உவமையும் பொருளும்…..2

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E.Mail: Malar.sethu@gmail.com

புலியும் – குருடனும்

புலி ஓர்இடத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வழியிற் சென்ற குருடன் ஒருவன் தூங்குகின்ற புலியின்மேல் இடறி விழுகின்றான். புலியோ விழித்துக் கொள்கின்றது, குருடன் பிழைக்க இயலுமோ? குருடன் பிழைப்பது அ¡¢திலும் அ¡¢து. அந்தக் குருடனைப் போன்று என்னை இகழ்ந்த பகைவர் அழிவர் என்று சோழன் நலங்கிள்ளி,
“”தெள்ளிதிற்
றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ வா¢தே” (புறம்., 73)
தன்னை புலிக்கு உவமையாக்கிப் பாடியிருப்பது பொருத்தமுற அமைந்துள்ளது.

நாகப் பாம்பும் – பகைவரும்

பாம்பு தனக்கு இடையூறு செய்பவருக்கு துன்பத்தைச் செய்யும். அதனால் அது இருக்குமிடததிற்கு யாரும் செல்வதற்கு முயலமாட்டார்கள். நாகப்பாம்பு மணியை உமிழ்ந்து மேயச்சென்றபொழுது அதனையே நினைத்துக் கொண்டிருக்கும். அக்கல்லை எடுக்கமுயல்பவரை நாகப்பாம்பு துன்புறுத்தும், அதனால் நாகரத்தினத்தைத் தேடிச் சென்று நெருங்க யாரும் அஞ்சுவர். அதனைப் போன்றே பெருந்தலைச் சாத்தனா¡¢ன் பாடலில் இடம்பெற்ற தலைவனையும் பகைவர்கள் நெருங்க அஞ்சுவர். இத்தகைய உவமையை,
“போர் லைந் தொருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே” (புறம்., 294)
எனப் புலவர் கூறுகின்றார்.

யானையின் காலடியும் – மூங்கிலின் முளையும்

யானையின் காலடியில் பட்ட வலிய மூங்கிலின் முளையானது சிதைந்து அழிந்துபடும். அதனைப் போன்று தன்னை எதிர்ப்பவரை ஒரு மன்னன் பகைவர் வருந்துமாறு அழித்தொழிப்பான். இதனை,
“மைந்துடைக்
கழைதின் யானைக் காலகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்
வருந்தப் பொரேஎ னாயின்” (புறம்.,73)
என்றபாடல் வாயிலாகப் புலவர் எடுத்துரைக்கின்றார்.

யானையின் அடங்காத சினமும் – கண்களின் சிவப்பும்

புலியுடன் யானை சண்டையிடுகிறது. புலி ஓடிவிட சண்டை முடிவுக்கு வருகிறது. ஆனாலும் யானைக்கு சினம் அடங்கவில்லை. அந்த யானையைப் போன்று பகைவரோடு போர் செய்துவிட்டு அதியமான் தனது புதல்வனைப் பார்ப்பதற்கு நேரடியாக வருகிறான். அதியன் தனது புதல்வனைப் பார்த்தபோதும் பகைவர் மீது கொண்ட சினம் தாளாது அவனது கண்கள் சிவந்து காணப்படுகின்றது. இக்காட்சியை,
“வா¢வயம் பொருத வயக்களிறுபோல
இன்னுமாறாது சினனே யன்னோ
உய்ந்தன ரல்லா¢வ னுடற்றி யோரே
செறுவர் நோக்கியகண்கள்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே” (புறம்., 100)
என்ற பாடலில் உவமை வழி ஒளவையார் விளக்குகிறார்.

நெருஞ்சியினது பூவும் – பாணர்களின் உண்கலமும்

பாழூ¡¢ன்கண் நெருஞ்சியினது பொன்னிறத்தை உடைய பூவானது உதயசூ¡¢யனைக் கண்டு மலர்வதைப் போன்று, பாணர்களது உண்கலம் கொண்கானங்கிழானது மாலையணிந்த மார்பினை நோக்கி மலர்ந்திருக்கும் என்கிறார் மோசிகீரனார். சூ¡¢யனைக் கண்டு நெருஞ்சி மலர்வது போல வள்ளலைக் கண்டு பணர்கள் உணவு பெறுவதற்காகத் தங்களின் உண்கலன்களை ஏந்தி நிற்பர். இத்தகைய உவமையினை,
” பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடா¢னெதிர் கொண்டாஅங்
சிலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்டா ரகல நோக்கின மலர்ந்தே” (புறம்., 155)
என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. இப்பாடலில் புலவர் பாணர்களது வறுமை நிலையை உண்கலத்தைக் கூறி அதன் வாயிலாக விளக்கி இருப்பது சிறப்பிற்கு¡¢யதாக அமைந்துள்ளது.

