இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

பேர்லின் ராகவன்


யேர்மனியில் வழங்கப:படும் ஆகன் சமாதானப் பாிசு (Aachen Peace Prize 2002) இம்முறை பார்பரா லீ (Barbara Lee), பெர்ன்கார்ட் நொல்ஸ் (Bernhard Nolz) என இருவருக்கும் கொடுக்கபபட்டுள்ளது. இவர்களிருவரும் செப்டம்பர்11 தாக்குதலையடுத்து இராணுவாீதியிலான பழிவாங்கலுக்கெதிராக தமது கருத்தை உரத்துக் கூறியவர்களாவார்கள்..

செப்டம்பர்11 தாக்குதலின் பின்னர் நிலவிய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். உலகம் நல்லது, தீயது என இர ண்டாகப் பிாிக்கப்படுகிறது. அமொிக்காவிற்கு ஆதரவானவர்களெல்லோரும் நல்லவர்களாகவும், ஏனையோர் தீயவர்களாகவும் இலகவாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழ்நிலையில் அமொிக்க அதிபர் புஸ பயங்பரவாதத்திற்கு எதிரான இராணுவ தாக்குதலை ஆரம்பிப்பதற்கு தயாரானார். இதுதொடர்பான காங்கிரஸ்சபையின் வாக்கெடுப்பின் போது 421 பிரதிநிதிகளில், பார்பரா லீ என்ற ஒருவர் மட்டுமே தனித்து இராணுவப் பழிவாங்குதலை விமர்சித்ததோடு எதிர்த்தும் வாக்களித்தார். இதனால் இவர் அமொிக்க நலனிற்கு எதரான காட்டிக்கொடுப்பவர் எனத் துாற்றப்பட்டார். அத்தடன் கொலை மிரட்டலுக்குமாளாகினார்.

யேர்மனியில் ஒரு ஆசிாியரான பெர்ன்கார்ட் நொல்ஸ், ஊர்வலமொன்றில் மாணவர் மத்தியில் உரையாற்றும்போது போர்நடவடிக்கையையும் அமொிக்காவின் ஆயுதகொள்கைகளையும் விமர்சிக்கின்றார். இதனையடுத்து பாடசாலை நிருவாகத்தால் கண்டிக்கப்பட்டு 11 வாரங்களுக்கு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் அதன்பின் தொலைவிலுள்ள பாடசாலைக்கும் மாற்றப்படுகிறார். பத்திாிகைகளும் இவரைக் கண்டிக்கின்றன.

செப்டம்பர்11 தாக்குதலையும் அதன்மனித அழிவுகளையும் இவர்கள் யாரும் ஆதாிக்கவில்லை. ஆனால் இதனையடுத்து அமொிக்கா, அய்ரோப்பிய நாடுகளில் உருவாகிய ஃ உருவாக்கப்பட்ட அதித உணர்ச்சிகரமான சூழ்நிலையில் நடைபெறக்கூடிய பழிவாங்கலையும் அரசியலையுமே இவர்கள் எதிர்த்தனர். போர்களிலே கொல்லப்பட போகின்ற சாதாரண மக்களுக்காகவே இவர்கள் குரல் கொடுக்கின்றனர். அரசாங்கங்களும், பெரும்பான்மை தொடர்புச் சாதனங்களும், அந்நேரங்களில் பெரும்பான்மை மக்களும்கூட இவர்களுக்கு எதிராக இருந்தாலும்கூட இவர்கள் துணிவுடன் உலக சமாதானத்திற்கான, அமைதிக்கான தமது கருத்தைக் கூறினர். இதற்காக தொடர்ந்தும் செயல்பட்டும் வருகின்றனர்.

அதன்பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்றன. அமொிக்கா முன்பு தலிபான்களை வளர்த்து விட்டதுபோல், தலிபான்போல மோசமான குழுக்களிடமே இன்று ஆப்கான் மக்களை விட்டுள்ளது. இப்போது ஈராக் மீதான தாக்குதலுக்கான போர் ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. நியுயோர்க்கில் கொல்லப்பட்டதைவிட ஆப்கானிஸ்தான் போாில் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு என்னபதில் சொல்வது ? வேவ்வேறு நாட்டு மனிதர்கள்பாலான இவ்வாறான இருவேறு நீதிமுறை அளவுகோல்களையிட்டு யார் பேசுகின்றனர் ?

மனிதர்களுக்கும் , இனங்களுக்குமிடையே ஒற்றுமையையும் புாிந்துணர்வையும் ஏற்படுத்தப் பாடுபடுபவர்க்காக 1988இலிருந்து வருடாவருடம் இச்சமாதானப்பாிசு வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற ஆண்டு அணுஆயுத எதிர்ப்பாளரான யப்பானியரான காசுஓ சோடாவிற்கும், யேர்மனியிலுள்ள அரசுசார்பற்ற அகதிகள் ஆதரவு அமைப்பான ீசுழுயுளுலுடு இற்கும் வழங்கப்பட்டன. 1994ல் இந்திய உபகண்டத்தில் சிறுவர்உழைப்பு மற்றும் அடிமைமுறைக்கெதிராக போராடும் அமைப்பைச் சேர்ந்த இந்தியரான கைலாஸ் சத்யார்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. வழங்கப்படுவது சிறுதொகையேயெனினும், சமூகஅக்கறையுடன் துணிவுடன் செயற்படுவோருக்கு இதுவொரு அங்கீகாரமாகும்.

Series Navigation