உலகப்பண்பாட்டிற்குத் தமிழ் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

மயிலாடுதுறை அ வ அ கல்லூரி


மின்தமிழ் அன்பர்களே, வணக்கம்.

இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர், தமிழ்ச் செம்மொழித் திட்ட நிதி நல்கையில் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இலக்கியங்களின் பங்களிப்பு என்னும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத் திங்கள் 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ.(AVC)கல்லூரி (தன்னாட்சி) நடைபெறுகின்றது. இதில் 78 பேராளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
இந்நிகழ்வில் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நா.கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு பக்தி இலக்கியத்தின் பன்முகம் என்னும் தலைப்பில் கட்டுரை வழங்குகின்றார்.
இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடு அ.வ.அ. கல்லூரித் தமிழாய்வுத் துறை செய்துவருகின்றது.
இவ்விழாவின் தொடக்க நிகழ்வில்(06.03.2008 காலை 10.30)
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ச.அகத்தியலிங்கம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் தொ.பரமசிவம், தமிழ்ச் செம்மொழித் திட்டத் தலைவர் முனைவர் க.இராமசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்விற்கு அ.வ.அ. கல்வி றிறுவனங்களின் செயலர் தமிழ்த்திரு. சொ.செந்தில்வேல் தலைமை தாங்குகிறார். முதல்வர் முனைவர் மு.வரதராசன் வரவேற்புரையாற்றுகின்றார். கருத்தரங்கச் செயலர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றி கூறுகின்றார்.

நிறைவு விழா நிகழ்வில்(08.03.2008 பிற்பகல் 2.30) பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க.திருவாசகம், கவிக்கோ அப்துல்ரகுமான், தவத்திரு ஊரன்அடிகள், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் திரு.எஸ்.இராஜகுமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். முதல்வர் மு.வரதராசன் தலைமை தாங்குகிறார். தமிழத்துறைத் தலைவர் பேரா.சா.கிருட்டினமூர்த்தி வரவேற்புரையாற்றுகின்றார். கருத்தரங்கச் செயலர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றி கூறுகின்றார்.

06.03.2008 மாலை 6.30 மணியளவில் கருத்தரங்கப் பேராளர்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இரவு விருந்து வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வில் முனைவர் கே.ஏ.குணசேகரனின் தமிழ்ப் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்து அனுப்பும் அயல்நாட்டவர்களின் பெயர்கள் கருத்தரங்கின் வாழ்த்துச் செய்திகள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

நன்றி.

தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்Series Navigation

மயிலாடுதுறை அ வ அ கல்லூரி

மயிலாடுதுறை அ வ அ கல்லூரி