உறவென்றால்…

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

பாஷா


துரத்தி வந்தவன் நீ – பின்
தூரபோனவன் நீ!
நான்
விழும்முன்னே என்
வலிகொண்டவன் நீ!
கல்லெறிந்து குளத்தில்
என்பிம்பத்தை நெளியவைத்து
என்னை சிரிக்க வைத்தவன் நீ!
கைவளையல் உடைத்து
கண்ணீர்விட வைத்தவன் நீ!
எங்கிருந்தாலும்
என் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி
சிலிர்க்க வைப்பவன் நீ!
கைமருதாணி சிவப்பை
கன்ன சிவப்போடு காட்டி
வெட்கப்படவைத்தவன் நீ!
வலிகொண்டு கதறும் நேரமெல்லாம்
கோழிகுஞ்சாய் ஒடுங்க
பரந்த மார்பு விரித்தவன் நீ!
என் கவிதை படிக்கவென
என் தாய்மொழி கற்றவன் நீ!
இப்பொழுது எனக்குமட்டும் சொல்
உறவென்றோரு சொல்லில்
நீ யார் ?
நான் யார் ?
—-

Series Navigation

பாஷா

பாஷா