தாயைக் கண்ட குழந்தையும் – மன்னனைக் கண்ட புலவனும்

வில்லியாதான் சிறந்த வள்ளல். அவனது வள்ளல் தன்மையை அறிந்த புறத்திணை நன்னாகனார், பா¢சில் பெறுவதற்காக அவனைப் பார்ப்பதற்காக ஓடி வருகிறார். பா¢சில் பெறவதற்காக அவர் ஆவலுடன் ஓடி வருவது, தாயிடத்துப் பாலுண்பதற்காகக் குழந்தை தாவி வருவதைப் போன்று உள்ளதாகப் பாடலில் உவமையுடன் புலவர்,
“விண்டோய் தலைய குன்றம் பின்பட
,,,,,,,,,,,,,,,வந்தனென் யானே தாயில்
தூவாக் குழவி போல” (புறம்., 379)
என்ற பாடலில் குறிப்பிடுகிறார். புலவன் தனது வறுமை நீங்க வேண்டும் என்பதற்காக விரைந்து வந்தேன் என்பதைக் குறிப்பிட தாயைக் கண்ட சேய்க்கு உவமை கூறியிருப்பது வியந்து போற்றுதற்கு¡¢யதாக அமைந்துள்ளது.

பழம் கிடைக்காது திரும்பும் பறவையும் – பா¢சில் பெறாது திரும்பும் இரவலனும்

வள்ளலைப் பார்த்து பா¢சில் பெற்று தனது வறுமையைப் போக்கிக் கொள்ளக் கருதுகிறார் புலவர். அவனைப் பார்த்து தனது வறுமையைக் கூறி பா¢சில் கேட்கின்றார். அவனோ பா¢சில் தரவில்லை. தனது வறுமையைக் கூறியும் வள்ளல் பா¢சில் தரவில்லையே என வருந்தி, அவ்வள்ளலைப் பார்த்து, வள்ளலே வானத்தில் நெடுந்தொலைவு பறந்து பழுமரம் நாடிச் சென்ற பறவையினம் அம்மரத்தில் பழங்களைக் காணாது வறிதே வருந்தித் திரும்புவதைப் போன்று நானும் உன்னைக் கண்டுவிட்டுப் பா¢சில் பெறாது திரும்புவதோ? என்று வினவுகின்றார். இந்நிகழ்வு,
“பல்கனி நசைஇ யல்குவிசும் புகந்து
பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போலநின்
நசைதர வந்துநின் னிசைநுவல் பா¢சிலேன்
வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுக” (புறம்., 209)
என்ற பாடலில் இடம்பெறுகின்றது. பா¢சில் பெறாத இரவலனின் நிலைக்குப் பழம் கிடைக்காது வறிதே வருந்தித் திரும்பும் பறவையினத்தை உவமை கூறியிருப்பது மிகவும் பொருத்தமுற அமைந்த ஒன்றாகும்.

குரங்குகளின் செயலும் – பொருநர்களின் செயலும்

வறுமையாளனாக விளங்கும் பொருநன் ஒருவன் பசியால் வாடும் தனது கூட்டத்தாருடன் வள்ளல் இளஞ்சேட்சென்னியை நாடிச் செல்கின்றான். இரக்க குணமுடைய வள்ளல் அவர்களுக்கு ஏராளமான அணிகலன்களை அள்ளித் தருகின்றான். அவற்றைப் பெற்றுக் கொண்ட பொருநனும், அவன் கூட்டத்தாரும் அவைகளை அணியும் முறைமையறியாது தடுமாறி, விரலில் அணிவதை செவியிலும், செவிக்கு¡¢யனவற்றை விரலிலும், இடுப்பில்இருக்க வேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றை இடுப்பிலும் விரைந்து அணிந்தார்கள். இந்நிகழச்சியானது,
சீதையை இராவணன் மண்ணோடு பெயர்த்துக் கொண்டு போனபோது தான் சென்ற வழியை இராமபிரான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சீதை தனது அணிகலன்களை கீழே போட்டபோது அவற்றை விரைந்தெடுத்த குரங்குகள் அவற்றை அணிந்து கொள்ளத் தடுமாறிய நிகழ்ச்சியை உவமையாகக் கூறியுள்ளது போற்றுதற்கு¡¢யதாகும். இதனை,
“அ¡¢க்கூடு மாக்கிணை யி¡¢ய வொற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்தவல்ல மிகப்பல
மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித் தொடக் குநரும்
செவித் தொடர்மரபின விரற்செறிக்குநரும்
மிடற்றமை மரபின வரைக்கியாக்குநரும்
கடுந்தெற விராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வெளவியஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந்தாஅங்
கறாஅவருநகை யினிது பெற்றிகுமே” (புறம்., 378)
என்ற பாடல் தெளிவுறுத்துகிறது.

பாகனின் நிலையும் – புலவா¢ன் நிலையும்

யானையின் உதவியால் பல்லாண்டுகள் சோற்றுக் கவலையின்றி வாழ்கிறான் பாகன். திடீரென்று அப்பெருங்களிற்று யானையானது இறந்துவிடுகின்றது. பாகன் பெருந்துயருறுகின்றான். அவ்யானை தங்கியிருந்த கூடத்தின் கட்டுத்தறி வறிதே நிற்கக் கண்டு கண் கலங்கிச் செயலற்று துன்புறுகின்றான்.அப்பாகனைப் போன்று கோப்பெருஞ்சோழனே எம்மைப் பாதுகாத்த உன்னை இழந்து வாடுகின்றேன். பாகனைப் போன்று இறக்காது நீ இருந்த பழைய உறையூ¡¢ன் மாமன்றத்தைக் கண்டு கண்கலங்கினேன் என்கிறார் பொத்தியார். பாகனும் கவலையடைந்தானே தவிர அதற்காக மாய்ந்திடவில்லை. அவனைப் போன்றே நானும் நிற்கின்றேன். இத்தகைய உவமைப் பொருத்தத்தை,
“பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறிழந்த பைதற் பாகன்
அது சேர்ந்தல்கிய வழுங்கலாலை
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வன் கிள்ளி போகிய
போ¢சை மூதூர் மன்றங் கண்டே” (புறம்., 20)
என்ற பொத்தியா¡¢ன் பாடல் எடுத்துரைக்கின்றது.

தலைவனில்லா இல்லமும் – பயனற்ற ஓடம் – அழகிழந்த மகளிர்

வாழ்வாங்கு வாழ்ந்து பலர்க்கு நிழலாக வாழ்ந்த தலைவன் இறந்துபட்டான். அவன் இல்லத்தின் முற்றம் நீரற்ற ஆற்றில் கிடக்கும் ஓடத்¨ப் போன்று அழகிழந்து காணப்படுகின்றது. இதனை ஆவூர்மூலங்கிழார்,
“முற்றம்
வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
கண்டனென் மன்ற சோர்கவென் கண்ணே” (புறம்., 261)
எனும் பாடலில் தெளிவுறுத்துகிறார்.
தலைவனில்லாத இல்லம் அழகிழந்து காணப்படுகின்றது. அழகிழந்த அவ்வில்லம் கைம்மைக் கோலம் பூண்ட மகளிரைப் போன்று விளங்குவதாகப் புலவர்,
“”வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போலப்
புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே” (புறம்., 261)
என்று குறிப்பிடுவது பொருத்தமுற அமைந்திருக்கின்றது. இப்பாடலில் விதவைப் பெண்களின் அன்றைய நிலைமையை உவமை வாயிலாகப் புலவர் சுட்டிக் காட்டியுள்ளமை நோக்கத்தக்கது.

