உதிரிகள் நான்கு

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

ஜி.எஸ்.தயாளன்1
குழந்தை
ஊருக்குப் போயிருப்பதால்
வெறிச்சோடிக் கிடப்பது
வீடா . . . மனசா . . .

2

முழுப் போலி நான்
ஆஹா
நிஜமானேன்

3
உன்னைப் பற்றி
எதாவது எழுதியே ஆக வேண்டும்
எழுதும் படியாக எதுவும்
தோன்றவில்லை என்பதையேனும்

4
நடந்து கொண்டிருக்கும் போது
சமீபத்திலோன்றும் கேட்டு ஞாபகமில்லாத
ஏதேனும் ஒரு
பழைய சினிமா பாட்டை
முணுமுணுக்கிறது வாய்
ஏனந்த நேரத்தில்
ஏனந்தப் பாட்டு

gsdhayalan@gmail.com

Series Navigation

ஜி.எஸ். தயாளன்

ஜி.எஸ். தயாளன்