எதைச் சொல்வீர்கள்?…

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

செல்வராஜ் ஜெகதீசன்ஆசையே துன்பத்துக்கு
காரணம் என்று புத்தன்


ஆசைப்படாதவற்றால் ஆகிவராது
துன்பம் என்பது வள்ளுவன்

பலனை எதிர்பார்க்காதே
பகவான் கீதையில்

இங்கேயே இப்பொழுது
இரு என்று ஓஷோ

பற்றற்று இரு என்று
பலப்பல ஞானிகள்

எதைத் தின்றால்
பித்தம் தெளியும்

என்றிருப்பவனுக்கு
எதைச் சொல்வீர்கள்?


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி