உடலால் கட்டிய வாழ்வு

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

பா. சத்தியமோகன்


யாவர்க்கும் இருக்கிறது
உடலால் கட்டிய வாழ்வு

யாவரையும் இன்பித்துப் பிறகு
கட்டி விடுகிறது உடல் வாழ்வு

‘தினைத்துணையேனும் பொறேன் ‘
கூறிப் புலம்பினார் மணிவாசகப் பெருமான்

‘துயர் ஆக்கையின் திண்வலையே ‘
மெய்ப்பிக்கிறது வாழ்வு இதையே

என்ன செய்யலாம் ?
தனித்துணையாய் நீ நிற்க
தருக்கித் தலையாய் நடந்த
வினைத்துணையேனை
விடுதி கண்டாய் என்று இறைஞ்சுவோம்

மனத்துணையே
எந்தன் வாழ்முதலே
எனக்கு எய்ப்பில் வைப்பே

இறைஞ்சுவோம்
வேண்ட வேண்டத்தான் இறைவன் வருவான்
உடலால் கட்டிய வாழ்வை பரிசீலிப்பான்

****
cdl_lavi@sancharnet.in

Series Navigation