உணர்வுகள்
வைகைச் செல்வி

கங்குகள்
உள்ளுக்குள்
உறைந்திருக்கும்.
திடீரென்று பற்றி
எரியும்.
அலைகள்
எழுந்து
கரையை
உடைக்க
புரண்டு புரண்டு
ஓலமிடும்.
மின்னலடிக்கும்
ஓர் இரவில்
மழை வரப் பார்க்கும்
வேளையில். . . .
எங்கோ ஒரு
இடியோசையில்
எங்கோ ஒரு
குதிரை
கயிற்றை அறுத்து
வேலியைத் தாண்டும்.
++++++++
அனுப்பியவர்: சி. ஜெயபாரதன், கனடா