இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

வே.சபாநாயகம்.1. எழுதுவதற்கென்று ஒரு நேரம் என்றெல்லாம் எனக்குக் கிடையாது.
காகிதத்தில் பேனாவை வைத்தால், கதை (அ) சிந்தனை முற்றும்வரை
எழுதிக்கொண்டே இருப்பேன்.

2. எழுதியதை முழுமையாகப் படித்துப் பார்த்து சரி செய்வேன்.
கதையின் கருவைப் பொறுத்தே தலைப்புக் கொடுப்பது வழக்கம்.

3. எனது ‘ஒரே ஒரு வார்த்தை’ என்ற கதையைப் படித்துவிட்டு என்
அப்பாவின் நண்பர் ஒருவர், ‘இது என்ன குறிக்கோளே இல்லாம,
சோம்பேறித்தனத்தை வளக்கிற கதை’ என்று விமர்சனம் செய்ய
எனக்கு முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அப்புறம் உடனேயே
‘வாழ வழி இருக்கிறதைப் பத்தியும், பிரச்சினையில்லாத வாழ்க்கையப்
பத்தியும்தான் நிறையப்பேர் சொல்லியிருக்காங்களே அதனாலே நான்
யதார்த்த வாழத் தெரியாத பிரச்சினை பற்றி சொன்னேன்’ என்றேன்.
ஏற்றுக் கொண்டார்.

வாசந்தி:
——
4. தன்னுடைய எழுத்தாற்றல் தனது சாதனை என்று நினைக்காமல்
ஆண்டவனின் வரப்பிரசாதமாகவே அவர் கருதினார்.

5.அவர் எழுதிய பல சிறுகதைகள் தாமாக எழுதிக் கொண்டவை,
ஒரு தரிசனம் போல என்று வியப்புடன் விவரிப்பார். அருளின்
குரலாகவே அவருக்குப் பட்டது.

6.அவருடைய முதல் கதை (கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது
பரிசு பெற்றது) ‘அங்கையற்கண்ணி’யின் ரிஷிமூலமும் ஏதோ அனுபூதி
கிடைத்து எழுதியதாகச் சொன்னது சிறு வயதில் எனக்கு ஆச்சரியமாக
இருக்கும்.

7. எழுதும் காலங்களில் ஓய்வில்லாமல் எழுதுவார், ஆட்கொண்டவர்
போல. முற்றத்தை ஒட்டிய தாழ்வாரம் அவருக்குப் பிடித்த இடம்.
எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து எழுதுவார். சிலசமயம்
சுவரில் சாய்ந்து நின்றுகூட எழுதுவதாகச் சொல்வார். அவர் எழுதிக்
கீழே போடும் ஒரு பக்கத் தாளை பிறகு அவரது கணவர் அழகாக
அடுக்கி பக்கம் மாறாமல் சேர்த்து வைப்பார். அவரது வேகம் பிரமிப்பை
ஏற்படுத்துவதாகத் தோன்றும்.’அவ எழுதல்லே.ஏதோ ஒரு சக்தி
அவளுக்குள்ளே பூந்து எழுதறது’ என்று கணவர் ஒருமுறை சொன்னார். 0

Series Navigation