உரை நடையா ? குறை நடையா ? – மா. நன்னன் : நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

அருளடியான்


ஆங்கிலத்தில் வாக்கிய அமைப்பில் ஏற்படும் பிழைகளை திருத்திக் கொள்ள

பல வழிகாட்டி நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் அவ்வாறு வெளிவந்துள்ள

நூல்கள் மிகவும் குறைவு தான். டாக்டர் பொற்கோ, டாக்டர் மா. நன்னன்

போன்ற தமிழறிஞர்கள் தமிழ் உரை நடையில் ஏற்படும் பிழைகளைத்

திருத்திக் கொள்ள வழிகாட்டு நூல்கள் வெளியிட்டுள்ளனர்.

டாக்டர் மா. நன்னன் இந்நூலில், தமிழ் நூல்களிலும், தமிழ்

பத்திாிக்கைகளிலும் மலிந்து காணப்ப்டும் பிழைகளைப் பட்டியலிட்டு, அவற்றுக்கு

சாியான வாக்கியங்க்களையும் கொடுத்துள்ளார். ஒரு மொழியின் இலக்கணத்தைப்

படிக்க, இலக்கண வாய்ப்பாடுகளை மனனம் செய்வதை விட இவ்வழியே சிறந்தது.

சென்னைத் தொலைக்காட்சியில் ‘வாழ்க்கைக் கல்வி ‘ நிகழ்ச்சி நடத்திய

டாக்டர் மா. நன்னன் இதனை அறிந்து வைத்துள்ளார். இவ்வாிசையில் தொடர்ந்து

நூல்கள் வெளியிடப் போவதாக தொிவித்துள்ளார்.

சாய்பாபா தவறிக் கீழே விழுந்தார். இடுப்பு எலும்பில் லேசான காயம்

பலரையும் வீழாது காப்பாற்றுபவராகக் கூறப்படுபவர் சாய்பாபா.

ஆதலால் அவர் கீழே விழ நேர்ந்தால் எலும்பிலும் காயம் ஏற்படும் போலும்.

நம் போன்றவர்கள் விழ நேர்ந்தால் எழும்பில் முறிவு, சிதரல், பிளப்பு

போன்றனவே ஏற்படும். காயம், புண் ஆகியவை எலும்பில் ஏற்பட மாட்டா.

(இந்நூலின் பக்கம் 50-51)

டாக்டர் மா. நன்னன் தன் எழுத்து வன்மையால் நமக்கு சோர்வு ஏற்படாமல் பாடம்

கற்பிக்கிறார். இவரது நூல்கள் தமிழ் நாட்டு பள்ளிகளில் பாடமாக்கப்பட

வேண்டும். தமிழக அரசு டாக்டர் மா. நன்னன் அவர்களின் நூல்ளுக்கு ஒரு

பெருந்தொகை அரசுடைமையாக்கி, அவர் வாழும் காலத்திலேயே சிறப்பிக்க

வேண்டும்.

இந்நூலில் டாக்டர் மா. நன்னன் பட்டியலிட்டுள்ள இலக்கணப் பிழைகளில்

தமிழின் முன்னணி நாளிதழ்களின் பிழைகளும் அடங்கும். இவர் இணைய

இதழ்களின் பிழைகளையும், இலக்கியச் சிற்றிதழ்களின் பிழைகளையும்

பட்டியலிட்டால் ஒரு வேளை ‘பிாிட்டானிகா கலைக்கலஞ்சியம் ‘ அச்சுத்

தொகுப்பை விட பொிய அளவில் ஒரு நூல் கிடைக்கக் கூடும். இது

எழுத்தாளர்கள், பத்திாிக்கையாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், மாணவர்கள்

ஆகிய அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல்: உரை நடையா ? குறை நடையா ?

ஆசிாியர்: மா. நன்னன்

வெளியீடு: ஏகம் பதிப்பகம் (Yegam Pathipagam)

முகவாி: த. பெ. எண் 2964

3 பிள்ளையார் கோயில் தெரு

2ஆம் சந்து முதல் மாடி

திருவல்லிக்கேணி

சென்னை-600 005

தொலைப் பேசி: 2852 9194

விலை: ரூ. 50

—-

aruladiyan@yahoo.co.in

Series Navigation

அருளடியான்

அருளடியான்