துன்பச்சூழல் – சோறில்லாப் பானைத் தீ

துன்பம் மிகுந்த சூழலில் வாழ்ந்த புலவர் பெருஞ்சித்திரனார் ஆவார். தனது துன்பச் சூழலின் துயரத்தை,
“அட்ட குழிசி யழற்பயந் தாஅங்
களியர் தாமே யார்க் வென்னா
அறனில் கூற்றந் திறனின்று துணிய” (புறம்., 237)
என்று பாடுகின்றார். பசிமிக்க ஒருவன் சோறுண்பதற்காக, சோறு சமைத்த பானையுள் கையை விடுகின்றான். அந்தப் பானையிலிருந்து சோற்றுக்குப் பதிலாகத் தீ எழுகின்றது. பசிமிக்க அவனின் நிலை எவ்வாறு இருக்கும். அவனுடைய நிலைபோன்று வெளிமானின் உயிரைக் கொள்ளை கொண்டு போகும்போது தனக்கு ஏற்பட்டதாக உவமையின் வாயிலாகப் புலவர் தெளிவுறுத்தியுள்ளார்.

மன்னனை இழந்த மக்கள் – தாயைப் பி¡¢ந்த குழந்தை

எழினி மாய்ந்தான். அவனது நாட்டு மக்கள் தாயைப் பி¡¢ந்த குழந்தை உறவினர் இடந்தோறும் மிகுந்த பசியால் ஓயாது வருந்தி அழுவதைப் போன்று வருந்துகின்றார்கள்.
“ஈன்றோ ணீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றந் தலைத்தலை யினையக்
கடும் பசிகலக்கிய விடும்பைகூர் நெஞ்சமொடு
நோயுழந்து வைகிய வுலகினும்” (புறம்., 230)
என்றமைந்த இப்பாடலில் எழினியைத் தாயாக நாட்டு மக்களுக்கு அ¡¢சில்கிழார் உவமையாகக் கூறுகிறார். மன்னன் மக்களைத் தாய்போல் இருந்து பாதுகாத்தல் வேண்டும் என்ற அறநெறியையும் இவ்வுவமை வழி புலவர் சுட்டிக்காட்டியிருப்பது நினைத்தற்கு¡¢யதாக அமைந்துள்ளது.

துன்பச்சூழலும் – கண்ணில்லா ஊமையின் நிலையும்

பெருஞ்சித்திரனாருக்குத் துன்பத்தில் உழன்று வாடுவதிலும் சாதலே மேலாகப்படுகின்றது. நல்ல மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கின்ற இரவு நேரம். மரக்கலம் ஒன்று கடலில் சென்று கொண்டிருக்கின்றது. அந்நிலையில் மழையின் தாக்கத்தைப் பொறாத மரக்கலம் கவிழ்கின்றது. அந்நிலையில் மரக்கலத்தில் சென்ற கண்ணில்லாத ஊமை ஒருவன் அலைகடலில் சிக்கித் தவிக்கின்றான். குமுறும் நெஞ்சுடன் கரைசேர வழியில்லாது அங்கேயே அமிழந்து இறத்தலைப் போலத் தாமும் துன்பச் சுழலில் சிக்கித் தவிப்பதைவிட இறந்துவிடுதலே நன்று,
“மா¡¢ யிரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞருற்ற நெஞ்சமொ டொரங்குக்
கண்ணிலூமன் கடற் பட்டாங்கு
வரையளந் தறியாத் திரையரு நீத்தத்
தவல மறுசுழி மறுகலிற்
றிவலே நன்றுமன்” (புறம்., 238)
என்று இப்பாடலில் குறிப்பிடுகின்றார். தனது நிலை கண்ணிலா ஊமையனின் நிலையைப் போன்றுள்ளதாக இப்பாடலில் புலவர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
இவ்வாறு புறநானூற்றில் அமைந்துள்ள உவமைகள் வாழ்க்கையில் காணுகின்றவைகளாகவும், வாழ்க்கையின் அனுபவங்களாகவும் அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் தொல்காப்பியர் கூறும் உவமைகளுள் ஒன்றான வினை உவமைகளாக இடம்பெற்றுள்ளன. இவ்வுவமைகள் புலவர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதுடன், அக்கால மக்களின் வறுமையான வாழ்க்கை நிலையை விளக்குவனவாகவும், உவமையும், பொருளும் ஒத்தவையாகவும் இருப்பது சிறப்பிற்கு¡¢யது.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.