒரு கோப்பில் நுழைந்த
கம்ப்யூட்டர் வைரஸ்
தொடர்ந்து பரவி
செயலிழந்த கம்ப்யூட்டராய்

கண்களில் பாருக்கும் பிம்பங்கள்
பதிவாகாமலும்
காதில் கேட்கும் ஒலிகள்
உணரபபடாமாலும்
நெடுஞ்சசாலையில் எங்கே
செல்வதுஎனும் எண்ணமின்றி
செல்கிறேன் ………

நாளை காலை செய்தி தாளில்
ஒரு விபத்தின் காதனாயகனா
என் நிழற்படம் வரக்கூடும்

எதாவது மனநல மருத்துவ மனையில்
உள்நோயாளியாய் என்றாவது
நீ காணக்கூடும்

தொடர் வண்டி நிலையத்தில்
உன்னை கூர்ந்து பார்க்கும்
பிட்சைகாரர்களில் ஒருவனாககூட
நான் இருக்ககூடும்

அழுக்கு பிண்டமாய்
தெருவில் கிடக்கும்
அநாதை பிணமாக கூட
நான் இருக்கலாம்

அதனால் என்னை எங்கும்
தேடாதே தேடாதே
எங்கே செல்வதுஎனும் எண்ணமின்றி
நான் சென்று கொண்டு இருக்


Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி