உன் முயற்சி தொடரட்டும்
புஷ்பா கிறிஸ்ரி

நீ உழைத்து
உயரவில்லையா ?
உழைப்பை மறவாதே!
நீ விதைத்து
முளைக்கவில்லையா ?
விதைப்பதை விட்டுவிடாதே!
உன் மூளையும்
செயற்படவில்லையா ?
சிந்தனையை விட்டு விடாதே!
நீ கேட்பதுவும்
கைகூடவில்லையா ?
கேட்பதை விட்டு விடாதே!
நீ நினைப்பதுவும்
நடக்க மறுக்கிறதா ?
நினைவையும் நிறுத்தாதே!
நம்பிக்கை உன் வாழ்வை
நல்லபடி நகர்த்தட்டும்
நல்லவைகள் நிச்சயமாய்
உன் வாழ்வில் நிகழட்டும்
முயன்று செயற்பட்டால்
முற்றிலும் வெற்றியென்று
சொல்லித் தந்த
பெரியவர்க்குச் சொல்லிவிடு
தவறு எனதல்ல..
தவறல்ல, அவர்
தந்த கருத்து
வள்ளுவனோ, ஒளவையோ
எந்த அறிஞனோ ?
உன் முயற்சி தொடரட்டும்..
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com